தமிழகத்தில் நுழைந்திருக்கும் ரத யாத்திரைக்கு பின்னால் இருக்கும் சீக்ரெட்!

Posted By: Staff
Subscribe to Boldsky

 ராமர் கோவிலை மீண்டும் அமைக்க வேண்டும், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உட்பட பல்வேறு கோரிக்கைகலை வலியுறுத்தி ராம ராஜ்ஜிய யாத்திரை கடந்த பிப்ரவரி மாதம் உத்திரபிரதேசத்தில் துவங்கியது. அங்கிருந்து பலரும் நடைபயணமாக ஆறு மாநிலங்களைக் கடந்து ராமேஸ்வரத்திற்கு வந்து முடிவடைவதாக இருந்தது.

இந்த ரத யாத்திரைக்கு தமிழகம் முழுவதும் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இன்று செங்கோட்டை வழியாக தமிழகம் வந்தடைந்துள்ளது. தொடர்ந்து மதுரையில் பொதுக்கூட்டமும் நடத்த அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் பல தலைவர்களை கைது செய்தும், நெல்லையில் 144 தடையுத்தரவு பிறப்பித்தும் உள்ளார்கள்.

இந்த ராம ராஜ்ஜிய யாத்திரை என்றால் என்ன? அதன் துவக்க கதை என்ன என்பதைப் பற்றி சற்றே தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பிப்ரவரி 13 ஆம் தேதி, உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யானாத் கொடியசைத்து துவக்கி வைக்க, அயோத்தியில் உள்ள கார்சேவகபுரத்திலிருந்து இந்த யாத்திரை புறப்பட்டிருக்கிறது. அவர்களின் திட்டப்படி மார்ச் 23 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் யாத்திரை நிறைவடையும்.

#2

#2

இதில் ஸ்ரீ ராம்தாஸ் சர்வதேச அமைப்பு, இந்த அமைப்பு மஹாராஸ்டிராவில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இவர்களுடன் பா.ஜ.க, வி.எச்.பி,ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

#3

#3

2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலையொட்டி ஹிந்து மக்களின் ஆதரவு ஓட்டிற்காக இந்த யாத்திரை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. உத்திரபிரதேசத்தில் துவங்கிய இந்த யாத்திரை மத்தியபிரதேசம், மஹாராஸ்டிரா, கர்நாடகா, கேரளா வழியாக தமிழகம் வந்தடைந்திருக்கிறது.

#4

#4

2019 ஆம் ஆண்டு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், ராமரின் ஆட்சி நாட்டில் ஏற்படுத்தப்படும் என்று இவர்கள் உறுதியளிக்கிறார்கள். ராமர் அவதாரத்தின் போது ராமர் அயோத்தியிலிருந்து ராமேஸ்வரம் வரை சென்றிருக்கிறார்.அதை நினைவூட்டும் விதமாகவே இந்த பயணமும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

#5

#5

இந்த ரத யாத்திரை வெற்றிகரமாக முடிந்தால் அடுத்தகட்டமாக காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை மாபெரும் ரதயாத்திரை மேற்கொள்ளப்படும் என்கிறார் ஸ்ரீசக்தி சந்தானந்த். இவர் தான் இந்த ரத யாத்திரையை தலைமை தாங்கி வழிநடத்திச் செல்கிறார்.

#6

#6

நாங்கள் யாரையும் எதிர்க்கவில்லை கிறிஸ்துவம் வேண்டாம், இஸ்லாம் வேண்டாம் என்று சொல்லவில்லை. நாங்கள் ராமரை வணங்கக்கூடியவர்கள். எங்களது கடவுள் ராமருக்காக அயோத்தியில் கோவில் கட்ட விருப்பப்படுகிறோம் அவ்வளவே என்கிறார்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றிருப்பவர்கள்.

#7

#7

ராமரின் ஆட்சியை மீண்டும் நிறுவச் செய்ய வேண்டும், மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களது கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம் சேர்க்கப்பட வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையாக கொடுக்கப்பட்டிருப்பதை மாற்றி வியாழக்கிழமை வார விடுமுறை வழங்க வேண்டும். அதோடு விஷ்வ ஹிந்து திவாஸ் என்று ஒரு நாள் கொண்டாடப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் அவர்கள் யாத்திரையை மேற்கொண்டிருக்கிறார்கள்.

