For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியல் கட்சி துவங்கிய 16 சினிமா நடிகர்கள் !

|

ஒரு வழியாக நடிகர் கமல்ஹாசன் களத்தில் இறங்கிவிட்டார். இதுவரையில் ட்விட்டரில் மட்டுமே காரசாரமான பதிவுகளை போட்டுவந்தவர் தற்போது மைக் பிடித்து முழக்கமிட ஆரம்பித்துவிட்டுகிறார்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து,பல்வேறு திடிர் திருப்பங்களை சந்தித்து வருகிறது. அடுத்த என்ன நிகழும் என்கிற எதிர்ப்பார்ப்பு ஒவ்வொரு நாளும் கூடிக் கொண்டேயிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும் இந்நிலையில் உலகநாயகனும் களத்தில் இறங்க சூடு பிடித்திருக்கிறது தமிழக அரசியல்.

political parties started by cinema personalities

கமலின் மக்கள் நீதி மய்யம் எப்படி செயல்படப்போகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால், இதற்கு முன் தமிழக அரசியலில் கால்பதிக்க நினைத்து புதிய கட்சி துவங்கிய திரைப்பிரபலங்களைப் பற்றிய தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எம்.ஜி.ஆர்.,

எம்.ஜி.ஆர்.,

1940ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார் எம்.ஜி.ஆர்.,அதன் பின்னர் வந்த திமுக விலும் உறுப்பினராக சேர்ந்து கொண்டார். திமுகவின் தலைவரான அண்ணாவை தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டு திறம்பட வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

அண்ணாவின் மரணத்தை தொடர்ந்து கருணாநிதி அந்த இடத்திற்கு வந்தார். தொடர்ந்து திமுக வின் பொருளாளராக இருந்த எம்ஜிஆர், திமுக கழகத்தினர் தங்களது சொத்துக் கணக்குகளை காட்ட வேண்டும் என்றார். இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏக்கள் அவர் மீது நடவடிக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

அந்த புகாரையடுத்து திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 1972 அதே ஆண்டு தானே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார்.MOST READ: மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

MOST READ: மூக்கு ஒழுகாமல் தடுப்பது எப்படி? செலவில்லாமல் எப்படி விரட்டலாம்?

என்.டி.ராமராவ் :

என்.டி.ராமராவ் :

நன்டமுரி தாரக ராமாராவ் என்பவர் தெலுங்கு திரைப்படத்தின் முன்னணி நடிகராக இருந்தார். மிகப்பெரிய செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர். இந்திய சிவில் சர்வீசில் வேலை கிடைத்தும் இவருடைய ஆர்வம் சினிமாவை நோக்கியே இருந்தது. முதலில் மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கியவர் 1947 ஆம் ஆண்டு வெளியான பல்லேடுரி பில்ல என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி முந்நூறுக்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தேசிய விருது, பத்ம விருது, ஃப்லிம்ஃபேர் விருது பத்துமுறை என சாதனை படைத்திருக்கிறார்.

இவர் 1982 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கினார்.மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு. 1983 முதல் 1994 வரை மூன்று முறை முதலமைச்சரானார்.

எஸ்.எஸ்.ராஜேந்திரன் :

எஸ்.எஸ்.ராஜேந்திரன் :

துவக்கத்தில் மேடை நாடகத்தில் நடித்து வந்த எஸ்.எஸ்.ஆர் பின்னணிப் பாடகராக திரையுலகில் அறிமுகமானார். படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நாடகத்தின் தொடர்பை விட்டுவிடாமல் நாடக சபா நடத்தினார். இந்த சபா மூலமாக தான் மனோரமா சினிமாவிற்கு வந்தார்.

சினிமா மட்டுமல்லாத சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்தார். இதைத் தாண்டி இயக்குநராகவும்,தயாரிப்பாளராகவும் தொடர்ந்து சினிமாவிற்கு பங்காற்றினார். 1962 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்த எஸ் எஸ் ஆர் தேனி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கழகம் :

கழகம் :

சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் எஸ் எஸ் ஆர் தான். அதன் பிறகு அதிமுகவில் இணைந்தார். 1980 ஆம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்போது நடந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.

