உங்களை நிலைகுலையச் செய்திடும் குழந்தைகளின் படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

எப்போதும் குழந்தைகள் என்று சொன்னாலே சிரிப்பும் எந்த மாசற்ற, கள்ளங் கபடமற்ற அவர்களது முகமும் தான் நினைவுக்கு வரும், குழந்தைகளின் உலகம் மிகவும் அலாதியானது எந்த ஒரு எதிர்ப்பார்ப்போ கற்பனையோ இன்றி அவர்களுக்கான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இந்த சமூகம் அவர்களின் ரசனையை எப்படி குலைக்கிறது, அழகான அவர்களின் உலகத்தை எப்படி சிதைக்கிறது என்பதை நாம் உணர சில புகைப்படங்களே அதற்கு சாட்சியாய் இருக்கிறது. குழந்தை என்றும் பாராமல் அவர்களுக்கு இந்த சமூகம் எத்தகைய கொடூரங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர, புரிந்து கொள்ள அடுத்தடுத்து வருகிற புகைப்படங்களையும் அதன் பின்னணியையும் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

காசாவை சேர்ந்த புகைப்பட நிருபர் நாடியா அபு ஷபான் சிரியாவில் வாழுகின்ற மக்களின் நிலையை படம் பிடிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்து நான்கு வயதேயான சிறுமியை போட்டோ எடுக்க கேமராவை எடுத்தபோது, அந்த கேமராவை துப்பாக்கி என்று நினைத்து சிறுமி தன்னுடைய இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி சரணடையும் தொனியில் நின்றிருக்கிறார்.

அந்த படத்தை அவர் சமூகவலைதளத்தில் பகிர உலகம் முழுவதுமே அந்த படம் வைரலானது. அதோடு, பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

Image Courtesy

#2

#2

சிரிய அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைப்பெற்று வருகிற போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள். அப்படி சிரியாவின் கௌட்டா பகுதியில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்கு செயற்கை சுவாசம் அளித்திருக்கிறார்கள்.

ஆனால் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாது, தனக்கு கொடுக்கப்பட்ட செயற்கை சுவாசத்தை தன்னுடைய தங்கைக்கு கொடுத்து தங்கையை உயிர் பிழைக்க வைத்திருக்கிறார். அதீத ரசாயனம் காரணமாக அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

Image Courtesy

#3

#3

நெல்லையில் கந்து வட்டி கொடுமையை காரணம் காட்டியும், பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று சொல்லி இசக்கி முத்து என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார்.

உடல் முழுவதும் நெருப்போடு நின்ற குழந்தையும், நெருப்பில் உடல் விரைத்து தரையில் குப்புறக்கிடந்த குழந்தையின் உடலும் அனைவரின் மனதையும் உலுக்கியது.

Image Courtesy

#4

#4

மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த அதே குடியிருப்பில் பக்கத்து வீட்டில் வசித்த ஆறு வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்தான். இது தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

#5

#5

துருக்கியிலிருந்து க்ரீஸை நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் படகு மூழ்கியதால் பன்னிரெண்டு பேர் வரை உயிரிழக்கிறார்கள். அவர்களில் அய்லான் குர்தி என்ற மூன்று வயது சிறுவனும் ஒருவன். கடற்கரையில் குப்பறப்படுத்திருந்த அய்லான் குர்தியின் உடல் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

#6

#6

இதே போல கடந்த ஆண்டு மியான்மரில் இருந்து வந்த ரோஹிங்கியா மூஸ்லீம் வந்த கப்பல் ஒன்று கவிழ்ந்தது. பதினெட்டு பேர் வரை வந்த அந்த கப்பல் மூழ்கியதில் பலரும் கடலைல் தத்தளித்து உயிருக்கு போராடியிருக்கிறர்கள். அப்போது ஹமீதா என்ற பெண்னின் ஒரு மாதமேயான குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.

தன்னுடைய குழந்தையை அணைத்தபடி ஹமீதா அழுத அந்த காட்சி , இந்த சமூகத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து கேள்வி எழுப்புவதாய் அமைந்திருந்தது.

