For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஒண்ணுக்கு, ரெண்டு தடவ உத்துப் பார்க்க வைக்கும் கோக்குமாக்கு புகைப்படத் தொகுப்பு!

  By Staff
  |

  குழப்பங்கள், சிக்கல்கள், புதிர்கள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். இதயத்துடிப்பு கூட மேலும், கீழும் இறங்கினால் தான் உயிரோடு இருக்க முடியும்... ஒரே சீர் கோடாக இருந்தால் நாம் இறந்துவிட்டோம் என்று தானே அர்த்தம்.

  இப்ப எதுக்கு நீ வாழ்க்கைய குறித்த அறிவுரை எல்லாம் சொல்றனு தானே கேட்கிறீங்க... என்ன பண்றது.. கன்டன்ட் அப்படி.. அதுக்கு ஏத்த மாதிரி ரெண்டு வரி இன்ட்ரோ எழுதுனும்ல.

  இங்க நாம இந்த தொகுப்புல பார்க்க போறது எல்லாமே கொஞ்சம் குழப்பமான புகைப்படங்கள். முதல் தடவை பார்க்கும் போது அதுக்குள்ளே ஒளிஞ்சு இருக்குற விஷயங்கள் சிலருக்கு தெரியாம போக வாய்ப்புகள் உண்டு.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  #1

  #1

  இப்படியே கண்ட இடத்துல படுத்து உருண்டு விளையாடிக்கிட்டு இருந்தா, ஒருநாள் நல்லா யாராச்சும் கிட்ட மிதி வங்க போற... அட யாராப்பா திட்டுற நீன்னு கேட்கிறீங்களா.. ஏனுங்க... ஃப்ளோர் மேட் கலர்ல ஜம்முன்னு படுத்துட்டு இருக்க அந்த பூனை உங்களுக்கு தெரியுதுல்ல...? கொஞ்சம் நல்லா உத்து பாருங்க.

  © Brendan_linden / twitter

  #2

  #2

  சமீப சில வருடங்கள்ல ஃபேஸ் ஸ்வாப்ன்னு ஒரு மொபைல் செயலி ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு. ரெண்டு பேர் சேர்ந்து போட்டோ எடுத்தா ஒருத்தர் முகத்தை பக்கத்துல இருக்கறவர் முகத்தோட ஸ்வாப் பண்ணி காமிக்கும். செம்ம ஜாலியா இருக்கும். ஆனா, இங்க பாருங்களேன்... ட்ரெஸ் மட்டும் ஸ்வாப் பண்ணிக்கிட்டு இவங்க அடிக்கிற லூட்டிய.

  பார்க்க ட்வின் சிஸ்டர் பிரதர் போல இருக்கிறாங்க. உண்மையாவும் இவங்க ட்வின்ஸ் தான் போல. அதனால தான் பார்த்ததும் கொஞ்சம் டக்குன்னு ஒருவேளை ஃபேஸ் ஸ்வாப் தானோன்னு தோணுது. ஆனால், இவங்க ட்ரெஸ் தான் ஸ்வாப் பண்ணி இருக்காங்க. டவுட்டா இருந்தா ஷோல்டரயும், கால்களையும் உத்து பாருங்க.

  © this_is_kevin7 / twitter

  #3

  #3

  பின்னல் இடைனு கவிஞர்கள் சில உவமைகள் எழுதிப் பார்த்திருப்போம். பின்னலாடை கூட கேள்விப்பட்டிருக்கோம். ஆனால், காலு ரெண்டும் இப்படி பாம்பு மாதிரி பின்னிக் கிடக்குறத இப்ப தான்யா பார்க்குறோம்.

  ஏம்மா... கண்ட இடத்துல சுளுக்கிக்க போகுது. ஹீல்ஸ் யூஸ் பண்றது மகா தப்பு, அதுல இப்படி எல்லாம் உட்கார்ந்து இருக்கிறது கொடுமையா இல்ல. எசக பிசக ஏதாவது ஆயிட போகுது.

