For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனைவியின் டெலிவரியை மொபைலில் கண்டு அதிர்ந்த கணவர்!

தன் மனைவிக்கு குழந்தைக்கு பிறக்கும் தருணத்தை மொபைலில் பார்த்த கணவர் காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க.

|

குழந்தை பிறப்பு என்பது சாதரண விஷயம் கிடையாது, மற்ற நேரத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தோன்றினாலும் கூட கடைசி நிமிடத்தில் நிலைமை எப்படி மாறும் என்று யாராலும் சொல்ல முடியாது. இயற்கையின் விந்தை என்றே தான் இதனைச் சொல்ல வேண்டும்.

பெண்மையை உணர்கிற தருணம், தாய்மை அடைவது தான் என்று சொல்வார்கள். இதில் ஆண்களின் பங்கு இல்லையா என்று கேட்பவர்களுக்காக பல முன்னெடுப்புகள் வந்திருக்கிறது. ஆனால் அவை எல்லாமே வெளிநாடுகளில் தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது.

மனைவியை டெலிவரிக்காக மருத்துவமனையில் சேர்த்துவிட்ட கணவரின் மனநிலையை யாரும் அவ்வளவு எளிதாக விவரித்திட முடியாது. தாய்க்கு குழந்தையை எப்படியாவது பிரசவித்து விட வேண்டும் என்ற கவலை மட்டுமே அதிகபட்சமாக நிலைத்திருக்கும் ஆனால் தந்தைக்கோ மனைவியும் குழந்தையும் என இரு உயிர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வலியை உணரலாம் :

வலியை உணரலாம் :

ஓர் ஆணால் குழந்தையை சுமக்க முடியாது தான், ஆனால் மனைவியின் வலியையும் வேதனையும் புரிந்து கொள்ள முடியும். அதை தொழில்நுட்பத்தின் உதவியுடன் உணரவைக்கவும் செய்யலாம் என்பதை வெளிநாடுகளில் நிரூபித்திருக்கிறார்கள்.

குழந்தையின் அசைவுகளை பார்த்தே சந்தோசப்படும் அப்பாக்கள் டெலிவரியின் போது மனைவியுடன் எமோஷனல் சப்போர்டிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

Image Courtesy

மிலிட்ரி மேன் :

மிலிட்ரி மேன் :

நம்மூரில் தான் எதற்கெடுத்தாலும் எல்லையிலே ராணுவ வீரர்கள் என்று சொல்வார்களே.... உண்மையில் நம் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை அவர்கள் செய்கிறார்கள் தான், எல்லா நாட்களிலும் எல்லா நேரங்களிலும் அவர்கள் நிறைவான வாழ்க்கை தான் அமையும் என்று நம்மால் சொல்லவே முடியாது.

எந்த நேரத்திலும் அலர்ட்டாக இருக்க வேண்டும். எப்போது யாரால் எங்கிருந்து ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது. நம்முயிரை காப்பது எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியம் நாட்டின் பாதுகாப்பு.

Image Courtesy

குடும்பம் :

குடும்பம் :

நாட்டிற்காக எல்லையில் நின்று சிரமப்படுகிறார்களே அதே நேரத்தில் அவர்களுக்கு என்ற ஓர் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், மனைவி மக்கள் எல்லாம் இருப்பார்கள் என்று நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

அதற்கு அந்த குடும்பத்தினருக்கும், ராணுவ வீரர் இருவருக்குமே மன வலிமை என்பது மிகவும் அவசியம். என்னோடு எனக்காக இருப்பதை விட நாட்டிற்காக எல்லையில் இருப்பது தான்.

எங்களுக்கு பெருமை என்று சொல்லி அனுப்பும் குடும்பத்தினர் எல்லாருமே போற்றப்படக்கூடியவர்களே....

இங்கேயும் ஓர் ராணுவ வீரரைப் பற்றியும் அவர் சந்தித்த ஓர் நெகிழ்ச்சித் தருணத்தையும் தான் பார்க்கப்போகிறீர்கள்.

