For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மாரத்தான் போட்டியில் பங்கேற்றப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள்!

  |

  ஒரு போட்டியில் பங்கேற்று தோற்றுப் போவதை விட வலி மிகுந்தது என்ன தெரியுமா? போட்டியில் பங்கேற்கவே உங்களுக்கு தகுதியில்லை என்று உங்களை பங்கேற்க விடாமல் தடுப்பது தான். அதைவிட உங்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உங்களை போட்டியில் பங்கேற்க விடாமல் மிகப்பெரிய திட்டமே வகுக்கப்படுகிறது என்பதை அறிந்தால் என்ன செய்வீர்கள்?

  இங்கே அப்படிப்பட்ட ஒர் வரலாற்று சம்பவத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள். போட்டியில் பங்கேற்க கூடாது அதற்கு ஏற்பாட்டாளர்கள் சொன்ன ஒரே காரணம். நீ ஒரு பெண்! ஒரு பெண்ணாய் இருந்து கொண்டு எப்படி இது போன்ற போட்டிகளில் எல்லாம் பங்கேற்க முடியும் உன்னால் இதில் பங்கேற்கவே முடியாது என்று உறுதியாக இருந்திருக்கிறார்கள். அன்றைய தினம் எப்படியிருந்தது என்ன நடந்தது என்பதைப் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  அப்பா :

  அப்பா :

  இந்த சம்பவம் நடப்பது 1960களில் அப்போது அந்த சிறுமிக்கு பன்னிரெண்டு வயது விளையாட்டு என்றால் சிறுமிக்கு தனிப்பிரியம் எப்போதும் கிரவுண்டில் இருக்க வேண்டும் என்றே இவளுக்கு விருப்பமும் கூட.

  பள்ளியில் ஹாக்கி விளையாடுவதைப் பார்த்து சிறுமிக்கும் ஹாக்கி விளையாட வேண்டும் என்று ஆசை தன் ஆசையை அப்பாவிடம் சொன்னாள்.... நீ தினமும் ஒரு மைல் தூரம் வரை ஓட்டப் பயிற்சி எடுத்துக் கொள்.... நீ நிச்சயமாக ஹாக்கி குழுவில் இடம் பெறுவாய் என்று சொல்கிறார்.

  மகளும் நம்பிக்கையுடன் ஓட்டப் பயிற்சியை தொடர்கிறார்.

  Image Courtesy

  ஓட்டம்... :

  ஓட்டம்... :

  அப்பா சொன்னது போலவே பயிற்சியை ஆரம்பித்த ஒரு வருடத்தில் அந்த சிறுமிக்கு ஹாக்கி குழுவில் இடம் கிடைக்கிறது. இருந்தும் சிறுமி தன்னுடைய ஓட்டப் பயிற்சியை நிறுத்தவில்லை. தொடர்ந்து ஓட்டப்பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கிறார். காலப்போக்கில் தனக்கு விருப்பமான துறை என்று நினைத்துக் கொண்டிருந்த ஹாக்கியைக் காட்டிலும் ரன்னிங்கில் அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்.

  ஒரு கட்டத்தில் இந்த ஓட்டம் தான் தன்னுடைய வாழ்க்கையாக இருக்கும் என்று ஏற்றுக் கொள்கிறார்.

  Image Courtesy

  மாரத்தான் :

  மாரத்தான் :

  அந்த சிறுமியின் பெயர் கேத்ரீன் ஸ்விட்சர். 1967 ஆம் ஆண்டு இருபது வயதான கேத்ரீன் சிராக்யூஸ் என்ற பல்கலைக்கழகத்தில் ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் போஸ்டான் மாரத்தான் போட்டி அறிவிக்கப்படுகிறது. சுமார் 26 மைல்கள் ஓட வேண்டும்.

  இதில் பங்கேற்க நினைக்கிறார் கேத்ரீன்.

  Image Courtesy

  தடை :

  தடை :

  மாரத்தான் போட்டியில் பங்கேற்கப்போகிறேன் என்று தன் நண்பர்களிடத்தில் சொல்லும் போதே சிலர் ஏளனமாக சிரிக்கிறார்கள். உன்னால் எப்படி முடியும்? 26 கி.மீ வரை ஓட வேண்டும் ஒரு பெண்ணாக அது உன்னால் செய்யவே முடியாது என்று அவர்களே உறுதியாக தீர்மானிக்கிறார்கள்.

  ஏளனப் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் கேத்ரீன் மனதில் இந்தப் போட்டியில் பங்கேற்று ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது.

