Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வரலட்சுமி பூஜை செய்யும் முறைகளும் வைக்க வேண்டிய படையலும்
இன்று வரலட்சுமி வரதம். இங்கே அதற்கான சில வழிபாட்டு முறைகள் அடிப்படையான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த உலகத்தைக் காக்கின்ற தெய்வங்களில் ஒன்றாக, மகாலட்சுமி கருதப்படுகிறார். நாம் மனதுக்குள் நமக்குத் தேவையானதை வேண்டுகின்ற போது, அதை நமக்குக் கொடுக்கின்ற வரலட்சுமியாக இருப்பதால் தான் இந்த வரதத்துக்குக் வரலட்சுமி நோன்பு என்று பெயர் ஏற்பட்டது.

லட்சுமிதேவி தேடி வந்து குடியேறும் நல்ல நாள் தான் வரலட்சுமி விரத நாளாகக் கொண்டாடப்படுகிறது.

பூஜை செய்யும் முறை
வரலட்சுமி விரதத்தன்று முழு ஈடுபாட்டுடனும் பக்தியுடனும் பூஜை செய்ய வேண்டும். மாக்கோலம் இட்ட பானையை பூஜை செய்யும் இடத்தில் வைத்து அதற்கு முன்பாக ஒரு வாழை இலையைப் போட வேண்டும். அந்த இலையின் மேல் நெல்லை நிரப்ப வேண்டும்.
இதற்கு பதிலாக ஒரு குழிவான வெள்ளி அல்லது பித்தளை பாத்திரத்திலும் நெல்லை நிரப்பலாம். இதன்மேல் தயாரித்து வைத்திருக்கும் கலசத்தை எடுத்து வைத்தால் அது அசையாமல் இருக்கும்.

மஞ்சள் பிள்ளையார்
அடுத்ததாக, ஒரு சிறிய தட்டு அல்லது வெற்றிலையின் மேல் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். அதன் அருகில் சந்தனத்தை குழைத்து வைத்துக் கொண்டு, குங்குமத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு தாம்பூலத்தை எடுத்து அதில் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள் ஆகியவற்றை விநாயகருக்குத் தனியாகவும் லட்சுமிதேவிக்கு தனியாகவும் வைக்க வேண்டும்.
வரலட்சுமி பூஜையில் லர்கள் மிக மிக அவசியம். அதனால் சுவாமி படங்களுக்கு மாலை, மலர் சரங்களைச் சாற்றிவிட்டு, வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தலையில் பூக்களைச் சூடிக் கொள்ள வேண்டும். வீட்டுக்கு பூஜைக்கு வருபவர்களுக்கு தாம்பூலம் கொடுப்பதற்காகவும் தனியாக பூக்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அம்மனை அழைத்தல்
வரலட்சுமி பூஜையைப் பொருத்தவரையில், அம்மனை அழைத்தல் என்பது மிக முக்கியமான பணியாகும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், விளக்கு, தூபக்காலில் திரியிட்டு, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். கற்பூரத் தட்டில் கற்பூரங்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நோன்புச் சரடு என்னும் மஞ்சள் கயிற்றில் ஒன்பது முடிச்சுகள் போட்டு, அதோடு பூவையும் சேர்த்து முடிந்து வைக்க வேண்டும். அம்மனுக்கு முன்பாக ஒரு சின்ன பாத்திரத்தில் காய்ச்சாத பசும்பாலை வைக்க வேண்டும்.
மலர்களை அட்சதையாகத் தூவி, மந்திரங்களைச் சொல்லி வழிபாடு நடத்த வேண்டும். சாம்பிராணி தூபம் காட்டி, வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை நிவேதனம் செய்து, கற்பூர ஆரத்தி காட்டி அம்மனை வரவேற்க வேண்டும்.

படையல்
எந்த பூஜையாக இருந்தாலும் அதற்கு படையல் என்பது மிக முக்கியம். படையல் என்பது வெறும் சாப்பாட்டு பொருள்கள் மட்டுமல்ல. மற்ற சில பொருள்களும் வைக்க வேண்டும்.
பஞ்சாமிர்த ஸ்நான உபசாரம் என்பது மிக முக்கியமாகக் கடைபிடிக்கப்படும். அதற்கு பால், தேன், தயிர், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள் சேர்க்க வேண்டுமென்றால் ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் பேரிட்சை பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
இவற்றோடு பாயசம், கொழுக்கட்டை, வடை, இட்லி, லட்டு போன்ற நைவேத்தியப் பொருள்களையும் தயாரித்து வைத்துக் கொள்ளலாம்.

மற்ற பொருள்கள்
அதேபோல், வீட்டில் செல்வம் நிலையாக தங்க வேண்டும் என்பதற்காக ஏதேனும் ஒரு வெள்ளிக்காசு அல்லது ஒரு ரூபாய் நாணயத்தை வெற்றிலை, பாக்குடன் சேர்த்து வையுங்கள்.
மற்றொரு தட்டில், மஞ்சள், குங்குமம் இரண்டையும் கரைத்து ஆரத்தி தட்டு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
7 அல்லது 16 மாவிளக்கு செய்து, நடுவில் பெரிய மகா ஜோதி திரியிட்டு விளக்கேற்றி வையுங்கள்.
பூஜையன்றும் அதற்கு அடுத்த நாளும் முழுமையாக லட்சுமி தேவி நம்முடைய வீட்டில் தங்குகிறாள் என்பது நம்பிக்கை. அதனால் வீட்டில் சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள் இல்லாமல் இருப்பது நல்லது.
அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களை பூஜையின் போது அழைத்து தாம்பூலம் கொடுக்கலாம். அதில் பூ, சிகப்பு அல்லது பச்சை நிற கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, குங்குமம், மஞ்சள், வசதியிருந்தால் ஒரு ஜாக்கெட் துணி ஆகியவற்றைக் கொடுக்கலாம்.



Click it and Unblock the Notifications