வீரர் :

வீரர் :

மிசிசிபியைச் சேர்ந்த ராணுவ வீரர் ப்ரூக்ஸ் லின்ட்ஸி . இவரது காதல் மனைவியை விட்டு பிரியும் போது மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் உடனிருக்க வேண்டும் என்று எந்தப் பெண் தான் விரும்பாமல் இருப்பாள்?

ஆனால் அவர் மனைவி மகிழ்வுடன் நீங்கள் பணிக்குச் செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தாள்.

குழந்தை பிறக்கும் போது நான் உன்னுடன் இருப்பேன். கவலைப்படாதே என்று நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு விடைப்பெற்றார் ப்ரூக்ஸ்.

விதிமுறை :

விதிமுறை :

உயர் அதிகாரிகளிடம் நிலைமையைச் சொன்னார், அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். டெலிவரி க்ரிடிக்கலாக இருந்தால் மட்டுமே நீங்கள் செல்ல விடுமுறை அளிக்கப்படும் இல்லையென்றால் உங்களுக்கு விடுமுறை வரும் போது நீங்கள் சென்று பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.

ப்ரூக்ஸுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இக்கட்டான சூழ்நிலையில் மனைவிக்கு ஆதரவாக உடனிருக்க வேண்டும், தன்னுடைய வாரிசு இந்த உலகிற்கு வரும் போது அந்த தருணத்தில் தானும் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த கனவெல்லாம் தவிடு பொடியானது.

Image Courtesy

அந்த போன் கால் :

அந்த போன் கால் :

அடிக்கடி இருவரும் போனில் பேசிக் கொண்டிருந்தனர். எப்படியாவது வர முயற்சிக்கிறேன் நீ தைரியமாய் இரு என்று மனைவிக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருந்தார். அன்று மனைவி ஹேலியின் போன் வந்தது அறையிலிருந்து வெளியில் வந்தவர் சற்றே பதட்டமாகத்தான் அட்டெண்ட் செய்தார் ப்ரூக்ஸ் ஏனென்றால் மனைவியின் டெலிவரி தேதி நெருங்கிக் கொண்டிருந்தது.

ஹலோ... எல்லாம் ஒகே தானே என்றார் ப்ரூக்ஸ்

உடனே இங்கே வா :

உடனே இங்கே வா :

இல்லை ஹேலியால் சரியாக பேசக்கூட முடியவில்லை... நிலைமையை ஓரளவு யூகித்தார் ப்ரூக்ஸ். இப்போது தான் செக்கப் முடிந்தது. எனக்கு பிரசர் அதிகமாக இருக்கிறதாம். இது குழந்தைக்கு இடைஞ்சலை ஏற்படுத்துகிறதாம்.

இப்படியே விட்டால் குழந்தையின் உயிர் மட்டுமல்ல என்னுடைய உள்ளுருப்புகளும் பாதிக்கப்பட்டுவிடும் என்று மருத்துவர் சொல்கிறார்.

அதோடு குழந்தையை உடனடியாக வெளியில் எடுக்க வேண்டும் என்றும் சொல்கிறார். பயமாய் இருக்கிறது ப்ரூக்ஸ் நீ உடனே கிளம்பி வா என்று அழைக்கிறார் மனைவி ஹேலி.

Image Courtesy

பயணம் :

பயணம் :

இதோ கிளம்பிவிட்டேன் என்று சொல்லி போனை வைத்தவர். அதிகாரிக்கு போனில் தகவல் தெரிவிக்கிறார். அவரும் உறுதி செய்து கொண்டு நீங்கள் உடனே கிளம்புங்கள் என்று சொல்ல ஃப்ளைட் புக் செய்தார்.

ஊருக்கு ஃப்ளைட் மறுநாள் காலை. மறுநாள் காலை வரை காத்திருக்க வேண்டும் என்ற ஒரு வித பதட்டத்துடன் படுக்கையில் விழுந்தார் ப்ரூக்ஸ்.... நீண்ட நேரமாக தூக்கமே வரவில்லை.