  Image Courtesy

  அந்த நாள் :

  அந்த நாள் :

  போட்டி நடக்கிற நாளும் வந்தது. கேவி ஸ்விட்சர் என்ற பெயரில் தன்னை பதிவு செய்து கொண்டார். எங்கே கேத்ரின் என்ற பெயரைச் சொன்னால் பெண்ணென்று தெரிந்து போட்டியில் பங்கேற்க அனுமதியளிக்கமாட்டோர்களோ என்று நினைத்தவர் தன்னுடைய பெயரை இப்படி பதிவு செய்து கொண்டார். பங்கேற்பாளர்கள் எல்லாருக்கும் தனி எண் வழங்கப்பட்டது .

  ஸ்விட்சர் என்று தன்னுடைய பெயரை வழங்கியமையால் கேத்ரீன் குறித்து அங்கிருப்பவர்களுக்கு குறிப்பாக இந்த போட்டியின் ஏற்பட்டாளர்களுக்கு தெரியவில்லை.

  Image Courtesy

  வரலாறு :

  வரலாறு :

  இதுவரை தன்னை அவமானப்படுத்தியவர்கள் முன்பாக வெற்றிக் கோப்பையுடன் திரும்ப வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் களத்தில் நின்றிருந்தார். போட்டி துவங்கியது, எல்லாரும் ஓட ஆரம்பித்தார்கள். கேத்ரீனும் அவர்களில் ஒருவராக ஓடுகிறார். சில மைல்கள் ஓடிய நிலையில் கேத்ரீன் ஒரு பெண் என்பது உடன் பயணிக்கிற போட்டியாளர்களுக்கு தெரியவருகிறது.

  உடனே அங்கே சலசலப்பு. இந்தப் போட்டியில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதியே இல்லை நீ எப்படி பங்கேற்கலாம் உடனடியாக களத்தை விட்டு வெளியே போ என்கிறார்கள்.

  Image Courtesy

  நீ ஓடிக் கொண்டேயிரு.... :

  நீ ஓடிக் கொண்டேயிரு.... :

  கேத்ரீன் யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை தொடர்ந்து ஒடிக் கொண்டிருக்கிறார். உடனே விஷயம் போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்கள்.

  மேடம், இந்தப் போட்டி 26 கி.மீ தூரம் வரை ஓட வேண்டும். ஒரு பெண்ணால் இது சாத்தியமே இல்லை அதனால் நீங்கள் போட்டியிலிருந்து விலகி விடுவது தான் நல்லது என்று சொல்கிறார்கள். இல்லை என்னால் முடியும். நான் நிச்சயமாக பந்தய தூரத்தை கடப்பேன் என்கிறார் கேத்ரீன்.

  Image Courtesy

  261 :

  261 :

  கேத்ரீனுக்கு வழங்கப்பட்ட எண் 261 . அதைத் தான் தன் சட்டையில் ஒட்டிக் கொண்டிருந்தார் அந்த எண்ணை எப்படியாவது பறித்துவிட வேண்டும் இவர் முறைகேடாகத்தான் இதில் பங்கேற்றார் என்ற பெயரினை வாங்கி கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தவர்கள் சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள். சட்டையில் ஒட்டியிருந்த அந்த எண் அடங்கிய ஸ்டிக்கரை பிய்க்க வருகிறார்கள்.

  தடுமாறி கீழே விழச் செய்யும் விதமாக இடிப்பது,காலை இடறிவிடுவது என பல வகைகளிலும் கேத்ரீனுக்கு தொல்லைக் கொடுக்கிறார்கள். மனரீதியாக சோர்வுறச் செய்ய கேத்ரீனை மிகவும் கடுமையான வார்த்தைகளால் திட்டுகிறார்கள்.

  Image Courtesy

  நான் இருக்கிறேன் :

  நான் இருக்கிறேன் :

  போட்டியில் கேத்ரீனாவுடன் அவரது ஆண் நண்பரும் பங்கேற்கிறார். நீ உன் இலக்கினை நோக்கி ஓடு கேத்ரீன் என்று சொன்னதோடு அவருக்கு பின்னால் பாதுகாவலனாக ஓடி வருகிறார். பிறர் அவரை தாக்க முற்படும் போதெல்லாம் இடையில் புகுந்து அதனை தடுத்து பயண இலக்கினை கேத்ரீன் வெற்றிகரமாக முடிக்க துணை நிற்கிறார்.

