வெயில்காலத்தில் ஐஸ்வாட்டரும் குளிர்காலத்தில் வெந்நீரும் வரும் அருவி

Written By: manimegalai
Subscribe to Boldsky

இயற்கை எப்போதுமே நமக்கு ஏராளமான சுவாரஸ்யங்களை அள்ளக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. மனிதனுக்கு எப்போதுமே இந்த உலகத்திலேயே தான் தான் உயர்ந்தவன் என்றும் இந்த உலகமே நம்மால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைப்பார்கள்.

hot waterfalls in italy

ஆனால் உண்மை அது அல்ல. இந்த உலகத்தில் மனிதனைத் தாண்டி ஏராளமான ஜீவராசிகள் இந்த உலகை இயங்கச் செய்து கொண்டிருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

இந்த உலகம் மனிதனால் துளியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல்லாயிரம் கோடிக்கணக்கான அதிசயங்களும் விநோதங்களும் நிரம்பிக் கிடக்கின்றன.

அதில் சிலவற்றைக் கேட்டாலே நம் தலை சுற்றும். சில விநோதங்கள் நம்மை வாய் பிளக்க வைக்கும்.சில எரிச்சலூட்டும். சில விநோதங்கள் பயமுறுத்தும். சில மனதுக்கு குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.

#2

#2

ஆனால் சிலவோ நம்முடைய கற்பனைக்கு எட்ட முடியாத அதிர்ச்சியைத்தருவதாக அமையும்.

அப்படி உலகின் பல்வேறு இடங்களிலும் எண்ணற்ற அதிசயங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தக் காத்திருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

தலைகீழ் நீர்வீழ்ச்சி

தலைகீழ் நீர்வீழ்ச்சி

ஹானலூனாவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சி மேலிருந்து தண்ணீர் கீழ்நோக்கிப் பாயாமல் புவியீர்ப்பு விசையையும் தாண்டி, கீழிருந்து மேல்நோக்கிப் பாய்கிறது.

இதுபோன்ற அதிசயங்கள் வெளிநாடுகளில் மட்டும்தான் இருக்குமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் மஹாராஷ்டிரா மாநிலத்திலும் இதுபோன்றதொரு தலைகீழ் நீர்வீழ்ச்சி இருக்கிறது.

கரையான் புற்று

கரையான் புற்று

உலகின் மிகப்பெரிய கரையான் புற்றுகள் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஆப்பிரிக்காவில்உள்ள சில கரையான் புற்றுகள் 30 அடி உயரத்துக்குக்கூட இருக்கின்றன. இதுபோன்றதொடு ராட்சதக் கரையான் புற்றுகளை இதற்கு முன்னதாக நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.

வெயிலில் ஐஸ்வாட்டர் குளிரில் ஹாட் வாட்டர்

வெயிலில் ஐஸ்வாட்டர் குளிரில் ஹாட் வாட்டர்

உலகின் மிக அழகிய இடங்களில் இத்தாலியும் ஒன்று. இங்கு அழகு மட்டுமல்ல ஆச்சர்யங்களும் கொட்டித்தான் கிடக்கின்றன. நல்ல வெயிலில் ஐஸ் போன்ற குளிர்ந்த நீரிலும் குளிர்காலத்தில் வெதுவெதுப்பான நீரிலும் குளித்துக் கொண்டே இருப்பது எவ்வளவு சுகமான விஷயம்.

இத்தாலி நாட்டில் உள்ள ஆர்மினியா என்னும் அருவி ஒன்றில் மார்ச் மாதத்தில் நல்ல குாடைகாலத்தில் ஜில்லென்று ஐஸ் கட்டிபோல தண்ணீர் கொட்டுமாம். அதே அருவியில் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் குளிருக்கு இதமாக வெதுவெதுப்பான நீர் வருமாம்.

எதிர்திசையில் பாயும் நதி

எதிர்திசையில் பாயும் நதி

நைல்நதி பற்றி நாம் எல்லோரும் நிச்சயம் கேள்விப்பட்டிருப்போம். நைல் நதிதான் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் உலக நாகரிகம் தோன்றி வளர்ந்தது என்று சொல்வார்கள். அதில் வேறு என்ன விநோதம் இருக்கிறது என்றுதானே கேட்கிறீர்கள்?... உலகில் உள்ள எல்லா நதிகளும் நிலநடுக்கோட்டை நோக்கித்தான் பாய்கிறது. ஆனால் நைல் நதி மட்டும்தான் நிலநடுக்கோட்டுக்கு எதிராகப் பாய்கிறது.

ஆண்டுக்கு 100 நாள் இருளில் மூழ்கும் பகுதி

ஆண்டுக்கு 100 நாள் இருளில் மூழ்கும் பகுதி

ஒரு நாளைக்கு 12 மணி நேரம் இருளில் இருப்பதே நமக்கு எப்போதும் விடியும் என்றிருக்கிறதே 24 மணி நேரமும் சூரியன் உதிக்காமல் இருளில் இருந்தால் எப்படி இருக்குமென்று நினைத்துப் பாருங்கள். உலகின் வட துருவப்பகுதிகளில் வருடத்தின் 365 நாட்களில் மூன்றில் ஒரு பங்கு நாட்களில் சூரிய உதயமே இருக்காதாம். கிட்டதட்ட ஒரு ஆண்டுக்கு 106 நாட்கள் இருளில் மூழ்கிக் கிடக்குமாம்.

7 ஏக்கர் ஆலமரம்

7 ஏக்கர் ஆலமரம்

ஆந்திர மாநிலத்தில் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பகுதியில் ஒரு மிகப்பெரிய ராட்சச ஆரமரம் இருக்கிறது.இந்த மரத்துக்கு திம்மம்மா மாரிமானு என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்த மரம் எவ்வளவு பெரியது தெரியுமா?... இந்த ஒரு மரம் மட்டும் கிட்டதட்ட 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்... உலகின் மிகப்பெரிய ஆலமரங்களில் இதுவும் ஒன்றெனக் கூறப்படுகிறது.

24 மணிநேரத்தில் 16 முறை சூரியஉதயம்

24 மணிநேரத்தில் 16 முறை சூரியஉதயம்

உலகில் சூரியன் உதிக்கும் நேரம் பூமியின் சுழற்சியைப் பொருத்து வேறுவேறாக இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளில் உள்ளவர்களும் அந்தந்த நாட்டில் 24 மணி நேரத்தில் 1 முறைதான் சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் பார்க்க முடியும். ஆனால் ஒரு இடத்தில் 24 மணி நேரத்தில் 16 முறை சூரியன் உதிக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?...

அப்படி ஒரு இடம் இருக்கு. ஆம். விண்வெளிக்குச் செல்லும் விஞ்ஞானிகள் ஒரு 24 மணி நேரத்தில் 16 முறை சூரிய உதயத்தையும்16 முறை சூரிய அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync
English summary

hot waterfalls in italy

hot waterfalls in italy