  © imgur

  #4

  #4

  எவ்வளோ பெரிய பிட்சா.. எதாச்சும் கின்னஸ் ரெக்கார்ட் பண்ண ஏற்பாடு பண்ணி இருப்பாங்க போலன்னு தோணுதா... ச்ச்சே ச்சே.. அப்படி எல்லாம் இல்ல. இது ஒரு லார்ஜ் சைஸ் பிட்சா தான். ஆனா, நீங்க நினைக்கிற அளவுக்கு பிரமாண்டமான பிட்சா எல்லாம் இல்ல. இத ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு இருந்த நபர் போட்டோ எடுத்து கோணம் தான் இதோ எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்ல காமிக்குது.

  © Bronson2017 / reddit

  #5

  #5

  அடடே! சொல்ற அளவுக்கு இது ஒன்னும் அவ்வளோ பெரிய அழகான படமா என்னன்னு சிலருக்கு தோணலாம். சிலருக்கு நல்ல சீனரிதானப்பான்னு ரசிக்கவும் வைக்கலாம். இந்த படத்தை கொஞ்சம் அப்படியே திருப்பு தலைகீழா பாருங்களேன்... மேகத்த போட்டோ எடுத்த மாதிரி தெரியும்.

  © asiaboone12 / twitter

  #6

  #6

  என்னடா இது கத்திய பொளந்துட்டு போகுதுன்னு ஷாக் ஆகுறேன்களா? அப்படி எல்லாம் எதுவும் இல்ல. ஃபேமிலியோட, இல்ல ஃபிரெண்ட்ஸ் நிறையா பேர்கூட ரெஸ்டாரன்ட் போகும் போது, ரெண்டு, மூணு டேபிள் ஒண்ணா சேர்த்து போடும் போதும் இப்படி தான் இருக்கும். ஆனால், கத்திய பொளந்துட்டு போகுற மாதிரி தெரியிறது வெறும் ரிப்லக்ஷன் தானுங்க.

  © ResaltedPepper / reddit

  #7

  #7

  என்னடா இது இம்புட்டு நீளமா போயிகிட்டே இருக்குன்னு தோணுதா.. யானை பெருசா தான் இருக்கு... ஆனா, படத்துல பார்க்குற அளவுக்கு அதோட துதிக்கை அவ்வளோ நீளமா எல்லாம் இல்ல. இதுவும் கேமரா ட்ரிக்ஸ் தான். யானையோட துதிக்கை ஓட்டி கேமராவ வெச்சு போட்டோ எடுத்திருகுறார் அந்த போட்டோகிராபர்.

  © Streeb-Greebling / reddit

  #8

  #8

  இத நீங்க சில சமயம் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல்ல பார்க்க முடியும். சாதாரணமா நாம இப்படியான காட்சிகள் காண்பது அரிது. ஏன்னா, இது ஏரியல் ஷாட்னு சொல்லுவாங்க. அதாவது வானத்துல இருந்து எடுக்குற போட்டோஸ். சரியான நேரத்துல, சூரிய ஒளி மற்றும் நிழல் எதிர் திசையில விழுகுற நேரத்துல தான் இப்படியான போட்டோஸ் எடுக்க முடியும்.

  © pp0787 / reddit

  #9

  #9

  பெரும்பாலும் குட்டை மனிதர்கள பார்க்குறது மிகவும் அரிது. அப்படியே இருந்தாலும் இப்படியா ஒரு பொண்ணு மேல உட்கார்ந்துட்டு சவாரி பண்றதுன்னு தோணுதா.. அந்த மனுஷன் தனியா கடைசி சீட்ல தான் உட்கார்ந்துட்டு இருக்காரு. ஆனா, இந்த அம்மணி போட்டுருக்குற டாப்ஸ் டிசைனும், அவரோட பேண்ட் கலரும் ஒரே மாதிரி இருக்குறதுனால அவரு குட்டை மனிதர் போல தெரியிறாரு. மத்தப்படி அவரும் உசந்தவர் தான்.

