கோவில் கருவறை ஏன் இருட்டாக இருக்கிறது என்று தெரியுமா?

By Staff
Subscribe to Boldsky

இறை வழிபாடு இங்கே தொன்றுதொட்டு பல காலங்களாக இருந்து வருகிறது, கோவில்கள் குறித்தும் அங்கே இருக்ககூடிய தெய்வங்கள் குறித்தும் எண்ணற்ற விமர்சனங்கள் எழுந்தாலும் கடவுள் குறித்த பேச்சு எழாமல் இல்லை.

எந்த ஒரு பண்டிகை கொண்டாட்டமாக இருந்தாலும் பலருக்கும் முதலிடமாக இருப்பது கோவில் தான். கடவுள் என்று சொன்னதுவும் உங்களுக்கு முதலில் தோன்றுவது ஒரு கோவில் அதன் உள்ளே கருவறை என்று சொல்லப்படக்கூடிய இருட்டறையில் ஜோதி பிளம்பாக மஞ்சள் வெளிச்சத்தில் கருங்கல்லில் கடவுள் இருப்பார் .

இந்தப் படம் உங்கள் நினைவுக்குள் எழுந்த அதே நிறத்தில் இந்த கட்டுரையையும் படியுங்கள் கோவில் அமைப்பு பற்றியும், சிற்பங்கள் பற்றியும் நிறைவான தகவலுடன் வந்திருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கிய அங்கம் :

முக்கிய அங்கம் :

பொதுவாக கோவில் என்று சொன்னாலே அங்கே மூன்று முக்கிய அங்கங்கள் இருக்க வேண்டும். அவை ஸ்தலம், தீர்த்தம்,விருட்சம். ஸ்தலம் என்றால் மூலவர். மூலவர் இருக்கும் இடத்தை ஸ்தலம் என்பார்கள். அடுத்ததாக கோவிலில் இருக்கக்கூடிய குளம் தீர்த்தம் எனப்படும்.

விருட்சம் எனப்படுவது ஒவ்வொரு கோவிலுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தெய்வங்களின் சக்தியை இந்த விருட்சமே தாங்கி நிற்கின்றன. ஸ்தல விருட்சமாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு மரம் இருக்கும். கும்பாபிஷேகத்தின் போது அந்த ஸ்தல விருட்சத்தின் அடிமண்ணை எடுத்து வந்தே கும்பாபிஷேகம் யாகம் செய்வார்கள்.

மன்னர்கள் :

மன்னர்கள் :

கோவில் கட்டி தெய்வ வழிபாட்டை ஊக்குவித்த பெருமை மன்னர்களையே சாறும். கோவில் கட்ட எண்ணற்ற உதவிகளை செய்து, இறை வழிபாட்டை ஊக்குவித்திருக்கிறார்கள். கி.மு ஆயிரம் காலத்திலிருந்த மன்னர்கள் பெரும்பாலும் செங்கற்களால் கோவிலை கட்டினார்கள். இவற்றை ஏழு வகைகளாக பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து அதன் பிறகு எந்த மாற்றங்களும் பெரிதாக ஏற்படவில்லை.

Image Courtesy

பல்லவர்கள் :

பல்லவர்கள் :

பல்லவர்கள் காலத்தில் தான் குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்டன. பெரும்பாலும் இந்த குடைவரைகளில் கடவுளின் சிலை இருக்காது, இப்படி பல குடைவரைக் கோவில்கள் கட்டப்பட்ட பிறகு தான் கடவுள் சிலை வைக்கப்பட்டது.

பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் கட்டத்துவங்கிய குடைவரைக் கோவில்கள் கோவில் கட்டிடக்கலையின் மைல்கல் என்றே சொல்லலாம்.

Image Courtesy

சோழர்கள் :

சோழர்கள் :

கோவில்களின் பொற்காலம் என்று சொல்லலாம். இந்தக் காலத்தில் கோவில் கட்டிட அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் உண்டானது. பிம்மாண்டமாகவும் கலைநுணுக்கங்களுடனும் சோழர்கள் காலத்தில் பல்வேறு கோவில்கள் எழுப்பப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் கட்டிய கோவில்களில் இன்றளவும் பூஜைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

Image Courtesy

பாண்டியர்கள் :

பாண்டியர்கள் :

பாண்டியர்கள் காலத்தில் கோபுரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது, அதன் பிறகு வந்த நாயக்கர் காலத்தில் கோவில் சீரமைப்பு பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, பல கோயில்கள் மீட்டெடுக்கப்படன.