#8

#8

பிப்ரவரி 13 முதல் மார்ச் 23 வரை கிட்டதட்ட 41 நாட்கள் ரத யாத்திரையில் 6000 கி.மீ தூரத்தை கடக்கிறார்கள். கிட்டதட்ட ஆறு மாநிலங்களை கடந்து செல்லும் இந்த யாத்திரையின் மூலமாக 224 லோக்சபா தொகுதிகளையும் கடக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆனால் இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை, ராமரைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ராம ராஜ்ஜியம் அமைக்கவும், ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்ட வேண்டியே யாத்திரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#9

#9

இந்த ராம் ரத் யாத்திரையை முதன் முதலில் துவக்கியது பா.ஜ.க.,வின் மூத்த தலைவராக இருக்கும் அத்வானி தான். 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இந்த யாத்திரையை நடத்தினார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு ஆதரவாக இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

#10

#10

1528 ஆம் ஆண்டு முகலாயப் படையினர் ஆக்கிரமித்த போது அயோத்தியில் மசூதியை கட்டியிருக்கிறார்கள். அந்த மசூதியை கட்டியது முகலாய மன்னர் பாபர் என்பதால் அந்த மசூதியும் அவரது பெயராலேயே பாபர் மசூதி என்று அழைக்கப்பட்டது.

#11

#11

இது ராமர் பிறந்த இடம் இங்கே மசூதி இருக்ககூடாது அந்த இடத்தில் நாங்கள் ராமருக்கு கோவிலை கட்டி வழிபடுவோம் என்றார்கள் தொடர்ந்து போராட்டம் வெடித்ததால் 1948 ஆம் ஆண்டு மசூதி பூட்டப்பட்டது. 1989 ஆம் ஆண்டு வரை இந்த நிலை அப்படியே நீடித்தது.

#12

#12

தொடர்ந்து இந்த பிரச்சனை பேசப்படவே, அரசியல் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 1989 ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி வழங்கியதை அடுத்து அங்கே இந்துக்கள் பூஜை செய்ய ஆரம்பித்தனர்.

உடன் இஸ்லாமியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் தொடர்ந்து சண்டைகள் எழ ஆரம்பித்தன.

Image Courtesy

#13

#13

அங்கே மசூதி இருப்பதால் தானே பிரச்சனை, மசூதியை இடித்துவிட்டு ராமருக்கு கோவில் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்க டிசம்பர் 6,1992 ஆம் ஆண்டு இந்துத்துவா அமைப்பினர் மசூதியை இடித்துவிட்டு அங்கு சிறிய அளவில் ராமர் கோவிலை கட்டினார்கள்.

இதனால் நாடெங்கும் பெரும் கலவரம் மூண்டது. இன்று வரையில் இந்த பிரச்சனை அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

Image Courtesy

#14

#14

சர்ச்சைக்குரிய அந்த இடம் 67.7 ஏக்கர் கொண்டுள்ளது. இதனை அரசு கையகப்படுத்திக் கொண்டது. பல ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது அதில் மசூதி இடம் ராமர் பிறந்த இடம் தான் என்றும் அந்த பகுதியை மூன்றாக பிரித்து இரண்டு பகுதிகளை ஹிந்து அமைப்புகளுக்கும் ஒரு பகுதியை இஸ்லாமிய அமைப்பிற்கும் கொடுக்கப்படுவதாக தீர்ப்பளித்தார்கள்.

ஆனால் இரண்டு தரப்புமே இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

#15

#15

இந்நிலையில் வி.பி.சிங் தலைமையிலான அரசு மண்டல் கமிஷன் பரிந்துரையின் படி அரசு வேலை வாய்ப்பில் 27 சதவீதம் வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்றார்கள். இது பிஜேபிக்கு அரசியல் களத்தில் பெரும் பின்னடைவை கொடுத்தது.

இதனால் ஓட்டுக்கள் சிதறும் என்று நினைத்த பாஜக, தங்கள் ஆதரவு ஓட்டுக்களை கவர ராமர் கோவில் பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்தது.

Image Courtesy

#16

#16

அத்வானி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர சேவகர்கள் என்று அழைக்கப்படும் சங் பரிவார் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்றனர். 1990 ஆம் ஆண்டு சோம்நாத்தில் இந்த யாத்திரை துவங்கப்பட்டது.

இந்த யாத்திரை ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றது. இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு மக்களிடையே பெருகியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync pulse
English summary

Facts About Rama Rajya Yathra

Facts About Rama Rajya Yathra
Story first published: Tuesday, March 20, 2018, 12:01 [IST]