TRENDING ON ONEINDIA
-
எல்லாம் காங்கிரசால வந்தது.. திமுக கூட்டணியில் ஒரே குழப்பம்
-
லோக்சபா தேர்தலில் மோடியை வீழ்த்தப்போவது இதுதான்... பூதாகரமாக வெடிக்க தொடங்கிய பிரச்னையால் அலறும் பாஜக...
-
LKG Review: ஆர்ஜே பாலாஜியின் அரசியல் நையாண்டி... ஒர்க்கவுட் ஆச்சா இல்லையா... எல்கேஜி விமர்சனம்!
-
இந்த ரேகையை வெச்சு உங்க காதல், கல்யாணத்துல என்ன பஞ்சாயத்து வரும்னு பார்க்கலாம் வாங்க
-
"கடவுள் இல்லை" என்று கூறிய ஸ்டீபன் ஹாக்கிங்கை தவறென்று கூறும் 11 வயதுசிறுவன்!
-
கிறிஸ் கெயில், ஹெட்மையர் அசத்தல் ஆட்டம்.. தோல்விப் பாதையில் இருந்து மீண்ட வெ.இண்டீஸ்!
-
இந்தியாவின் முதுகில் குத்திய சீனா..? புல்வாமாவில் நடந்தது தீவிரவாதமே இல்லை எனச் சொல்லும் சீனா..?
-
பலங்கீர் பயணவழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், எப்போது எப்படி செல்வது
ஒரு நிமிஷம் நேரமிருந்தா இதப் படிச்சு பாருங்க!
ஒரு நிமிடத்தில் என்ன செய்திட முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் அதிகம், பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது என்ற எண்ணமும் நம் மனதில் இருக்கும். ஆனால் நமக்கே தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா?
60 விநாடிகளில் அப்படியென்ன அற்புதங்களை செய்து விட முடியும் என்று யோசிக்கிறீர்களா தொடர்ந்து படியுங்கள். இனி ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்கும் போது இவற்றில் ஏதாவது ஒன்று தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் என்று நினைவில் கொண்டு தொடருங்கள்.
நம்மைச் சுற்றி இந்த உலகில் என்ன நடக்கிறது நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத, கவனிக்க மறந்த சில விஷயங்களின் தொகுப்பு.
விமானம் :
சரியாக கணக்கிட்டால் ஒரு நாளைக்கு பகல் வேலைகளில் மட்டும் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் விமானங்கள் பறக்கின்றன. அதன் படி அதில் பயணிக்கும் மக்களை வைத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் வரை விமானத்தில் பறக்கிறார்கள்.
எண்ணெய் :
ஒவ்வொரு நிமிடத்திற்கும் அறுபத்தைந்தாயிரம் பேரல் எண்ணெய் வரை பயன்படுத்தப்படுகிறது. இது ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்படுகிற நீச்சல் குளத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு ஒப்பானது.
ஐஸ் :
அண்டார்டிகாவில் உள்ள ஐஸ் மலை உருகி நீராகிறது கிட்டதட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 லட்சம் டன் ஐஸ் வரை கரைகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு கரைந்ததை விட மூன்று மடங்கு வேகமாக தற்போது ஐஸ் கரைகிறதாம்.
இதற்கு முழு காரணம் சுற்றுப்புற சீர்கேட்டினால் புவி அதிகமாக வெப்பமடைந்திருப்பது தான்.
பர்கர் :
ஒரு நிமிடத்தில் 4500 பர்கர் விற்கப்படுகிறதாம்.... ஆச்சரியப்படாதீர்கள் இது ஒரு நிறுவனத்திடம் மட்டும் பெறப்பட்ட தகவல், பர்கர் தயாரிக்கும் நிறுவனங்களை எல்லாம் கணக்கிட்டால் பத்தாயிரத்தை தாண்டும்.
கார் புக்கிங் :
ஒலா,உபர் என கார் புக்கிங் வசதி கிடைத்ததிலிருந்து எல்லாரும் தங்களது போனிலேயே புக்கிங் செய்து கொண்டு சௌகரியமாக பயணிக்கிறார்கள். ஆட்டோவிலும், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இது அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது.
ஒரு நிமிடத்தில் மட்டும் கிட்டதட்ட 1389 கார் புக் செய்யப்படுகிறதாம்.
புத்தகம் :
மனிதன் ஒரு நிமிடத்தில் 900 வார்த்தைகளை படிக்கும் ஆற்றல் இருக்கிறது, ஆனால் அதனை தொடர்ந்து பயன்படுத்தாமல் மழுங்கடிக்கப்பட்டால் 900 வார்த்தைகள் என்ற அளவு படிப்படியாக குறையும். கவனச் சிதறல் அதிகம் ஏற்படும்.
குழந்தை :
ஒவ்வொரு நிமிடத்திற்கும் 113 குழந்தைகள் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள். இவர்களின் சரி பாதி பேர் வறுமையால் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.