  © jaber-allen / reddit

  #10

  #10

  என்னடா இது சுவர ஓட்டி மூனும் லைனா நடக்குதுன்னு வியப்பா இருக்கா... பிஸிக்ஸ மிஞ்சுற அளவுக்கு இதுங்க புத்திசாலியா என்னனு தோணுதா..? நிச்சயமா இல்ல... ஆன, இந்த பூனைகளுக்கு இதுவே விளையாட்டா போச்சு... சுவரு ஓரமா நல்ல ஓட்டி படுத்து விளையாடுதுங்க. அத, அந்த வூட்டு ஓனர்.. வேற கோணத்துல போட்டோ எடுத்து ரொட்டேட் பண்ணி வெச்சிருக்காரு. அதனால தான் இதுங்க சுவர ஒட்டி ஒரே லைன்ல நடந்து போற மாதிரி தெரியுது.

  © Fenn3x / reddit

  #11

  #11

  இங்க நீங்க உண்மைய ஒத்துக்கிட்டே ஆகணும். பார்த்த முதல் நொடியில உங்க மனசுல என்ன எண்ணம் எழுந்துச்சு. நூத்துல தொண்ணூறு பேருக்கு அப்படியான எண்ணம் தான் வந்திருக்கும். என்ன பண்றது... நாம சாதாரண மனுஷனாச்சே... நாம தான், நாம தான். சரி வாங்க அடுத்த படத்துக்கு போவோம்.. இது வெறும் ஹேண்ட் பேக் தான்.

  © FaceofaLion / reddit

  #12

  #12

  போட்டோ பார்க்குற நமக்கு மட்டும் இல்ல... போட்டோ எடுத்த அவருக்கே.. ஒரு நிமிஷம் நம்ம காலா இப்படி இருக்குன்னு ஷாக் ஆகிட்டாராம். அப்பறம் தான் தெரிஞ்சதாம்.. அந்த ரெண்டு காலு எதிர்காப்புல உட்கார்ந்துட்டு இருக்க அம்மணிதுன்னு.

  © 3spelledout / reddit

  #13

  #13

  இதுல என்ன இருக்கு... நைக் ஷூ தானேன்னு யோசிக்கிறவங்க.. ஷூவ பார்க்காம.. படத்துல இருக்க ஷூவோட ஷேடோவ பாருங்க. ஷூ லேஸ் நிழல், ஏதோ ஒரு நபர் மலை மேல ஏறிட்டு இருக்கிறது மாதிரி இல்ல...

  © htownaliens / reddit

  #14

  #14

  என்னடா இந்த பய வெட்டவெளியில ரெண்டு பொட்டபுள்ளங்க நடுவுல இப்படி உட்கார்ந்துட்டு இருக்கான்.. இதெல்லாம் தான் இவங்க கலாச்சாரமானு டக்குன்னு திட்ட ஆரம்ப்பிச்சுட்டாதீங்க... நல்லா உத்து பாருங்க.. பாதி உடல் தான் அந்த பயலுது, மீதி பக்கத்துல படுத்துட்டு இருக்க பொண்ணோடது.

  © theworstsailor1 / reddit

  #15

  #15

  இங்க ஒரு ட்விஸ்ட்... எந்த தலை யாரோடதுன்னு கரக்டா கண்டுப்பிடிங்க பார்ப்போம். நிச்சயமா சிலருக்கு கண்டுபிடிக்க ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கும். சிலர் டக்குன்னு கண்டுபிடிச்சிடலாம். எல்லாம் அவங்கவங்க.. பார்வையில தான் இருக்கு.

  © imgur

  #16

  #16

  இதுல என்ன ட்விஸ்ட்... கதவு, பக்கத்துல கண்ணாடி.. அதுல ரிப்ளக்ட் ஆகுது அம்புட்டு தானேன்னு சொல்றீங்களா. சரி... அம்புட்டு தான். எப்பவுமே மிரர் இமேஜ் நேர்மாறா தான் இருக்கும். இங்க கதவு நேர்மாற தான் இருக்கு. ஆனால், கதவுக்கு மேல இருக்குற காற்று வெளியேறும் வெண்டிலேட் பகுதியை பாருங்க. ரெண்டு ஒரே மாதிரி இருக்குல.. அது எப்படி..?

  © fitzdrizzle / reddit

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Cheating Photos That Make You Look Twice To Find Out the Right Thing!

  Cheating Photos That Make You Look Twice To Find Out the Right Thing!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more