For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ரசாயன குண்டுகள் வீசுவதை முதலில் ஆரம்பித்தது யார்?

  |

  அது மிகவும் கொடுமையான அனுபவம், மருத்துவமனை வளாகம் முழுவதும் மக்கள் வந்து குவிந்து கொண்டேயிருக்கிறார்கள்.எங்கு திரும்பினாலும் அழுகை, உயிரை காப்பாற்றிக் கொள்ள இறுதிக்கட்ட போராட்டத்தில் இருக்கிறார்கள். தன்னையும் மறந்து ஓலமிடுகிறார்கள். சிலருக்கு கடுமையான இருமல் இருக்கிறது மூச்சுத்திணறலும், தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும் உடலை அணைத்துக் கொண்டு ஒரு தந்தை அழுது கொண்டிருக்கிறார்.

  இருமல் மூச்சுத்திணறல் கண்ணெரிச்சல் என்றே வருகிறார்கள் அவர்களுக்கு என்ன சிகிச்சையளிக்க, அவர்கள் சுவாசித்தது என்ன வகை காற்று என்று எதுவும் அங்கிருக்கும் பணியாளர்களுக்கு பிடிபடவில்லை, வந்தவர்களை ஆசுவாசப்படுத்தி பேசி உட்கார வைப்பதற்குள் பொத்து...பொத்தென்று கீழே செத்து விழுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இறந்தது பலரும் குழந்தைகள்.

  History of Chemical War

  Image Courtesy

  பல ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ நடந்த விபத்து அல்ல இது. கடந்த வாரம் சிரியாவில் நடைப்பெற்ற ரசாயன குண்டு தாக்குதலின் ஒரு காட்சி தான் இது.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   சிரியா :

  சிரியா :

  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை வெளியிட்டது . இருந்தும் அங்கே அரசாங்கத்திற்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

  தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகில் உள்ள கிழக்கு கவுட்டா என்னும் ஊர் தான் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கடைசி மற்றும் முக்கியமான ஊராக கருதப்படுகிறது.

  அமைதி ஒப்பந்தம் :

  அமைதி ஒப்பந்தம் :

  கிளார்சியாளர்களின் பிடியிலிருக்கும் கிழக்கு கவுட்டாவை கைப்பற்ற வேண்டுமென்று தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னரும் அங்கே அரசுப்படைகள் தொட தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்கள் உதவியுடன் ஐ.எஸ் பயங்கரவாதிகள்,அல்கொய்தா பயங்கரவாதிகள் இருக்கும் பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தியது அரசுப் படை.

  அமைதி ஒப்பந்தத்தின் படி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தவிர, கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் போர் நிறுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டது. எனினும், கி்ளர்ச்சியாளர்கள் இருக்கும் பகுதியில் பயங்கரவாத அமைப்பும் ஒரு சிறுபகுதியில் இயங்கிக் கொண்டிருப்பதாக காரணம் காட்டி தொடர் தாக்குதல் நடத்துகிறது அரசாங்கம்.

  ரசாயன குண்டு :

  ரசாயன குண்டு :

  இந்த தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்டது, அப்பாவி பொதுமக்கள் தான். இதில் மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை சரியாக கணக்கிடக்கூட முடியவில்லை. ஒரு வாரத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது எரிவாயு தாக்குதல் தானா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்திருக்கிறது. இதே நேரத்தில், நாங்கள் எந்த ரசாயன குண்டையும் பயன்படுத்தவில்லை என்று சிரிய அரசாங்கம் கூறியிருக்கிறது.

  பூமியின் நரகம் :

  பூமியின் நரகம் :

  ஐ.நா செயலாளரான ஆண்டோனியோ குட்டரஸ் கிழக்கு கவுட்டாவை பூமியின் நரகம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இங்கு நடக்கக்கூடிய மனிதாபாமனமற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

  கடந்த ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி சிரியாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கான் ஷேக்ஹூன் நகரத்தில் இதே போல ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிரிய அரசாங்கம் தான் அதற்கு காரணம் என ஐ.நா அக்டோபரில் செய்தி வெளியிட்டது.

  Image Courtesy

  எங்கு துவங்கியது? :

  எங்கு துவங்கியது? :

  1915 ஆம் ஆண்டு முதலாம் உலக்ப்போரின் போது தான் முதன் முதலில் ரசாயன குண்டு பயன்படுத்தப்பட்டது என்றால் இதன் துவக்கம் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்தே துவங்கிவிடுகிறது. கி.மு 479 ஆம் ஆண்டு கிரேக்க நகரத்தில் இருக்ககூடிய இரண்டு முக்கிய நகரங்களான ஏத்தன்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா ஆகிய இரண்டு நகரங்களுக்கிடையே போர் நடைப்பெற்றது.