Image Courtesy

மனித உடல் :

மனித உடல் :

பொதுவாக கோவிலின் அமைப்பு மனித உடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது பாதம் மேல்நோக்கி இருக்கும். அது போலவே கோபுரம் உயர்ந்திருக்கும். கொடி மரம் மனிதனி முதுகுத் தண்டுக்கு ஒப்பானது. வாயிலில் இருக்ககூடிய துவார பாலகர் நம் தோள்களைக் குறிக்கிறது.

அதைத் தாண்டி இருக்கக்கூடிய மகாமண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் மனிதனின் உடல் போன்றது. கருவறை தான் தலை.

Image Courtesy

 கருவறை :

கருவறை :

கருவறையில் மூலவர் வீற்றிருப்பார். எட்டு எட்டாக அறுபத்து நான்கு சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். கருவறையின் பின் சுவர் முதல் மையம் வரையில் பத்து பாகங்களாக பிரித்திருப்பர். பத்தாம் பாகத்தில் சிவன், ஒன்பதாம் இடத்தில் பிரம்மா, எட்டாம் இடத்தில் விஷ்ணு, ஏழாம் இடத்தில் முருகன், ஆறாம் இடத்தில் லட்சுமி அல்லது சரஸ்வதி, ஐந்தாம் இடத்தில் பிற பெண் தெய்வங்கள்,நான்காவது இடத்தில் விநாயகர்,மூன்றாவது இடத்தில் பைரவர்,இரண்டாவது இடத்தில் துர்க்கை ஆகிய சிலைகள் அல்லது உருவங்கள் இருக்கும்.

Image Courtesy

பகுதிகள் :

பகுதிகள் :

கருவரையில் இருக்கும் கீழ் பகுதியை அதிட்டானம் என்று சொல்வார்கள். இதில் அலங்கார வேலைப்பாடுகள் இடம்பெற்றிருக்கும், அடுத்தபடியாக கர்ப்பக கிரகத்தை தாங்கி நிற்கும் சுவற்றை பிட்டி என்பார்கள். இதில் இருக்கக்கூடிய வாயில் தேவ கோட்டம் எனப்படும். இந்த வாயிலில் தட்சன்,துர்க்கை,நரசிம்மன் போன்ற தெய்வங்கள் இடம்பெற்றிருக்கும்.

கருவரையின் கூரை பிரஸ்தனம்.அங்கே யாளி உட்பட பூதங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். சில நேரங்களில் கர்ப்ப கிரகத்தில் இருக்கக்கூடிய மூலவரின் வாகனம் பிரஸ்தனத்தில் இடம்பெற்றிருக்கும்.

இந்த பிரஸ்தனத்திற்கு மேல் உள்ள பகுதியை க்ரீவம் என்பார்கள். இது பெரும்பாலும் சதுர வடிவில் இருக்கும். அதற்கு மேல் தான் கும்பம் அல்லது கலசம் இருக்கும்.

Image Courtesy

கருவறை தேர்ந்தெடுப்பது :

கருவறை தேர்ந்தெடுப்பது :

கருவறையை இங்கே தான் கட்டவேண்டும் என்று பல்வேறு விதமான நுட்பங்களை பார்த்து தான் தீர்மானிக்கிறார்கள். பஞ்ச பூதங்களின் சக்தி, கடவுள் அருள்,வானியல் கதிர்வீச்சு ஆகியவை எல்லாம் சேர்ந்து மிகுந்திருக்கும் இடத்தில் தான் கருவறை கட்ட தேர்ந்தெடுக்கப்படும்.

கருவறை அமையும் பகுதி சதுரம்,வட்டம் மற்றும் முக்கோணம் ஆகிய மூன்ற வித அமைப்புகளுடையதாய் இருக்கும். சதுர அமைப்பு தேவ உலகத்தையும், வட்டம் இறந்தவர்களையும், முக்கோணம் மண்ணுலகத்தையும் குறிக்கிறது. தமிழ்நட்டில் முக்கோண அமைப்பில் கோவில்கள் இல்லை.

Image Courtesy

தானியங்கள் :

தானியங்கள் :

இது தான் இடம் என்று தீர்மானித்தபிறகு அதனை உறுதி செய்த பிறகு தான் கட்டிட வேலையையே ஆரம்பிக்கிறார்கள். அந்த இடத்தில் தானியங்களை விதைக்கிறார்கள். மூன்று நாட்களுக்குள் முளைத்துவிட்டால் அது உத்தமம் என்றும், ஐந்து நாட்களில் என்றால் மத்திமம் என்றும் ஐந்து நாட்களைக் கடந்து விட்டால் அதமம் என்று குறிப்பிடுகிறார்கள்.

