For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொலைகாரர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க!

குற்றங்களை கண்டுபிடிக்கும் துப்பறியும் குணம் உங்களுக்குள் இருக்கிறதா? நீங்கள் லாஜிக்காக, ஸ்மார்ட்டாக எப்படி யோசிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ள இதைப் படித்திடுங்கள்.

|

யாரையும் அவர்களுடைய வெளித்தோற்றத்தை பார்த்து எடை போட கூடாது. இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக சொல்ல முடியும். பாத்ததும் அப்டி நினச்சேன்... நெருங்கி பழகின அப்பறம் தான் உண்மை தெரியுதுன்னு எத்தன பேர்கிட்ட சொல்லியிருப்போம். அதவிட நாளுக்கு நவீன கொல்லைக் காரர்கள், கொலை காரர்கள் புதுப்புது டெக்னிக் பின்பற்ற துவங்கிவிட்டார்கள்.

ஒருவரது வெளித்தோற்றத்தை வைத்து அவரது குணநலன்கள் பற்றி அறிய முடியாது என்றால் வேறு எதை வைத்து தான் கண்டுபிடிப்பது? பிறர் வேண்டாம்... உங்களை நீங்களே கண்டுபிடித்திருக்கிறீர்களா? ஒவ்வொருவருக்கும் பிறரைப் பற்றி பார்க்க, விமர்ச்சிக்க மட்டுமே நேரமிருக்கிறது. ஒரு நிமிடம் உங்களைப் பற்றி சுயமாக உங்களுடைய கேரக்டர் எப்படிப்பட்டது, குரூர எண்ணம் படைத்தவர்களா? அல்லது சாந்தமான குணம் கொண்டவா? கோபக்காரரா? எப்போதும் பகைமை உணர்வுடன் இருப்பவர்களா? இப்படி உங்களைப் பற்றி நீங்களே எடை போட இந்த கட்டுரை உதவிடும்.

கீழே சில சம்பவங்கள் கொடுத்திருக்கிறோம் அந்த சம்பவத்தின் நெருக்கடியில் நீங்கள் எப்படி முடிவெடுப்பீர்கள் என்பதையும் கொடுக்கப்பட்டிருக்கும் விடையையும் ஒப்பிட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடுக்குமாடி கட்டிடம் :

அடுக்குமாடி கட்டிடம் :

பத்து மாடி கொண்ட அடுக்குமடி கட்டிடம் அது. ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லாத ஒரு மதிய வேலையில் அந்த அடுக்குமாடியிலிருந்து ஒருவர் விழுந்து இறந்துவிடுகிறார்.

தகவலறிந்து கூட்டம் கூடுகிறது. போலீசும் வருகிறது. அவர் இந்த கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்கிறார்கள். வெளியில் இருந்த சிசிடிவி காட்சிகள் ஆராயப்படுகிறது. சொன்னது போலவே மேலேயிருந்து விழுகிறார். தற்கொலை தான் என்று அனைவரும் உறுதி செய்கிறார்கள்.

போலீசாரும் அப்படியே இதை முடித்து வைக்க நினைத்த நேரத்தில் ஒரேயொரு போலீஸ் அதிகாரி இது கொலை என்று அடித்துச் சொல்கிறார். அதோடு அதை நிரூபிக்கவும் செய்தார்....எப்படி?

கொலை :

கொலை :

போலீஸ் வெளியில் விசாரணை செய்து கொண்டிருந்த போது அந்த அதிகாரி மட்டும் கட்டிடத்திற்கு செல்கிறார். முதல் மாடிக்குச் சென்று பிணம் விழுந்த பகுதியை கீழே குனிந்து பார்க்கிறார்.

பின் ஜன்னலைத் திறந்து அங்கிருந்து ஒரு காயினை தூக்கிப் போடுகிறார் அது பிணம் விழுந்த பகுதியை விட சற்று கீழ் நோக்கி விழுகிறது. ஆக அவர் முதல் மாடியிலிருந்து விழ வில்லை என்பது உறுதியாகிறது.