  இதனை பெலோபோனீசியன் வார் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த போரின் போது பெலோபோனீசியன் படை வீரர்கள் தங்களது எதிராளியைத் தாக்க சல்ஃபர் கலந்த புகை மற்றும் தீப்பொறிகளை ஏற்படுத்தினார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கொத்து கொத்தாக வீரர்கள் செத்து விழ, இந்த வகைத் தாக்குதல் மிக வேகமாக பிரபலமடைந்தது.

  Image Courtesy

  விஷ குண்டுகள் :

  விஷ குண்டுகள் :

  முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் என்ன தெரியுமா? பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளும் இனி கெமிக்கல் கலந்த ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது, அது.... குண்டு, விஷம் கலந்த துப்பாக்கி தோட்டா என எதுவும் பயன்படுத்தக்கூடாது என 1675 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இதனை ஸ்ட்ராஸ்போர்க் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.

  பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்கும் அல்ஜீரியாவுக்கும் போர் நடைப்பெற்றது. இதில் 1845ஆம் ஆண்டு அல்ஜீரியாவில் வாழ்ந்த பெர்பர் என்ற பழங்குடியின மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ஒரு குகையில் அடைத்து அவர்களுக்கு விஷப் புகை நுகரச் செய்து ஒப்பந்தத்தை மீறியது பிரெஞ்சு.

  Image Courtesy

  சிவில் வார் :

  சிவில் வார் :

  அதன் பிறகு 1861 - 65 ஆம் ஆண்டு வரை அமெரிக்கவில் நடந்த உள்நாட்டுப் போரின் போது இரண்டு பக்கமும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். இதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளை யோசிக்காமல் நியூயார்க்கில் பள்ளி ஆசிரியாராக இருந்த ஜான் டவுட்டி என்பவர் க்ளோரின் கேஸ் பயன்படுத்தலாம் என்று யோசனை வழங்குகிறார்.

  ஈஷாம் வாக்கர் என்பவர் விஷ வாயு குறித்த யோசனையை முன் வைக்கிறார். அதன் பிறகு பத்தாண்டுகள் கழித்து 1874 ஆம் ஆண்டு, போரில் இது போன்ற ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என சர்வதேச ஒப்பந்தம் போடப்படுகிறது. இதில் பெரும்பாலான மேற்குலக நாடுகள் இருந்தன.

  Image Courtesy

   முதலாம் உலகப்போர் :

  முதலாம் உலகப்போர் :

  1914ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டினார் போலீசார் கூட்டத்தை கலைக்க பயன்படுத்தும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுகிறார்கள். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஜெர்மன் படை டயன்ஸிடைன் க்ளோரோ சல்ஃபேட் நிறைந்த மூன்றாயிரம் குண்டுகளை வீசுகிறார்கள். இது நுகர்ந்தவுடன் நுரையிரலை கடுமையாக பாதிக்கப்பட்டு மரணமடைவார்கள்.

  ஆனால் குண்டு தயாரிப்பில் நிகழ்ந்த சில மாற்றங்களால் உள்ளே இருந்த கெமிக்கல் ஆவியாகிவிடுகிறது. கெமிக்கல் குண்டு இம்முறை எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. ஜெர்மன் படையினர் வீசிய குண்டுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பது பிரிட்டீஷ் படையினருக்கு தெரியாமலே இருந்தது.

  Image Courtesy

  அடுத்த முயற்சி :

  அடுத்த முயற்சி :

  அதன் பிறகு 1915 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெர்மன் படை பதினெட்டாயிரம் ரசாயன குண்டுகளை தயாரிக்கிறார்கள். அதில் கண்களுக்கு எரிச்சலூட்டும் க்சைல் ப்ரோமைட் நிரப்பப்படுகிறது. இதனை போலினோவில் ரஷ்ய படைகளுக்கு எதிராக வீசுகிறார்கள். ஆனால் அங்கிருந்த அதீதமான குளிரினால் உள்ளேயிருந்த ரசாயனம் ஆவியாகிவிடுகிறது. இதனால் இப்போது ஜெர்மன் படைக்குத் தோல்வி. பிரெஞ்சு வீரர்களுக்கு இந்த ரசாயனம் குறித்து எந்த முன் அபிப்ராயமும் இருந்திருக்கவில்லை.