1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது எஸ் எஸ் ஆருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த எஸ் எஸ் ஆர் அதிமுகவிலிருந்து விலகி வெளியேறி, எம்.ஜி.ஆர் எஸ் எஸ் ஆர் கழகம் என்று கட்சியை துவங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

சிவாஜி :

சிவாஜி :

எம்.ஜி.ஆரின் மரணத்திற்கு பிறகு அதிமுக ஜா அணி, ஜெ அணி என இரண்டாக உடைந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி ஜானகி அணியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் சிவாஜி.

ஆனால் ராஜிவ் ஜெயலலிதா அணியை ஆதரிப்பதாக அறிவித்தது. இதனால் 1988 ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணியை தொடங்கினார்.

அந்த கட்சியை ஜானகி அணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார். திருவையாறில் போட்டியிட்ட சிவாஜி தோற்றுப்போனார். அதோடு தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார் சிவாஜி.

பாக்கியராஜ் :

பாக்கியராஜ் :

ஆரம்பம் முதல் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தவர் அதிமுகவில் இருந்தார் பின்னர் அதிலிருந்து விலகி எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை 1989 ஆம் ஆண்டு துவங்கினார். அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்காததை தொடர்ந்து கட்சியை கலைத்துவிட்டு திமுக கட்சியில் இணைந்து கொண்டார்.

MOST READ: திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!

 டி.ராஜேந்தர் :

டி.ராஜேந்தர் :

தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,பாடகர் என பல திறமைகளை தன்னகத்தே வைத்துக்கொண்டிருக்கும் டி.ராஜேந்தர் திமுகவில் இணைந்தே தன்னுடைய அரசியல் பணியை துவக்கினார்.

திமுக வின் கொள்கையை பரப்புச் செயலாளராக இருந்தார் தொடர்ந்து தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத் தலைவராக இருந்தார். 2004 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி அனைந்திந்திய லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் என புதிய அரசியல் கட்சியை துவக்கினார். 2013 ஆம் ஆண்டு தன்னுடைய கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

விஜயகாந்த் :

விஜயகாந்த் :

விருதுநகரில் பிறந்த விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் சென்னைக்கு வந்தார். தொடர்ந்து பல முயற்சிகளுக்கு 1978 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதிக்க துவங்கினார்.

1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இவரது ரசிகர்கள் சுயேட்சியாக போட்டியிட்டனர். அதில் பலரும் வெற்றிப்பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து தானும் அரசியலிலும் ஈடுபடலாமென்று ஆர்வங்கொண்டு 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியை துவக்கினார்.

சரத்குமார் :

சரத்குமார் :

தமிழ் சினிமாவின் வில்லனாக நடித்து வந்த சரத்குமார் சூரியன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோவானார். 1996 ஆம் ஆண்டு திமுக வில் இணைந்திருந்தார், 1998 ஆம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

2002 ஆம் ஆண்டு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரானார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி மனைவி ராதிகாவுடன் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சிக்கு எதிராக செயல்பட்டார் என்று சொல்லி ராதிகா கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து சரத்குமாரும் கட்சியிலிருந்து விலகிக் கொண்டார்.

இதன் பிறகு 2007 ஆம் ஆண்டு சரத்குமார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார்.

சிரஞ்சீவி :

சிரஞ்சீவி :

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி 2008 ஆம் ஆண்டு ப்ரஜா ராஜ்ஜியம் கட்சி துவக்கினார். 2009 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பலேகொல் மற்றும் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு தன்னுடைய கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.