பின் இரண்டாம் மாடி இதே போல ஜன்னலைத் திறந்து கீழ் நோக்கி ஒரு காயினைப் போடுகிறார்.... இரண்டாம் மாடியும் இல்லை இப்படியே பத்து மாடிகள் செய்து பார்த்த பின்பு தான் இதைக் கொலை என்று சொல்லியிருக்கிறார்.

முதலாவது காரணம், பத்து மாடியிலுமே ஜன்னல்கள் மூடியிருந்திருக்கிறது. ஜன்னல் வழியே குதித்து தற்கொலை செய்திருந்தால் ஜன்னல் எப்படி மூடியிருக்கும்?

ஜன்னல் வழியே இவர் கீழே போட்ட காயின் விழுந்த திசைக்கும் பிணம் விழுந்த திசைக்கும் தொடர்பே இல்லாமல் இருந்திருக்கிறது. ஆக இது நிச்சயம் கொலை தான் என்று முடிவு செய்கிறார்கள்.

அம்மா :

அம்மா :

அந்த வீட்டில் அப்பா இல்லை. அம்மாவும் இரண்டு பெண்களும் மட்டுமே இருந்தார்கள், அம்மா வேலைக்குச் சென்றே இரண்டு பெண்களை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் வளர்த்தார். ஒரு பெண் கல்லூரி படித்துக் கொண்டிருந்தாள் இன்னொரு பெண் பள்ளிப்படிப்பு.

வேலைக்குச் சென்றுவிட்டு இரவு களைப்பாக வந்து படுத்த அம்மா மறுநாள் எழுந்தரிக்கவேயில்லை.அண்டை வீட்டினர்,உறவினர்கள் எல்லாரும் வருகிறார்கள். மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு அவர் நான்கு மணி நேரம் முன்பாகவே இறந்துவிட்டார் என்கிறார்.

கொலைகாரி :

கொலைகாரி :

இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடுகிறது. பலரும் வந்து அந்தப் பெண்களுக்கு ஆறுதல் சொல்கிறார். இருவருமே விழுந்து விழுந்து அழுகிறார்கள். கதறுகிறார்கள்.

அதே நாளில் அந்த இறுதிச் சடங்கிற்கு ஓர் இளைஞன் ஒருவன் வந்திருக்கிறான். அவன் யாரென்று இந்த இரு பெண்களுக்குமே தெரியவில்லை, அவனது நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் தெரிகிறது இவன் யாராய் இருக்கும் எதற்காக நம் வீட்டிற்கு வந்திருக்கிறான் என்று தொடர்ந்து கவனிக்க, பெரிய பெண்ணுக்கு அந்த இளைஞனுடன் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.

இரண்டு நாட்களில் வந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பிவிட்டாரக்ள், அந்த இளைஞனும் கிளம்பிவிட்டான். ஆனால் அவனது நினைவு மட்டும் அந்த பெண்ணுக்கு விடவேயில்லை எப்படியாவது அவனை சந்தித்து பேசிட வேண்டும் என்று நினைக்கிறாள். அதற்காக திட்டமிடுகிறாள்.

கைது :

கைது :

மறுநாள் காலை முன்னரையில் படித்துக் கொண்டிருந்த தங்கை பிணமாக கிடக்கிறாள். போலீசார் விசாரித்து அக்கா தான் கொலைகாரி என்று கைது செய்து அழைத்துச் சென்றார்கள். இதில் அக்கா தான் கொலைகாரி என்பதை போலீஸ் எப்படி கண்டுபிடித்தது.

தன் அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வந்த இளைஞன் தங்கையின் இறுதிச் சடங்கிற்கும் வருவான் என்று நினைத்து தங்கையை கொலை செய்திருந்தாள்.

