Latest Updates
-
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும், ஏசி தேவையில்லை! -
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும்
சுயிங்கத்தால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட கொலைக்குற்றவாளி!
ஒரு கொலைக் குற்றவாளியை சுமார் 30 ஆண்டுகள் கழித்து சுயிங்கம் உதவியுடன் பிடித்த சம்பவம்
ஓர் உண்மையை கண்டுபிடிப்பது எவ்வளவு எளிமையான காரியம் அல்ல. அதனை மறைக்க வேண்டும் என்று எவ்வளவு தான் முயன்றாலும் என்றாவது ஒரு நாள் அவை வெளியே வந்தே தீரும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்திடும்.
எதோ ஒரு தவறு செய்து விட்டு அவ்வளவு எளிதாக நாம் தப்பித்து சென்று விட முடியாது என்று இந்த கதை உணர்த்திடும். அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் அகஸ்தா என்னுமிடத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.ஒரு கொலை அதனை சுற்றி நடக்கும் சம்பவங்கள், இந்த கொலையை இவர் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் என்று விரிந்தாலும் இறுதியாக எப்படி கொலையாளியை கண்டுபிடிக்கிறார்கள் என்பதில் தான் சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.

#1
1976 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி போலீசாருக்கு ஒரு வருகிறது. அதில் தங்களது பக்கத்து வீட்டிலிருக்கும் முதியவர் கடந்த சில நாட்களாக காணவில்லை வீடு பூட்டியே கிடக்கிறது என்கிறார்கள்.சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்கிறார்கள். அந்த வீட்டில் இருந்ததாக சொல்லப்பட்ட70 வயது முதியவரான ப்ளான்சே கிம்பால் காணவில்லை. சமையலறையில் மட்டும் ரத்தம் உறைந்து காணப்படுகிறது.

#2
அந்த முதியவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று யூகித்த போலீசார் முதலில் இறந்தாக கூறப்படுகிற முதியவரின் உடல் எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள். ஒரு வேலை முதியவர் யாரையாவது இங்கே வைத்து கொலை செய்திருக்க கூடுமோ என்றும் விசாரிக்கப்பட்டது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டின் பின்புறம் தோட்டத்தில் முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

#3
உடல் முழுவது வெட்டுக்காயங்களுடன் முதியவரின் உடல் இருந்ததாலும், காயத்தின் ஆழம் காரணமாகவும் கொலையாளி மிக நெருக்கமாக நின்று தான் தாக்கியிருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டது. அதோடு இருவரும் சண்டையிட்டதைப் போல தெரியவில்லை. கொலையாளி திட்டமிட்டே இவரை கொலை செய்ய வேண்டும் என்றே நுழைந்திருக்கிறான்.
முதியவரும் தற்காத்து கொல்ல முற்பட்டதைப் போல காயங்கள் இல்லை அதனால் முதியவருக்கு மிகவும் பழக்கமானவரே இந்த கொலையில் ஈடுப்பட்டிருக்கலாம் என்று யூகித்தார்கள் போலீசார்.

#4
பலரையும் விசாரிக்கிறார்கள். கொலையாளி பற்றிய எந்த துருப்பும் கிடைக்கவில்லை எல்லாரும் சொல்லி வைத்தாற் போல கொலை செய்யப்பட்ட முதியவரின் வீட்டில் ஒரு இளைஞன் வாடகைக்கு குடியிருந்தான்.
சில நாட்களாக தலைமறைவாக இருக்கிற அவனை பிடித்தால் உண்மை தெரியவரும் என்றார்கள். 27 வயதுடைய அந்த இளைஞன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்.

#5
ஏற்கனவே சந்தேகம்படும்படியான நபர்கள் அத்தனை பேரையும் விசாரித்துவிட்டபடியால் இந்த இளைஞனை பிடித்தால் குற்றவாளியை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைத்தார்கள். பலரும் அந்த இளைஞன் தன கொலைக்குற்றவாளி என்று நினைத்திருந்தார்கள்.
ஆனால் நிலைமை வேறு மாதிரியாக இழுத்தடித்தது.

#6
ஒரு மாதம் முன்பே எனக்கு வெளியூரில் வேலை கிடைக்கப்போகிறது என்று அவரிடம் சொல்லி வீட்டை காலி செய்து விடுவேன் என்று சொல்லியிருந்தேன். சரியாக கொலை செய்யப்பட்டதற்கு முந்தைய தினம் தான் ஊரில் நேர்காணல் நடந்தது.
மறு நாள் வேலையில் சேர்ந்து கொள்ள சொன்னார்கள். சரி விடுமுறையில் செல்லும் போது என்னுடைய உடைமைகளை வந்து எடுத்துச் செல்லலாம் என்று விட்டுவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது என்றிருக்கிறார்.

#7
ஊரில் வேலை செய்வதாக சொன்ன இடம், அங்கே தங்கியிருந்த உறவினரின் வீடு என எல்லாரிடத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த இளைஞனின் மீது எந்த தவறும் இல்லை என்ற முடிவுக்குத் தான் வர முடிந்தது.
இதுவரை இந்த இளைஞன் தான் கொலைக்குற்றவாளி என்று நினைத்திருந்தோம். அவனும் இல்லை என்றாகிவிட்டது பின்னர் யார் தான் அவரை கொலை செய்தது என்று தீவிரமாக ஆலோசித்தார்கள். ஒரு வேலை அந்த முதியவரின் உறவுகள் சொத்துக்காக கொலை செய்திருக்கலாம்மோ ஏனென்றால் முதியவருக்கு மிகவும் பழக்கப்பட்டவர் தான் இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என்று நினைத்தார்கள். உறவினர்கள் ஊரை விட்டுச் சென்று ஐந்து வருடத்திற்கும் மேலாகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மட்டும் இங்கே வருவார்கள் என்றார்கள்.