திருமணம் :
குழந்தை பிறப்பை மட்டும் தெரிந்து கொண்டால் எப்படி திருமணக் கதையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடத்திற்கும் உலகில் 116 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. அதே நேரத்தில் 58 ஜோடிகள் விவாகரத்து பெறுகிறார்கள்.
மது :
மது குடிப்பது தவறானது என்று சொல்லப்பட்ட காலம் போய், ஐ எம் ஷோசியல் டிரிங்கர் என்று நாகரிகமாக சொல்லிக் கொள்வது அதிகரித்திருக்கிறது, இவர்களாகவே வாரம் ஒரு முறை குடித்தால் தவறில்லை, எப்போதாவது குடித்தால் தப்பில்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதனம் சொல்லிக் கொண்டு மது குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.
ஒரு நிமிடத்தில் 12,054 கலூன் மது குடிக்கப்படுகிறதாம்.
வீடியோ :
இணையத்தில் குறிப்பாக யூடியூபில் ஏராளமான வீடியோக்களை ரசித்திருப்போம், நாம் தேடும் எல்லா விஷயங்களுக்குமான வீடியோ பதிவு இடம்பெற்றிருக்கும். பலரும் தங்களுக்கு என்று சேனல் ஒன்றினை உருவாக்கி சம்பாதிக்கவும் செய்கிறார்கள்.
ஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 400 மணி நேர வீடியோ யுடியூபில் பதிவேற்றப்படுகிறது.
விக்கிபீடியா :
எதைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இப்போது ஆசிரியர்களை தேடியோ அல்லது அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களையோ தேடி அலைவதில்லை, நம்முடைய முதல் சாய்ஸ் இணையம் தான்.
பல தரப்பட்ட விஷயங்களை வைத்திருக்கும் விக்கிபீடியாவில் ஒரு நிமிடத்திற்கு ஏழு புதிய கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன .
குப்பை :
நவீனமும், பயன்பாடுகளும் அதிகரித்து விட்டால் அதன் கழிவுகளும் பெருகும் தானே..... இதோ ஒவ்வொரு நிமித்திற்கும் நம் பூமியில் எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறோம் தெரியுமா கிட்டதட்ட இரண்டாயிரத்து ஐநூறு டன்.
ஆம், 2500 டன் குப்பை ஒரு நிமிடத்தில் என்றால்.... ஒரு நாளைக்கு கணக்கு போட்டுப் பாருங்கள், அதோடு இவற்றை முறையாக அழிக்கிறோமா, மக்காத குப்பை தொடர்ந்து இப்படி சேகரிக்கப்படுவதால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தியுங்கள்.
பாடல் :
பலரது பொழுது போக்கே பாட்டு கேட்பது தான், ஹெட் போனை மாட்டிக் கொண்டு காலம் போவது தெரியாமல் கிடப்பார்கள். தங்களுக்கு பிடித்த பாடல், ஆல்பம் ஏதாவது ரிலீஸ் ஆகிவிட்டால் போட்டி போட்டுக் கொண்டு டவுன்லோடு செய்திடுவார்கள்.
இது பிடித்த ஆல்பம் வெளியாகும் போது மட்டுமல்ல ஒவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் பாடல்கள் வரை ஐடியூன்ஸில் டவுன்லோடு செய்யப்படுகிறது.
செடிகள் :
அழியும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிற விலங்கினங்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் விலங்குகள் மட்டுமல்ல செடிகளும் அழிகிறது.
ஒரு நிமிடத்தில் 0.15 சதவீதம் அழிகிறதாம்.
இது ஒன்றும் பெரிய அளவு இல்லையே என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு கணக்கிட்டு பார்த்தால் சற்றே அதிர்ந்திடுவார்கள். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 200 வகையான செடிகள் அல்லது விலங்கு,பறவை மற்றும் பூச்சியினங்கள் அழிந்து வருகிறது.
ஸ்மார்ட் போன் :
பெரும்பாலான மக்கள் நவீனத்திற்கு மாறிவிட்டிருக்கிறார்கள். கிராமம் நகரம் என்ற வித்யாசம் இல்லாமல் அனைத்து தர மக்கள் தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். மக்களின் தேவையறிந்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நிமிடத்திற்கும் 2,709 ஸ்மார்ட் போன் வரை விற்கப்படுகிறதாம்.
கூகுள் :
பலரது ஆபத்பாந்தவனகாக காக்கும் இடத்தில் தற்போது கூகுளை வைத்திருக்கிறார்கள். நாம் பெற நினைக்கிற எந்த வகை தகவலாக இருந்தாலும் கூகுளில் தேடி பெற முடியும். கணினியை வைத்து தான் பலரது பிழைப்பே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு நிமிடத்தில் கூகுளில் எவ்வளவு பேர் தகவல்களை தேடுகிறார்கள் தெரியுமா?
கிட்டத்தட்ட 2.3 மில்லியன்.