Latest Updates
-
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது! -
செஃப் ஷான்ஜித் ஸ்பெஷல் தக்காளி தம்புலியை எப்படி செய்யணும் தெரியுமா? -
கண் ஆரோக்கியத்திற்கான சிறந்த தென்னிந்திய உணவுகளை பட்டியலிட்ட டாக்டர் ஆதித்ரேய வர்மன்! -
பங்குனி உத்திரம் ஏன் கொண்டாடப்படுகிறது? முருகன் அருள் பெற ராசிப்படி செய்ய வேண்டிய தானங்கள்! -
ஏப்ரல் 1-ல் சொந்த நட்சத்திரம் செல்லும் சந்திரன்: இன்று இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கும்... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 டம்ளர் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் கட்டுப்படும்... -
இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினை அதிகரிக்குமாம்...! -
30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
பங்குனி உத்திரத்துக்கு 1 கப் பச்சை பயறு இருந்தா இந்த மாதிரி டக்குனு பாயாசம் பண்ணுங்க...டேஸ்ட் அமோகமா இருக்கும்
ஒருமுறை அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே!- ஸ்டாலினின் கண்ணீர் கடிதம்
ஸ்டாலின் தன்னுடைய தந்தையும் அரசியல் குருவுமான கருணாநிதி இறந்த பின் ஒரு இரங்கல் கடிதம் ஒன்றை தன் தந்தைக்கு எழுதியிருக்கிறார். அது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றி, அதிலிருந்து மட்டுமல்லாது தன்னுடைய ஆன்மாவின் இயக்கத்தையே இந்த உலகில் இருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை, நிரந்தர ஓய்வு பெற்றார் கருணாநிதி.

அவருடைய இறப்பைின் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தைக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அது கரையாத இரும்பு நெஞ்சத்தையும் கரைத்துவிடும்.

மு.க.ஸ்டாலின்
ஸ்டாலின் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் பிறந்த மகன். இவர் தன்னுடைய தந்தையை சிறு வயதிலிருந்தே அருகிலிருந்து உள்வாங்கிக் கொண்டவர். அவர் அரசியல் கற்றுத் தேர்ந்தவர். தன்னுடைய இளமைப்பருவத்தில் இருந்தே திராவிட இயக்கத்துக்காக பல்வேறு களப் போராட்டங்களில் பணியாற்றியவர். இவர் பிறந்தவுடன் பெரியாரை எல்லோரும் அய்யா என்று அழைப்பதால், அந்த அய்யா என்னும் பெயரையும் அண்ணாதுரையில் உள்ள துரை என்ற பெயரையும் சேர்த்து அய்யாத்துரை என்றே ஸ்டாலினுக்கு பெயர் வைக்க ஆசைப்பட்டாராம் கருணாநிதி. ஆனால் ஸ்டாலின் பிறந்த சமயத்தில் தான் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சோவியத் ரஷ்யப் போர் வெடித்து, அதில் மாண்டார் மாவீரர் ஸ்டாலின். அதனால் அவருடைய நினைவாக தன்னுடைய மகனுக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டிவிட்டார் கருணாநிதி.

குடும்ப அரசியல்
ஸ்டாலின் யார் என்று கேட்டால் கருணாநிதியின் மகன் என்று சிறு பிள்ளை கூட சொல்லிவிடும். அதற்குப் பின்னால் தான் அவருடைய அரசியல் நடவடிக்கைகள் பேசப்படும். அவர் அவருடைய அப்பாவின் நிழலில் தான் வாழ்கிறார் என்ற பல்வேறு விமர்சனங்களைக் கடந்து தான் ஸ்டாலின் தன்னுடைய கடின உழைப்பால், செயல் தலைவர் எனும் பதவியைப் பெறும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

ஸ்டாலின் - கருணாநிதி உறவு
கருணுாநிதிக்கும் ஸ்டாலினும் அப்பா- மகன் உறவை இந்த தமிழ்நாடும் தமிழக மக்களும் தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலினுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவர் கருணாநிதியை அப்பா என்றே அழைப்பது கிடையாதாம். அவருக்கு விவரம் தெரிந்து, கருணாநிதியை உற்று நோக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து, ஸ்டாலினுக்கு கலைஞர் தலைவராக தெரிந்திருக்கிறார்.
கருணாநிதியை எப்போதும் தலைவர் என்றே அழைத்து வந்தார் ஸ்டாலின். ஆனால் கருணுாநிதியின் இறப்புக்கு பின்னர், ஒரே ஒருமுறை அப்பா என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே! என்று ஒரு மகனாக அவர் தன் தந்தைக்கு எழுதிய இறுதி அஞ்சலி கடிதம் படிப்பவர்களின் நெஞ்சத்தை அப்படி கூர் வாள் கொண்டு துளைத்தது போல், வலியெடுக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்?...

அப்பா என அழைக்கவா தலைவரே!
இதுவரை தலைவர், தலைவர் என்று அழைத்துக் கொண்டிருந்த நான், இன்று ஒருமுறை உங்களைத் தலைவர் என்று அழைத்துக் கொள்ளட்டுமா என்று தன்னுடைய அரசியல் குருவும் தந்தையுமான கருணாநிதிக்கு ஒரு அஞ்சலி கடிதத்தை எழுதியிருக்கிறார் ஸ்டாலின். இதோ அந்த கடிதத்தில் உள்ள செய்திகள் அப்படியே உங்களுக்கு கொடுகு்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு முறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?
எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும்
எனது ஆருயிர் தலைவரே, இம்முறை ஏன்
சொல்லாமல் சென்றீர்கள்?
என் உணர்வில், உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,
இதயத்தில் இரண்டறக் கலந்துவிட்ட தலைவா!
எங்களை எல்லாம் இங்கேயே ஏன் ஏங்கவிட்டு,
எங்கே சென்றீர்கள்?
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்" என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 ஆண்டுகளுக்கு முன்பே எழுதினீர்கள். இந்த தமிழ் சமூகத்துக்காக இடையறாது உழைத்தது போதும்
என்ற மன நிறைவுடன் புறப்பட்டு விட்டீர்களா?
95 வயதில், 80 ஆண்டு பொதுவாழ்வுடன் சளைக்காமல் ஓடி, 'நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்' என்று போட்டி
வைத்துவிட்டு மறைந்து காத்திருக்கிறீர்களா?
திருவாரூர் மண்ணில் உங்கள் 95- வைத்து பிறந்த நாளாம் சூன் 3ம் நாள் நான் பேசும் போது, 'உங்கள் சக்தியில் பாதியை தாருங்கள்' என்றேன்.
அந்த சக்தியையும் பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாகப் பெற்ற
இதயத்தையும் யாசிக்கிறேன், தருவீர்களா தலைவரே?
அந்த கொடியோடு, இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்!
கோடானு கோடி உடன்பிறப்புகளின் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்... ஒரே ஒரு முறை....
"என் மேலான அன்பு உடன்பிறப்புகளே!"
என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு
நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு
இயங்க வைத்திடுமே!
"அப்பா அப்பா" என்பதை விட, "தலைவரே தலைவரே"
என நான் உச்சரித்ததுதான் என் வாழ்நாளில் அதிகம்
அதனால் ஒரே ஒரு முறை, இப்போது 'அப்பா'
என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே?
கண்ணீருடன்,
மு.க. ஸ்டாலின்...



Click it and Unblock the Notifications