உத்தமம் இடத்தில் மட்டுமே கருவறை கட்டப்படும்.

 இருட்டறை :

இருட்டறை :

பெரும்பாலான கருவறை இருட்டாகவே இருக்கும். இதற்கு அறிவியல் பூர்வமான காரணம் என்று பார்த்தால், கருவறையின் மேல் உள்ள விமான கலசம் மூலமாக சூரிய கதிர்களின் அலை மூலவருக்கு கடத்தப்படுகிறது அதே நேரத்தில் சிலைக்கு அடியில் வைத்திருக்கக்கூடிய யந்திரம் பூமிக்கடியிலிருந்து ஆற்றல்களை கடத்துகிறது.

இப்படி கருவறையினுள் நிரம்பியிருக்ககூடிய பாசிட்டிவ் எனர்ஜியை வெளியே கடத்த வேண்டும் என்றால் ஆற்றல்கள் நிரம்பியிருக்கும் இடம் இருட்டாக இருக்க வேண்டும்.

Image Courtesy

அணையா விளக்கு :

அணையா விளக்கு :

எல்லா கோவில் கருவரையிலும் அணையா விளக்கு ஒன்று எரிந்து கொண்டேயிருக்கும். இவை அறையில் நிரம்பியிருக்கும் ஆற்றலை வெளியே உந்தித்தள்ள வைத்திடும். இதே போல கருவறைக்குள் இருக்கக்கூடிய ஆற்றல் இடமிருந்து வலமாக சுற்றுவதாக இப்போதைய ஆரய்ச்சியாளர்கள் கணித்துச் சொல்ல பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடவுளை இடமிருந்து வலமாக சுற்றி வந்து வணங்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அதே ஆன்மீக ரீதியாக, நம் மனதில் ஏற்படுகிற அறியாமை என்னும் இருட்டை நீக்கி அருள் வேண்டியே இருட்டாக அமைக்கப்பெற்றதாகவும் சொல்லபடுவதுண்டு.

Image Courtesy

கருங்கல் :

கருங்கல் :

பெரும்பாலான கோவில்களின் மூலவர் சிலைகள் கருங்கல்லில் தான் செதுக்கப்பட்டிருக்கும். இதற்கு காரணம், பிற உலோகங்களை விட கருங்கல்லில் பல மடங்கு ஆற்றல் இருக்கும். அதை விட கல்லுக்கு எந்த ஆற்றலையும் தன் வசம் ஈர்த்துக் கொள்ளக்கூடியது. அதே போல கருங்கல்லில் பஞ்ச பூத ஆற்றல்களும் அடங்கியிருக்கிறது. இந்த திறன் வேறு எந்த உலோகத்திலும் இல்லை.

Image Courtesy

 பஞ்ச பூதங்கள் :

பஞ்ச பூதங்கள் :

கருங்கற்கள் எப்போதும் குளிர்ந்த நிலையில் இருக்கும். பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தை குறிக்கும் வகையில் இதில் நிலத்தில் வளரக்கூடிய செடிகள் வளர்கின்றன. இதில் நெருப்பின் அம்சமும் உள்ளது. ஆதி மனிதன் இரண்டு கற்களை தட்டியே நெருப்பை கண்டுபிடித்தான்.

கல்லில் தேரை உயிர்வாழ்வதன் மூலம் அதில் காற்று உண்டு என்பது நிரூபணமாகிறது. இந்த கருங்கல்லுக்கு ஆகயத்தைப் போல வெளியிலிருந்து கிடைக்கிற சப்தங்களை தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் திறன் கொண்டுள்ளது.

Image Courtesy

 ஆற்றல் :

ஆற்றல் :

இத்தகைய பஞ்ச பூதங்கள் ஆற்றல் நிரம்பிய கருங்கல்லிற்கு தினமும் முறைப்படி அபிஷேகம்,அர்ச்சனைகள்,பூஜைகள் செய்யப்படுவதால் சிலையின் பஞ்ச பூத தன்மை அதிகரிக்கிறது. அதோடு கருவறையில் இருக்கக்கூடிய ஆற்றலும் இணைந்து பாசிட்டிவ் வைப்ரேஷனை கொடுக்கிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  Read more about: insync pulse
  English summary

  Did You Know Why Temple KarpaKragha Were Dark?

  Did You Know Why Temple KarpaKragha Were Dark?
  Story first published: Saturday, February 3, 2018, 9:30 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more