#8
எவ்வளவு தேடியும் கிடைக்காததாலும் குற்றவாளி குறித்த எந்த தகவலும் கிடைக்காததால் அந்த வழக்கு அப்படியே மூடி வைக்கப்பட்டது. காலப்போக்கில் எல்லாம் மறந்து போனது.
2010 ஆம் ஆண்டு முதியவர் கேரி ரவுப் என்பவர் ஒரு நபருடன் கைகலப்பில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதாக பொதுமக்கள் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுக்க விரும்பாததால் புகார் பதியப்படவில்லை. குற்றம் செய்த ரவுப் என்ற முதியவரை எச்சரித்து மட்டும் அனுப்பி வைத்தனர்.

#9
வழக்கு பதியப்படுகிறதோ இல்லையோ குற்றவாளி பயன்படுத்தியாக கருதப்படும் ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்கள் எதுவாக இருந்தாலும் அவை டி என் ஏ சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அப்படி இந்த கத்தியை உட்படுத்தப்பட்ட போது. இந்த கத்தியில் இருக்ககூடிய ரத்தத்தின் டி என் ஏவும் கடந்த 34 நாடுகளுக்கு முன்பு குற்றவாளி யாரென்று தெரியாமல் கிடப்பில் போடப்பட்ட 70 வயது முதியவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒத்துப் போனது.

#10
அப்போதிருந்த போலீசார் எல்லாம் ஓய்வுப்பெற்று சென்று விட ஃபைல்கள் எல்லாம் தோண்டியெடுக்கப்பட்டு 1976 ஆம் ஆண்டு நடந்த கொலை குறித்தும் அன்றைக்கு நடத்தப்பட்ட விசாரணை குறித்தும் 2010 ஆம் ஆண்டு இருந்த போலீசார் அறிந்து கொண்டார்கள்.
அந்த முதியவர் இப்போது தெருக்களில் தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். சின்ன சின்ன திருட்டு வழக்குகளில் ஜெயிலுக்கு சென்று திரும்பியவர் என்று தெரியவருகிறது. கத்தியில் இருப்பது இவரது டி ஏன் ஏவா அல்லது காயம்பட்ட நபரின் டி ஏன் ஏ வா என்று தெரியாததால் மீண்டும் டி என் ஏ பரிசோதனை மேற்கொள்ள நினைத்தார்கள் போலீசார்.

#11
கொலை குற்றவாளி குறித்த ஊர்ஜிதமான தகவல் தெரியவரும் வரை போலீசார் தன்னை சந்தேகிக்கிறார்கள் என்று எந்த ஒரு துருப்பும் அந்த முதியவருக்கும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
ரோட்டோரத்தில் இருந்த ரவுப் என்ற அந்த முதியவரிடம் சென்று தாங்கள் ஆராய்ச்சி மாணவர்கள் என்றும் மக்கள் பயன்படுத்துகிற சுயிங்கம் குறித்து ஒரு சர்வே எடுத்துக் கொண்டிருப்பதாகவும். தாங்கள் கொடுக்கிற சுயிங்கத்தை சாப்பிட்டு அதன் சுவை எப்படி இருக்கிறது என்று சொல்லி அவரிடம் சுயிங்கத்தை கொடுக்கிறார்கள். அவரும் சாப்பிட்டுப் பார்த்து எப்படியிருந்தது என்று விளக்கமாக சொன்னார். கடைசியில் கிளம்பும் போது ரவுப் தின்று துப்பிய சுயிங்கத்தை பத்திரப்படுத்திக் கொண்டு வந்தவர்கள் கிளம்பினார்.

#12.
மாறுவேடத்தில் சென்ற போலீசார் பத்திப்படுத்தி கொண்டு வந்த சுயிங்கத்திலிருந்து எடுக்கப்பட்ட ரவுபின் எச்சிலிருந்து டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது.
போலீசார் யூகித்தது சரி! டிஎன்ஏ ஒத்துப் போனது. கொலைக் குற்றவாளியை சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்து விட்ட மகிழ்ச்சியில் போலீசார் திளைத்தனர்.

#13
அந்த முதியவரை கைது செய்தார்கள். விசாரணை நடத்தப்பட்டது. பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரியவந்தது. அதாவது 1976 ஆம் ஆண்டு முதியவர் கொலை செய்யப்பட்ட போது ஓர் 27 வயது இளைஞனின் மேல் போலீசார் சந்தேகம் கொண்டார்களே அவர் தான் இன்றைக்கு அதாவது 2010 ஆம் ஆண்டு முதியவராக இருந்தார்.
அன்றைக்கு போலீசார் என்னை விசாரிக்க அழைத்ததும் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று நினைத்தேன். பின்னர் தான் விவரம் தெரியாமல் சந்தேகத்தின் பேரில் அழைத்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.

#14
உண்மையில் அன்றைக்கு வேலைக்காக ஊருக்கு கிளம்பிச் செல்வதாய் சொன்ன நான் செல்லவில்லை. எனக்கும் அந்த பெரியவருக்கும் தொடர்ந்து முன் விரோதம் இருந்தது. அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
ஹாலில் வைத்து அவரை கொலை செய்து உடலை புதைத்து விட்டு தான் ஊருக்கு கிளம்பினேன். கொலை நடந்து ஆறேழு நாட்களுக்கு பிறகு தான் போலீசார் விசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள். அன்றைக்கு தப்பித்ததும் அவ்வளவு தான் இதை எல்லாரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன் ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கழித்தும், நான் செய்த ஒரு குற்றத்திற்காக இப்படி தண்டனை அனுபவிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என்றாராம்.



Click it and Unblock the Notifications