  Image Courtesy

  க்ளோரின் :

  க்ளோரின் :

  பல தோல்விகளுக்குப் பின் ஜெர்மன் ரசாயன குண்டு தயாரிக்கும் தன்னுடைய வேலையை நிறுத்தவில்லை இந்த முறை மிகப்பெரிய அளவில் தயாரித்தது. பெல்ஜியத்தில் இருக்கும் யிப்ரஸ் என்ற ஊரில் நடைப்பெற்ற போரின் போது 170 மெட்ரிக் டன் கொண்ட க்ளோரின் கேஸ் 5730 சிலிண்டர்களில் அடைக்கப்பட்டிருந்தது.

  அவை எரிக்கப்பட்டு நான்கு மைல் தொலைவிலிருந்து எதிரி நாட்டுப் படைகளை நோக்கி அனுப்பப்பட்டது எதிரில் ஆயுதங்களுடன் நின்றிருந்த வீரர்களுக்கு எதோ ஒரு சிலிண்டர் உருண்டு வருகிறது, என்ன இது இதற்குள் வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வளவு பெரிய குண்டு இப்போது வெடிக்கப்போகிறதா? ஒரே நேரத்தில் ஏன் இவ்வளவு குண்டுகளை அனுப்ப வேண்டும் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சிலிண்டர்கள் அருகில் வந்துவிட்டிருந்தன. மூச்சுத்திணறல் கண்ணெரிச்சலுடன் மயங்கிவிழுந்தார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்தார்கள், ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் மயக்க நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்கள்

  Image Courtesy

  விழித்துக் கொண்டது பிரிட்டிஷ் :

  விழித்துக் கொண்டது பிரிட்டிஷ் :

  தன் படையின் பெரும்பகுதியை இழந்துவிட்ட பிரிட்டிஷ் படை ஜெர்மன் க்ளோரின் கலந்த ரசாயன தாக்குதல் நடத்தியிருக்கிறது என்பது தெரிந்தது, ஜெர்மன் படையை எதிர்த்து பிரிட்டிஷ் படை முதன் முதலாக ரசாயன குண்டினை பயன்படுத்தியது. அவர்களும் சிலிண்டரில் க்ளோரின் கேஸ் நிரப்பி அதனை ஜெர்மன் வீரர்கள் மத்தியில் பரவச் செய்தார்கள். இதற்கு பேட்டில் ஆஃப் லூ என்று அழைக்கிறார்கள்.

  இரண்டு மாதங்களில் ஜெர்மன் படை மீண்டும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. இம்முறை க்ளோரினுக்கு பதிலாக போஸ்ஜென் என்ற ரசாயனம். நூறுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் படை இறக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள்.

  Image Courtesy

  ஜெர்மன் அட்டூழியம் :

  ஜெர்மன் அட்டூழியம் :

  அதன் பிறகு 1917 ஆம் ஆண்டு முதன் முதலாக ஜெர்மன் படையினர் மஸ்டர்ட் கேஸ் பயன்படுத்தினார்கள். பழைய ரசாயன தாக்குதலை விட இந்த முறை பன்மடங்கு வீரர்கள் ரசாயனத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  கடந்த வருடம் முழுவதும் ரசாயன தாக்குதல் உண்டாக்கிய தாக்கத்தை விட, கடந்த மூன்று வாரங்களாக இந்த மஸ்டர்ட் கேஸ் உண்டாக்கிய தாக்கம் அதிகம் எனுமளவுக்கு இந்த மஸ்டர்டர் கேஸின் வீரியம் இருந்தது.

  Image Courtesy

  அமெரிக்கா :

  அமெரிக்கா :

  மஸ்டர்ட் கேஸ் என்றால் என்ன? என அமெரிக்கா கெமிக்கல் வார்ஃபேர் சர்வீஸில் சோதனை செய்தார்கள் அதனுடைய முழு கதையையும், எப்படி தயாரிப்பது, ஏற்படுத்தும் தாக்கவும் என அத்தனையும் அறிந்து இனி அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிற குண்டுகளில் பத்து சதவீதம் குண்டுகளில் இந்த ரசாயனம் இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

  அப்படி தயாரித்த குண்டுகளை ஜெர்மன் படைகளுக்கு எதிராக வீசினார்கள் அமெரிக்கப்படை.