தாத்தா :

தாத்தா :

தன் இரண்டு மகன்களும் வெளியூரில் செட்டில் ஆகிவிட தன் பூர்விக வீட்டில் அந்த தாத்தா மட்டும் மகன்கள் அளிக்கும் பணத்தில் வசித்து வந்தார். உணவு சமைக்க வேலைக்காரர்,தோட்ட பராமரிப்பாளர்கள் என ஐந்தாறு வேலைக்காரர்கள் வீட்டைச் சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்து கொண்டேயிருப்பார்கள்.

அதோடு தான் தனிமையில் இருப்பதை உணரக்கூடாது என்பதற்காக பேப்பர் போடுபவர், கேஸ் விற்பனையாளர், கேபிள் டிவி,போஸ்ட் மேன்,இப்படி யார் வந்தாலும் கதை பேச ஆரம்பித்து நட்பாகிவிடுவார் அந்த தாத்தா.

கொலை :

கொலை :

அன்று வியாழக்கிழமை. எப்போதும் பத்து மணிக்குத்தான் வேலைக்காரர்கள் வந்து வேலையை ஆரம்பிப்பார்கள். தோட்டக்கரருக்கு வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தான் வேலை.

வாசலில் கொரியர் கொடுக்க வந்த இளைஞன் நீண்ட நேரம் பெல் அடிக்கிறான். வீட்டிலிருந்து யாருமில்லை, அந்த தாத்தா எங்க போனாரு இந்நேரம் தோட்டத்துல வாக்கிங் போய்ட்டு பேப்பர் படிச்சுட்டு இருப்பாரே என்று தோட்டமிருக்கும் பக்கம் எட்டிப் பார்க்கிறான் அங்கு தாத்தா இல்லை. இவனாகவே கேட்டைத் திறந்து உள்ளே செல்கிறான் அங்கே டேபிளில் தாத்தா மயங்கி கிடக்கிறார் பால் கீழே சிந்திக்கிடக்கிறது. தண்ணீரைத் தெளித்து பார்கிறார் தாத்தா எழுந்தரிக்கவேயில்லை.

உடனடியாக போலீசுக்கும் ஊர் தலைவருக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இவன் தான் கொலைகாரன் :

இவன் தான் கொலைகாரன் :

அநியாயமா பணத்துக்காக பெரியவர கொன்னுட்டீங்களே என்று ஊர்தலைவர் கொரியர் கொடுக்க வந்தவனைப் பார்த்து கத்துகிறார். அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது நடந்த விவரங்களை விவரிக்கிறான் யாரும் அவனை நம்பவில்லை. ஒரு மணி நேரம் வீட்டை சுற்றி நோட்டம் விட்ட போலீஸ் உண்மையான கொலை காரனை கைது செய்தார்கள் எப்படி?

அந்த தாத்தா வாக்கிங் சென்று விட்டு பேப்பர் படிப்பது வழக்கம். தோட்டத்தின் அருகில் போடப்பட்டிருந்த டேபிளில் ஒரு செய்தித்தாள் இருக்கிறது. உள்ளே டிவி ஸ்டாண்டுக்கு கீழே தினசரி பேப்பர்களை படித்து முடித்ததும் எடுத்து வைத்திருக்கிறார். டேபிளில் இருப்பது புதன் கிழமை பேப்பர். டிவி ஸ்டாண்டுக்கு கீழே மேலே இருந்தது செவ்வாய் கிழமை பேப்பர். இன்று வியாழக்கிழமை பேப்பர் எங்கே?.... ஆக அவன் தான் கொலை காரன் என்பதை போலீசார் எளிதாக கண்டுபிடித்தார்கள்.

காணவில்லை :

காணவில்லை :

அது ஓர் நீதிமன்றம். குற்றவாளியாக நிறுத்தப்பட்ட இளைஞர் மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டு மனைவியை கொலை செய்துவிட்டான் என்பது இன்று தான் இறுதித்தீர்ப்பு.

