இந்த நகரத்தில் நிர்வாணமாய் சுற்றித் திரியலாம்!

Posted By: Staff
Subscribe to Boldsky

உள்ளாடை சற்று விலகினாலே சங்கோஜப்பட்டு அவமானம் என்று கருதக்கூடியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆங்காங்கே நவநாகரீகம் என்ற பெயரில் உடைகளை குறைத்துக் கொண்டு வருவது சகஜமாகிவிட்டது.

அப்படி குட்டைப்பாவடை அல்லது ஸ்லீவ் லெஸ் என அணிந்து செல்லும் போதே வெறிக்க வெறிக்க பார்க்கிறவர்கள் மத்தியில் நிர்வாணமாய் சென்றால்.... நம் வீட்டு படுக்கையறை யாருமே உள்ளே நுழைய முடியாது என்ற நிலையிலும் கூட நம் வீட்டு அறையில் நிர்வாணமாய் இருக்க சங்கோஜப்படுபவர்கள் மத்தியில் ரோட்டில் நிர்வாணமாய் செல்ல முடியுமா? என்று ஆச்சரியப்படாதீர்கள்.

இந்த கட்டுரையில் அடுத்தடுத்து வரப்போகிற இடங்களில் நீங்கள் நிர்வாணமாய் சென்றாலும் உங்களை யாரும் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

ஏனென்றால் அங்கே அது தான் வழக்கம், மிகச் சாதரணமாக நிர்வாணமாய் திரிவார்கள். உலகில் அப்படி எங்கெங்கெல்லாம் இந்த நடைமுறை இருக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 #1

#1

வருடந்தோறும் மார்ச் பன்னிரெண்டாம் தேதி பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் இந்த நிகழ்வின் பெயர் நேக்டு பைக் ரைட். ஆரோக்கியமான உடலை பராமரிக்கும் வகையிலும் அதனை பின்பற்றப்படும் நோக்கில் இது நடத்தப்படுகிறது. நிர்வாணமாக ஆண் பெண் பலரும் இருச்சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு நேக்டு ரைட் செல்கிறார்கள்.

Image Courtesy

#2

#2

ஜப்பானில் வெயில் காலங்களில் இது நடக்கிறது. ஆங்காங்கே செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்கும் நீரூற்றுகளில் ஆண் பெண் இருபாலரும் குளிக்கலாம்.

இந்த தண்ணீரில் சில வகை மினரல்கள் அதிகமாக இருக்கும் அவை உடல்நலனுக்கு நல்லது என்றும் சொல்கிறார்கள்.

Image Courtesy

#3

#3

இந்தோனியவில் இருக்கக்கூடிய சில ஸ்பா செண்ட்டர்களில் நிர்வாணமாக தெரபிகள் வழங்கப்படுகிறது. வெளியிடத்தில் காற்றோட்டமான பகுதியில் நிர்வாணமாக உங்களுக்கு தெரபி கொடுக்கப்படுவதால் வழக்கத்தை விட விரைவிலேயே ரிலாக்ஸ் ஆவீர்கள் என்று சொல்லப்படுகிறது.

Image Courtesy

#4

#4

ஃபின்லாந்தில் இருக்கக்கூடிய ஹெல்ஸின்கி என்னும் இடத்தில் இந்த மரத்திலான ஆன வீடு அமைந்திருக்கிறது. இங்கே ஆண் பெண் நிர்வாணமாக தங்கிடலாம். அதோடு அவர்களுக்கு அங்கே மசாஜ் செய்யப்படுகிறது.

ஆரம்பத்தில் இது கைத்தறி பொருட்கள் கண்காட்சியாக இருந்தது.

Image Courtesy

#5

#5

ஆஸ்டிரியாவின் வொர்தெர்சீ என்னும் இடத்தில் நிர்வாணம் ஒரு ஆர்ட் என்ற பெயரில் கலைஞர்கள் பலரும் இணைந்து நிர்வாணமாக பங்கேற்று தங்களது கலைத்திறனை வெளிப்படுத்துகிறார்கள். இந்த விழாவில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து கலைஞர்கள் வருகிறார்கள்.

பெரும்பாலும் தங்கள் உடலை விதவிதமாக வண்ணக்கலவையை கொண்டு மறைத்துக் கொள்கிறார்கள்.

Image Courtesy

#6

#6

குறிப்பிட்ட ஏரியா, அல்லது குறிப்பிட்ட நேரம் என்றெல்லாம் இல்லை, பிரான்ஸின் கேப் டி ஏஜ்டு என்னும் நகரம் முழுவதும் நிர்வாணமாக மக்கள் நடமாட அனுமதியுண்டு, விருப்பப்பட்டவர்கள் உடை அணிந்து கொள்ளலாம், இயற்கையை நேசிப்பவர்கள் தங்கள் உடலையும் நேசிக்க வேண்டும் என இந்த ஏற்பாடாம்.

Image Courtesy

#7

#7

ஜெர்மனியில் இருக்கும் முனீச் நகரின் பார்க் ஒன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய பார்க். இந்த பார்க்கில் நிர்வாணமாக சன் பாத் எடுக்க 1960லிருந்து அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர முனீச் நகரத்தில் ஆறு இடங்களில் மக்கள் நிர்வாணமாக நடமாட அனுமதியுண்டு.

Image Courtesy

#8

#8

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாரணத்தில் இருக்கிறது மியாமி கடற்கறை. உடை உங்களது விருப்பம் என்று சொல்லி அரசாங்கம் அனுமதியளித்த ஒரு சில இடங்களில் இந்த கடற்கரையும் ஒன்று. இங்கே பெரும்பாலும் நிர்வாணமாக சன்பாத் எடுத்துக் கொள்கிறார்கள்.

Image Courtesy

#9

#9

க்ரோசியா என்ற நாட்டில் தண்ணீரின் அழகை ரசிக்கும் விதத்தில் க்ரோசியாவைச் சுற்றியிருக்கும் குட்டி குட்டி தீவுகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கே எல்லாம் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் நிர்வாணமாக வரத் தயாராக வேண்டும்.

ஐரோப்பாவின் அதிக வெயிலிருக்கிற பகுதி இது தானாம்! ஸ்ஸ்ஸப்ப்பா என்னா வெயிலு

Image Courtesy

 #10

#10

ஒவ்வொரு ஆண்டும் ஆக்ஸ்ட் 29லிருந்து செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை ப்ளாக் ராக் டெசர்ட் என்ற இந்த விழா நடக்கிறது. பர்னிங் மேன் என்று அடையாளப்படுத்தப்படும் இந்த நிகழ்விலும் அனைவரும் நிர்வாணமாகவே பங்கேற்கிறார்கள்.

இதைத் தவிர பல்வேறு இடங்கள் இருந்தாலும் டாப்10ல் இருப்பது இந்த இடங்கள் தான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Nudity Is Normal Here

Nudity Is Normal Here
Story first published: Tuesday, March 6, 2018, 9:00 [IST]