  Image Courtesy

  ஹிட்லர் :

  ஹிட்லர் :

  அமெரிக்கா நடத்திய இந்த ரசாயன தாக்குதலின் போது அடால்ஃப் ஹிட்லர் இருந்தார் அவருக்கு இந்த ரசாயன தாக்குதலினால் தற்காலிக பார்வையிழப்பு ஏற்பட்டது. உடனடியாக ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் இருந்த ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு ஹிட்லர் முதலாம் உலகப்போரில் பங்கேற்கவில்லை. ஹிட்லர் மட்டுமல்ல அந்த போரில் பங்கேற்ற ஏராளமான வீரர்களுக்கும் பார்வையிழப்பு ஏற்பட்டது.

  கிட்டத்தட்ட நவம்பர் மாதத்தில் 1.3 மில்லியன் பேர் இந்த ரசாயன தாக்குதலினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் 90000லிருந்து ஒரு லட்சம் பேர் வரை மரணித்திருந்தார்கள். இந்த பட்டியலுடன் முதலாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது.

  Image Courtesy

  ஜெனிவா :

  ஜெனிவா :

  1925 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உள்ள நெறிமுறை ஆணையம் போரில் ரசாயன குண்டுகள் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதித்தது. ஆனால் ரசாயன குண்டுகள் குறித்த ஆராய்சிகள், அதன் தயாரிப்புகள், அப்படி தயாரித்து சேமித்து வைப்பதற்கு எந்த தடையும் விதிக்கவில்லை.

  இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட பல நாடுகளை அழைத்திருந்தார்கள் அப்போது எல்லாருமே.... எங்களை யாராவது ரசாயன குண்டு கொண்டு தாக்கினால் பதிலுக்கு நாங்களும் ரசாயான குண்டுகளால் தான் தாக்குவோம் என்று சொல்லி கையெழுத்திட்டார்கள். இதனால் போட்டி போட்டுக் கொண்டு ரசாயன குண்டுகளை தயாரித்தார்கள்.

  Image Courtesy

  ரசாயன அரக்கன் :

  ரசாயன அரக்கன் :

  அதற்கடுத்து பத்தாண்டுகள் கழித்து 1935 ஆம் ஆண்டு எத்தியோப்பியாவில் மஸ்டர்ட் கேஸ் கொண்ட குண்டுகளை வீசி ஒப்பந்தத்தை மீறினார் முஸோலினி. தொடர்ந்து இரண்டாம் உலகப்போர் அப்போது நாசிப்படைகளை அழிக்க ரசாயன குண்டுகளை வீசியது ஜப்பான்.

  புதிது புதிதாக நுகர்ந்தவுடன் மரணம், நுகர்ந்ததால் நரம்பு மண்டலாம் பாதிக்கப்படும் அளவுக்கு என பல வீரியமிக்க கெமிக்கல் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டேயிருந்தார்கள்.

  Image Courtesy

  இன்றும் தொடர்கிறது :

  இன்றும் தொடர்கிறது :

  தொடர்ந்து பலரும் மாறி மாறி ரசாயன குண்டுகளை வீசி உலகத்தையே அழித்துவிடுவாரக்ள் என்று விழுத்துக் கொண்டு நெறிமுறைக்குழு 1972 ஆம் ஆண்டு ரசாயன குண்டுகளை தயாரிப்பது, சேமிப்பது, மேம்படுத்துவது என எல்லாவற்றிற்கும் தடை விதித்தது.

  இனி நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த போது 1980 ஆம் ஆண்டு ஈரான் ஈராக் போர் நடைப்பெற்றது அப்போது ஈராக் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தியதாக ஐ நா குற்றம் சுமத்தியது. தொடர்ந்து ஈரானும் தக்க பதிலடி கொடுக்க ரசாயன குண்டுகளை தயாரிக்க ஆரம்பித்தது. இப்படி ஆரம்பித்து ஆங்காங்கே சிறிது சிறிதாக ரசாயன தாக்குதல்கள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன.

  இதன் சமீபத்திய தாக்கம் தான் கடந்த வாரம் சிரியாவில் வெடிக்கப்பட்ட ரசாயன குண்டு. ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போது கடந்த முறையை விட வீரியமாக இருக்க வேண்டும் என்று சொல்லி கண்டுபிடிக்கப்படும் ரசாயன குண்டுகளால் அதிகம் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  History of Chemical War

  History of Chemical War
  Story first published: Tuesday, February 27, 2018, 12:46 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more