  ஒரு வழியாக வெற்றிகரமாக தன் பயண தூரத்தை 4 மணி நேரம் இருபது நிமிடங்களில் கடந்து மிகப்பெரிய வரலாற்று சாதனையை நிறைவேற்றினார். போட்டியின் போது தன்னை ஓட விடாமல் தடுத்த புகைப்படங்கள் மறுநாள் செய்தித்தாள்களில் கேத்ரீனாவைச் சுற்றி ஆண்கள் ஓட விடாமல் தடுக்கும் புகைப்படங்கள் வெளியாகின இது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

  Image Courtesy

  ஒரே குறிக்கோள் :

  ஒரே குறிக்கோள் :

  என்னைச் சுற்றியும் என்னை விட உயரமான வலுவான ஆண்கள் நின்றிருந்தார்கள். மோசமான வார்த்தைகளா திட்டினார்கள் என்னைப் பார்த்து பல்லைக் கடித்தார்கள்,மிரட்டினார்கள்,தடுமாறி விழச் செய்தார்கள். எனக்குத் தெரியும் பலரது எதிர்ப்புகளையும் மீறி இந்த போட்டியில் பங்கேற்கிறேன் ஒரு கணம் என கவனம் சிதறி என் குறிக்கோளிலிருந்து விலகினாலும் நான் விழுந்துவிடுவேன்.

  என்னுடைய தோல்வியைத் தான் இவர்கள் எல்லாரும் எதிர்ப்பார்க்கிறார்கள், விரும்புகிறார்கள். நான் மட்டும் தோற்றுவிட்டால் பெண்களின் இயலாமை..... பெண்களால் இந்த போட்டியில் பங்கேற்க முடியாது என்பது தான் உண்மை என்றாகிடும் என்பதால் உயிரைக் கொடுத்தாவது பந்தய தூரத்தை கடந்தாக வேண்டும் என்று வைராக்கியத்துடன் வெற்றி தூரத்தை கடந்தேன் என்கிறார் கேத்ரீன்.

  Image Courtesy

  பயன்படுத்த தடை :

  பயன்படுத்த தடை :

  இந்த நிகழ்வு ஊடகங்களில் வெளியாகி பலத்த பேசுப் பொருளாய் மாறியது. பெண்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்க ஆர்வம் காட்டினார்கள். கேத்ரீன் ஓடிய அதே ஆண்டு பாபி கிப் என்ற பெண்மணியும் ஓடினார் ஆனால் இவர் பெயர் பதிவு செய்யப்படவில்லை. கேத்ரீன் பெயர் தான் அவர் பெயரை மாற்றி ஆண் பெயராக கொடுத்ததினால் பதிவு செய்யப்பட்டு எண்ணும் வழங்கப்பட்டிருந்தது.

  இந்த சம்பவத்திற்கு பிறகு கேத்ரீனுக்கு வழங்கப்பட்ட 261 என்ற எண் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த எண் யாருக்கும் வழங்கப்படவில்லை.

  Image Courtesy

  58% :

  58% :

  இந்த சம்பவம் நிகழ்ந்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு 1972 ஆம் ஆண்டு, பெண்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் ஒலிம்பிக் மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்க ஆரம்பித்தார்கள்.

  இன்றைக்கு அமெரிக்காவில் மாரத்தான் போட்டிகளில் ஓடுகிறவர்களில் 58 சதவீதத்தினர் வரை பெண்கள் தான். இதற்கு ஆரம்பப்புள்ளியாக இருந்தவர் கேத்ரீன்.

  Image Courtesy

  50 ஆண்டுகள் :

  50 ஆண்டுகள் :

  இந்த போஸ்டன் மாரத்தான் நிகழ்வின் 50வது ஆண்டுவிழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்தப் போட்டியில் 1967 ஆம் ஆண்டு வரலாற்று சாதனை படைத்த கேத்ரீனும் பங்கு கொண்டார். 70 வயதிலும் சுறுசுறுப்பாக மாரத்தான் போட்டியில் பங்கேற்ற கேத்ரீன் 1967 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டு அதன் பிறகு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த 261 என்ற எண்ணையே தனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றுக் கொண்டார்.

  சரியாக நான்கு மணி நேரம் 44 நிமிடங்களில் பந்தையத் தூரத்தை அடைந்தார் கேத்ரீன். தன்னுடைய 20 வயதிற்கும் இப்போதும் பந்தைய தூரத்தை கடக்க 24 நிமிடங்கள் தான் வித்யாசம். 261 ஃபியர்லெஸ் என்ற பெயரில் பெண்களுக்கான ஓட்டப்பயிற்சி மையத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார் கேத்ரீன்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Story About First Women Who Participate In Marathon

  Story About First Women Who Participate In Marathon
  Story first published: Thursday, May 3, 2018, 14:31 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more