#7

#7

பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கார் டிரைவரே அக்கா தம்பி இருவரையும் கடத்தி கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவைச் சேர்ந்த பத்து வயது சிறுமி முஸ்கன் மற்றும் அவரது தம்பி ரித்திக் ஆகியோரை அழைத்துச் செல்லும் கார் டிரைவர் கடத்திச் சென்றிருக்கிறான்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து ஆற்றில் வீசியிருக்கிறான், அவனது தம்பியையும் கொலை செய்து விட்டு தப்பியவனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

Image Courtesy

#8

#8

சூனியக்காரன் என்று சொல்லி பெற்றோரே குழந்தையை அனாதரவாக விட்டுச் சென்றுவிட்டனர். அப்போது சமூக சேவகியான டென்மார்க்கை சேர்ந்த அஞ்சா ரிங்கெரன் லோவன் என்ற பெண்மணி நைஜீரியாவிற்கு சென்றிருக்கிறார் அப்போது இந்த குழந்தையின் பரிதாப நிலையை அறிந்து குழந்தையை மீட்டு பராமரித்துள்ளார்.

சிறுவன் மீட்கப்பட்ட போது இருந்த புகைப்படமும் சில ஆண்டுகள் கழித்து முழு ஆரோக்கியத்துடன் இருந்த படம் நெகிழச் செய்தது.

Image Courtesy

#9

#9

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ரிச்சட்ஸன் என்னும் இடத்தை சேர்ந்த வெஸ்லி மேத்யூஸ் இரண்டாவதாக பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு இல்லத்தில் இருந்து மூன்று வயதான செரின் மேத்யூஸ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார்கள். அப்போது பால் குடிக்க மறுத்ததால் வலுக்கட்டாயமாக பால் கொடுத்திருக்கிறார்கள். இதனால் மூச்சுத் திணறி குழந்தை இறந்துவிட்டிருக்கிறது. அதோடு உடலை என்ன செய்வதென்று தெரியாது வீட்டிற்கு அருகில் உள்ள சுரங்கத்தில் மறைத்து வைத்து குழந்தை காணவில்லை என்று நாடகமாடியிருக்கிறார்கள்.

குழந்தையின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட போது, குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, தன்னை தத்தெடுத்த பெற்றோரால் கொடுமைகளை அனுபவித்து இறந்திருக்கிறாள் செரின்.

#10

#10

குர்கானில் இருக்கும் ரியான் சர்வதேசப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரத்யுமன் என்ற சிறுவன் பள்ளிக் கழிவரையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டான்.

பள்ளியின் பேருந்து ஊழியர் அசோக்குமார் என்பவன் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

Image Courtesy

#11

#11

உத்திரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் தவித்துக் கொண்டிருந்த போது அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக ஃபரூக்காபாத் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறையால் 49 குழந்தைகள் உயிரிழந்தன.

#12

#12

சென்னை அருகே உள்ள சேலையூர் ஜியோன் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் வீட்டிற்கு செல்வது வழக்கம். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அடியில் மிகப்பெரிய ஓட்டை இருந்திருக்கிறது. அதை ஒரு பலகையை வைத்து தற்காலிமாக மறைத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

சாலையில் இருந்த மேடுபள்ளத்தில் ஏறி இறங்கிய போது அந்த பலகை விலகிவிட்டிருக்கிறது. அந்த ஓட்டை வழியாக பேருந்துக்குள்ளிருந்து ஸ்ருதி சாலையில் விழுந்து இறந்தார்.

பள்ளிப்பேருந்துகள் எந்த லட்சணத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அனைவரையும் விழித்துக் கொள்ள ஒரு குழந்தையின் உயிர் தேவைப்பட்டிருக்கிறது.

#13

#13

சூட்கேசில் அடைக்கப்பட்டு கிடந்த சிறுவன் ஆதித்யாவின் உடல் அப்போது தமிழகத்தையே அதிரச் செய்தது. சிறுவனின் தந்தை ஜெயக்குமாருக்கும் உடன் பணியாற்றிய பூவரசிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பூவரசி வற்புறுத்த ஜெயக்குமார் மறுத்திருக்கிறார். ஜெயக்குமாரை பழிவாங்குவதாய் நினைத்து அவரது மகனை கொலை செய்து பெட்டியில் அடைத்து வைத்திருந்தார் பூவரசி.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Shocking and tragic Children Photo

Shocking and tragic Children Photo
Story first published: Monday, February 26, 2018, 11:57 [IST]