திடிரென்று மனைவியிடமிருந்து போன். ப்ரூக்ஸ் எனக்கு பிரசவ வலி வந்து விட்டது நான் மருத்துவமனைக்குச் செல்கிறேன் நீ எப்போ வருகிறாய் என்கிறார்..... நாளை காலை ஃப்ளைட் நீ தைரியமாய் இரு நான் வந்துவிடுவேன் என்கிறார் ப்ரூக்ஸ்.

Image Courtesy

விமான நிலையம் :

விமான நிலையம் :

ப்ரூக்ஸின் தாயாரும் ஹேலியும் மருத்துவமனைக்கு விரைகிறார்கள். அங்கே சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அப்பா வந்துவிடுவேன்....

உன்னை இந்த உலகிற்கு நானும் அம்மாவும் சேர்ந்தே தான் வரவேற்போம் என்று மனதுக்குள் கருவில் இருக்கும் தன் குழந்தையிடம் பேசுகிறார் ப்ரூக்ஸ்.

மறுநாள் விடிந்திருந்தது. அடித்து பிடித்து விமான நிலையத்திற்கு ஓடினால் அங்கே ப்ரூக்ஸ் செல்ல வேண்டிய ப்ளைட் தாமதமாக புறப்படும் என்கிறார்கள்.

Image Courtesy

 டெலிவரி :

டெலிவரி :

அம்மாவிற்கு போன் செய்கிறார். அவளுக்கு பிரசவ வலி அதிகரித்து விட்டது. மருத்துவர் இன்னும் சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று சொல்லி விட்டார் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்கிறார்....

அம்மாவிடம் நிலைமையைச் சொல்லி லேபர் ரூமில் நடப்பதை போன் கேமரா மூலமாக பார்க்க வேண்டும் என்கிறார்.

மருத்துவரும் அதற்கு அனுமதியளிக்க விமான நிலையத்தில் உட்கார்ந்தபடியே தன் குழந்தையின் வருகையை மிகவும் எமோஷனலாக பார்த்துக் கொண்டிருந்தார் ப்ரூக்ஸ்.

நடுவில் விமானம் புறப்படத் தயாரானது. நிலைமையை ப்ரூக்ஸ் விமான நிலையை அதிகாரிகளிடம் சொல்ல, அவர்களும் குழந்தை பிறக்கும் வரை நீங்கள் இங்கேயே உட்கார்ந்து பாருங்கள் என்று அனுமதியளிக்கிறார்கள்.

Image Courtesy

அவள் வந்துவிட்டாள் :

அவள் வந்துவிட்டாள் :

மனைவியின் கதறல் .... மருத்துவர்களின் வார்த்தைகள் என ஒரே களேபரமாய் இருந்த நேரத்தில் திடீரென்று எதோ பூனைக்குட்டி ஒன்று கத்தியது போல மெல்லிய குரல். மருத்துவர்கள் எல்லாரும் ஹேய்..... அவள் வந்துவிட்டாள் என்று கத்துகிறார்கள். ரத்தச் சகதியில் முக்கியெடுத்தது போல ஓர் உருவம் மருத்துவரின் கையில் அசைந்து கொண்டிருந்தது.

ப்ரூக்ஸ் உங்களுடைய மகள் இந்த உலகிற்கு வந்துவிட்டாள் இங்கே பாருங்கள் என்று வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த ப்ரூக்ஸிடம் மகளின் உருவத்தை காண்பிக்கிறார்கள். அதன் பிறகு ஃப்ளைட் ஏறி ஊருக்கு வந்தவர் நான்கு நாட்கள் மகளுடனே செலவழித்திருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Emotional Moment Soldier Watch Her Wife delivery in Mobile video

Emotional Moment Soldier Watch Her Wife delivery in Mobile video
Story first published: Thursday, May 10, 2018, 18:27 [IST]
Desktop Bottom Promotion