விவாதம் சூடாக நடந்து கொண்டிருந்தது. என் மனைவி மீது நான் மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன் அவளை நான் எப்படி கொலை செய்வேன் என்று வாதாடினான்.

அவனுக்கு ஆதரவாய் வாதிட்ட வக்கீலும் உண்மையில் அவர் கொலை செய்யவில்லை. மனைவி திடீரென்று காணமல் போய்விட்டாள் அது தான் உண்மை என்று வாதிடுகிறார்.

நீங்கள் நம்பவில்லை என்றால் இப்போது பாருங்கள் அந்த வாசல் வழியே அவர் மனைவி வருவார், இந்த நீதிமன்றத்திற்கு உண்மை விளங்கும் என்கிறார் ஒரு கணம் கோர்ட் ஸ்தம்பிக்கிறது.

சில நிமிடங்களில் கூண்டில் நின்றவனுக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பை அறிவிக்கிறார். ஏன்?

என்னைப் பார்க்கிறான் :

என்னைப் பார்க்கிறான் :

எல்லாரும் வக்கீல் சொன்ன அந்த வாசலின் பக்கமே வேடிக்கைப் பார்க்கிறார்களா. இறந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண், இறந்துவிட்டதாக சான்று அளிக்கப்பட்ட பெண், ஆதரத்துடன் இறந்துவிட்டதாக நிரூபிக்கப்பட்ட பெண் எப்படி எழுந்து வர முடியும். இதில் இன்னொரு மர்மம் இருக்கிறது என்பதை அறிய எல்லாருமே ஆர்வமுடன் அங்கே திரும்பினார்கள்.

ஆனால் குற்றவாளியும் வக்கீலும் திரும்பாமல் நீதிபதியையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இறந்தவள் திரும்ப வரப்போகிறாள் என்று சொன்னால் அவள் மீது அதிக பாசம் வைத்திருக்கும் கணவனும் ஆர்வத்துடன் திரும்பி பார்த்திருக்க வேண்டுமல்லவா?

அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என்று சொல்லி என்னையே உற்று கவனித்துக் கொண்டிருந்தான்.

அதாவது அவனுக்கு மனைவியை விட நான் சொல்லப்போகிற தீர்ப்பு தான் முக்கியமாய் தெரிந்திருக்கிறது. அப்போதே அவன் இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி செய்கிறான் என்பது புரிந்து விட்டது என்றிருக்கிறார்.

திருடர்கள் :

திருடர்கள் :

அன்றைய தினம் காலை ஒரு ஏழு மணிக்கு மிகவும் பதட்டமாக ஒருவர் வருகிறார். நானும் மனைவியும் வீட்டில் தனித்தனி அறைகளில் படுத்திருந்தோம். எப்போதும் நான் எழுவதற்கு முன்னாலேயே எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்திருக்கும் மனைவி இன்றைக்கு தன் அறையிலிருந்து எழுந்து வரவேயில்லை.

நானும் சிறிது நேரம் காத்திருந்தேன், பின் அலுவலகம் கிளம்ப தாமதமாகிறது சீக்கிரம் வா என்று அழைக்க அவள் கதவைத் தட்டினேன் அவள் திறக்கவில்லை கதவைத் திறந்து பார்த்தேன் திறந்து கொண்டது உள்ளே சென்று பார்த்தால் கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடக்கிறாள்.

அந்த அறையில் இருந்த பீரோவில் இருந்த நகை, பணம் உட்பட பல பொருட்கள் காணவில்லை. அங்கேயிருந்த ஜன்னலை உடைத்துக் கொண்டு திருடர்கள் உள்ளே நுழைந்து இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

நீ தான் கொலைகாரன் :

நீ தான் கொலைகாரன் :

போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைகிறது. மனைவி இறந்து கிடந்ததாக சொன்ன அறைக்குள் சென்றதுமே கணவன் தான் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுவதை கண்டுபிடித்து கைது செய்தார்கள். எப்படி?