பவண் கல்யாண் :

பவண் கல்யாண் :

பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் இளைஞரணி தலைவராக அவரது தம்பியும் நடிகருமான பவன் கல்யாணை நியமித்தார் சிரஞ்சீவி. கட்சி காங்கிரஸுடன் இணைக்கப்பட்டதில் அண்ணன் தம்பிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜனசேனா என்ற கட்சியைத் 2014 ஆம் ஆண்டு துவக்கினார்.

MOST READ: இரத்தில் உள்ள ஹீமோகுளோபின் அதிகரிக்க, தினமும் 3 முறை இதை ஊற வைத்து சாப்பிடுங்க!

கார்த்திக் :

கார்த்திக் :

பழைய நடிகர் முத்துராமனனின் மகனான கார்த்திக் ஃபார்வேர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்று அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தார்.அதன் பிறகு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து விருதுநகர் மற்றும் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

மன்சூர் அலி கான் :

மன்சூர் அலி கான் :

பெரும்பாலும் வில்லன் கதாப்பத்திரத்திலேயே வந்த மன்சூர் அலி கான் சில திரைப்படங்களில் கௌரவ வேடத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம்,தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு தமிழ் பேரரசு என்ற கட்சியை துவக்கினார்.

சீமான் :

சீமான் :

திரைப்பட இயக்குநராக இருந்த சீமான் சி.பா ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கிறார். சில காலம் திராவிடர் கழகத்துடன் இணைந்து பெரியாரின் கொள்களை பரப்பி வந்த சீமான் , பின்னர் நாம் தமிழர் இயக்கத்தை கையிலெடுத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து நடத்தினார்.

2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டதில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை.

கருணாஸ் :

கருணாஸ் :

தமிழ்சினிமாவின் காமெடியனாக அறிமுகமான கருணாஸ் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.நடிப்பு மட்டுமின்றி இசையமைப்பாளாரகாவும் இருந்திருக்கிறார், இவர் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியின் தலைவராக பொறுப்பேற்று அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முக்குலத்தோர் புலிப்படை எங்களுடைய கட்சி தேவர் சமுதாயத்தினர் நலனுக்காக ஆரம்பித்த கட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கருணாஸ் தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் அவரது ஆர்வம் காரணமாக தலைவர் பொறுப்பினை வழங்கினோம். ஆனால் இவர் இந்த பெயரை அறக்கட்டளையாக பதிவு செய்து கொண்டு உறுப்பினர்களை சேர்க்க ஆரம்பித்தார். இதனால் கருணாஸை தலைவர் பொறுப்பிலிருந்து நாங்கள் நீக்குகிறோம் என்று முக்குலத்தோர் புலிப்படையினர் அறிவித்திருந்தனர்.

உபேந்திரா :

உபேந்திரா :

கன்னட உலகில் முன்னணியாக திகழும் உபேந்திரா நடிகர் மற்றும் இயக்குநராக இருந்தார். இவருக்கு சூப்பர் ஸ்டார், ரியல் ஸ்டார் அகிய பட்டப்பெயர்களும் இருக்கின்றன, இவர் 2017 ஆம் ஆண்டு கர்நாடக ப்ரக்னாவந்த ஜனதா பக்‌ஷா என்ற கட்சியை துவக்கியுள்ளார்.

கமல்ஹாசன் :

கமல்ஹாசன் :

தமிழ் சினிமாவின் ஏன் உலக சினிமாவின் மறைக்க முடியாத ஓர் முகம் என்றால் அது உலகநாயகன் கமல்ஹாசனின் முகமாகத்தான் இருக்கும். நடிப்பைத் தாண்டி திரைக்கதை, இயக்குநர்,பாடகர்,பாடலாசிரியர்,கோரியோகிராபர் என எண்ணற்ற திறமைகளை கொண்டுள்ளவர்.

சில மாதங்களாக ட்விட்டரில் தன் கருத்துக்களை பதிவிட்டு வந்தவர் கடந்த 21 ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவக்கினார்.

MOST READ: கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 12 நன்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

political parties started by cinema personalities

political parties started by cinema personalities
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more