Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடுவது எப்படி?
இந்த வருடம் செப்டெம்பர் 13 ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும், விநாயகரின் அருளை பெறவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார
இந்தியா என்பது பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கலந்த ஒரு நாடு. இங்கு பல பண்டிகைகள் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் ஒருசில பண்டிகைகள் மட்டுமே இந்தியா முழுவதும் கோலாகலத்துடன் கொண்டாப்படுகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் விநாயகர் சதுர்த்தி. வட இந்தியாவில் கணேஷ் சதுர்த்தி என்று கொண்டாடப்படும் இந்த விழா அவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

இந்துக்களின் மிக முக்கியமான ஒரு விழாவான இது வருடம்தோறும் செப்டெம்பர் மாதங்களில் கொண்டப்படுகிறது. இந்த வருடம் செப்டெம்பர் 13 ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடவும், விநாயகரின் அருளை பெறவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிள்ளையார்
" வினை தீர்ப்பான் விநாயகன் " என்று கூறுவார்கள். அதற்கேற்றாற் போல பிள்ளையாரை வழிபடுவது உங்களை அனைத்து சங்கடங்களில் இருந்தும் பாதுகாக்கும். சிவபெருமான் - பார்வதி அவர்களின் முதல் புதல்வனான கணேசன் செல்வத்தையும், வாழ்வில் செழிப்பையும் வழங்கக்கூடியவர். அனைத்து வீடுகளிலும், பெரும்பாலான தெருக்களிலும் இருக்கும் விநாயகரை வணங்கி தொடங்கும் எந்த ஒரு காரியமும் ஜெயமாகும் என்பது நம் நாட்டில் நிலவும் பரவலான நம்பிக்கையாகும். விநாயகரை தினமும் வழிபட்டாலும், விநாயகர் சதுர்த்தி அன்று வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.

பூஜைக்கு தேவையானவை
விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைக்கு தேவையானவை விநாயகர் சிலை, மல்லிகை,தாமரை மற்றும் எருக்க மலர், சிவப்பு சந்தனம், பழங்கள், வெற்றிலை, அருகம்புல், கொழுக்கட்டை, தேங்காய், கற்பூரம், நெய்விளக்கு, உணவு. இவை அனைத்தும் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்தவை ஆகும். இவை அனைத்தையும் வைத்து பின்வரும் முறையில் பூஜை செய்து வழிபட்டால் சகல செல்வங்களும் உங்களுக்கு கிடைக்கும்.

வீட்டை சுத்தப்படுத்துங்கள்
விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு முன்பு வீட்டை சுத்தம் செய்ய வேண்டியது அவசியமாகும். பூஜை தொடங்குவதற்கு முன் குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் பூஜையை தொடங்குங்கள். வீட்டு வாசலில் தோரணங்கள் அல்லது மாவிலைகள் தொங்கவிடலாம்.

கோலம்
வீட்டு வாசலில் கோலம் போடுங்கள். அரிசி மாவு கோலமாக இருந்தால் கூடுதல் சிறப்பு. கலர் பொடிகளை உபயோகப்படுத்தியும் போடலாம். இது உங்கள் இல்லத்திற்குள் நேர்மறை சக்திகளை கொண்டுவர உதவியாய் இருக்கும்.

பிள்ளையார் சிலை
விநாயகர் சதுர்த்திக்கு ஒரு வாரத்திற்கு முன்னரே பல வகையான விநாயகர் சிலைகள் கடைகள் விற்க தொடங்கிவிடும். அதில் உங்கள் மனம் கவர்ந்த ஒரு சிலையை வாங்கி பூஜையறையில் வைக்கவும். இது அந்த கணேசனே உங்கள் வீட்டுக்கு வருவது போலாகும். பிள்ளையார் சிலைக்கு பட்டாடை உடுத்துங்கள். விநாயருக்கு முன் அவருக்கு பிடித்த அருகம்புல், கொழுக்கட்டை, வெற்றிலை போன்றவற்றை படைத்து அவர் விரும்பும் எருக்கம் பூ மாலையையும் அணிவிக்கவும். பின்னர் இரண்டு நெய் விளக்குகளை அவருக்கு முன் ஏற்றி வைக்கவும்.

மந்திரங்கள்
விநாயகர் மிகவும் அன்பான கடவுளாவார். அவரை வழிபட அதிக சிரமபட தேவையில்லை. அவரை வணங்க தூய மனமும், " ஓம் கம் கணபதியே " என்னும் எளிய மந்திரமே போதும். இந்த மந்திரத்தை மனதார விநாயகரை நினைத்து கூறினாலே உங்களுக்கு வெற்றிகளை அள்ளி தருவார் பிள்ளையார்.

உணவு
பிள்ளையார் ஒரு உணவுப்பிரியர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை பூஜையில் இருக்க வேண்டியது அவசியம். அது மட்டுமின்றி தேங்காய், சுண்டல், வெல்லம் லட்டு போன்றவையும் வைத்து வழிபடலாம். பூஜை முடிந்த பின் இவற்றை பிரசாதமாக கொடுங்கள்.

தீபாராதனை
படையல் இட்டு முடிந்த பிறகு தீபாராதனை காட்டும் போது மணியோசை எழுப்புங்கள். இது பிள்ளையாருக்குக் மிகவும் பிடித்த ஒன்றாகும். இது உங்கள் வீட்டில் உள்ள தீயசக்திகளை விரட்டியடிக்கும்.

நீரில் விடுதல்
பூஜையெல்லாம் முடிந்து அனைவருக்கும் பிரசாதம் கொடுத்தவுடன் பிள்ளயாரை கடலிலோ அல்லது ஆற்றிலோ விட வேண்டியது அவசியம். அவ்வாறு நீரில் விடும்போது அந்த சிலையுடன் சில நாணயங்களையும், மலர்களையும் சேர்த்து விடவேண்டியது அவசியம். இது நமது துன்பங்களை அவரிடம் ஒப்படைத்து விடுவதாகவும், அந்த துன்பங்களை அவர் தன் துன்பமாக எண்ணி நீக்கிவிடுவார் என்றும் நம்பப்படுகிறது.

பலன்கள்
விநாயகர் சதுர்த்தி வழிபாடு உங்கள் வாழ்வில் இருக்கும் அனைத்து கஷ்டங்களையும் நீக்கி நீங்கள் வாழ்வில் வளம் பெற உதவும். மேலும் உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்டியடித்து உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், அமைதியையும் வழங்கும்.



Click it and Unblock the Notifications