கொள்ளையர்கள் நுழைந்ததாக காண்பிக்கப்பட்ட ஜன்னல் வழியே போலீஸ் எட்டிப் பார்த்தார். கண்ணாடிச் சில்லுகள் வெளியில் குப்பையாக விழுந்து கிடந்தது, உள்ளேயும் இரண்டு மூன்று துண்டுகள் விழுந்திருந்தது.

போலீசுக்கு உண்மை புரிந்து விட்டது. கைது செய்து அழைத்துச் செல்லும் போது, கணவன் உண்மையை ஒப்புக் கொண்டு எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்கிறான்.

வெளியிலிருந்து திருடர்கள் கண்ணாடியை உடைத்திருந்தால் கண்ணாடித் துண்டுகள் உள்ளே தான் விழுந்து நொறுங்கியிருக்கும் அந்த சத்தம் கேட்டு உங்கள் மனைவி எழுந்திருப்பார்.

Image Courtesy

கப்பல் திருடன் :

கப்பல் திருடன் :

அந்த ஜப்பான் கப்பல் அமெரிக்காவிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு தன் நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தது. கப்பல் இப்போது நடுக்கடலில் சென்று கொண்டிருக்கிறது.

எங்கு திரும்பினாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் தண்ணீர் மட்டுமே தெரிகிறது. அப்போது அந்த கப்பலின் கேப்டன் தன்னுடைய விலையுயர்ந்த மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு சிறிது நேரம் தூங்குகிறார். கண் திறந்து பார்த்தால் அந்த மோதிரத்தை காணவில்லை.

கப்பலில் இருந்த அனைவரையும் அழைத்து விசாரிக்கிறார், அடுத்த நிமிடமே குற்றவாளியை கண்டுபிடித்துவிட்டார் கேப்டன்.

ஜப்பான் :

ஜப்பான் :

முதலில் வந்தது சமையல்காரன், நான் ஃபிரிட்ஜ் இருக்கும் அறையில் இருந்தேன், அங்கு பிரிட்ஜில் இருக்கும் கறியை எடுக்கச் சென்றேன் என்கிறான். அடுத்தாக இன்ஜினியர் நான் இன்ஜின் அறையில் இருந்தேன் என்கிறார்.

அடுத்ததாக வந்த பாதுகாப்பு அதிகாரி கப்பலின் மேல் தளத்தில் கொடியை தவறுதலாக தலைகீழாக கட்டியிருந்தார்கள் அதனை மாற்றி கட்டிக் கொண்டிருந்தேன் என்கிறார். கப்பலில் இருந்த ரேடியோ ஆஃபிசர், கப்பல் எந்த திசையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற தகவலை போர்ட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன் என்கிறார்.

நேவிகேஷன் ஆஃபிசர் வந்தார் அவர், நான் என்னுடைய அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன் என்கிறார்.

எல்லாவற்றையும் கேட்ட கேப்டன் பாதுகாப்பு அதிகாரியே குற்றவாளி என்று சொல்லி விசாரிக்கிறார். முதலில் மறுத்தவர் பின்னர் ஒப்புக் கொண்டு திருடிய மோதிரத்தை திரும்பக் கொடுத்து மன்னிப்பு கேட்கிறான்.

எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்கையில் நான் ஜப்பானிலேயே பிறந்து வளர்ந்தவன். இது ஜப்பான் கப்பல், இந்த கப்பலில் ஏற்றப்பட்டிருப்பது ஜப்பான் கொடி ஜப்பான் கொடியை தலைகீழாக பார்த்தாலும் ஒரே மாதிரி தான் தெரியும் என்று சொல்லி சிரிக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Interesting Crime Riddles

Interesting Crime Riddles
Desktop Bottom Promotion