Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
இரத்தம் குடித்து, மூளை வறுத்து... காதலியை கொன்று சமைத்து தின்ற காதலன்!
இரத்தம் குடித்து, மூளை வறுத்து... காதலியை கொன்று சமைத்து தின்ற காதலன்!
மனிதக்கறி உண்ணுதல் அல்லது நரபலி கொடுக்கும் நிகழ்வுகள் மிகவும் கொடூரமானவை. இந்த நவீன யுகத்தில் வளர்ந்து நிற்கும் சமூகத்தில் இன்னுமா இந்த நரபலி நிகழ்வுகள், மனிதக்கறி உண்ணும் மனிதர்கள் இருக்கிறார்கள்? என்று நாம் கேள்விக் கேட்கலாம்.
இப்படி அறிவார்ந்த சமூகம் ஜாதி வேறுபாடுகள் இன்றுமா காணப்படுகிறது என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது. அதற்கு முகத்தில் அடித்தார் போல, ஆணவக் கொலைகள் செய்து சிலர், தாங்கள் இன்னும் கற்காலத்தில் தான் வசித்து வருகிறோம். எங்கள் மூளை இன்னும் வளர்ச்சி அடையவில்லை என்று நிரூபித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
சரி! இந்த மனிதக்கறி, நரபலி நிகழ்வுக்கு திரும்பி வருவோம். இன்றளவிலும் உலகில் அடர்ந்த அமேசான் காடுகளில் வாழும் மக்கள் மட்டுமின்றி, சைக்கோத்தனமான சிலர் மனிதர்களை, மனிதக்கறி உண்ணும் வினோத பழக்கம் கொண்டிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு கொலை குறித்து தான் நாம் இந்த தொகுப்பில் காண இருக்கிறோம்..

சாத்தான்!
இந்த சம்பவத்தில், தான் காதலித்து வந்த பெண்ணையே கொன்று, அவரது இரத்தத்தை குடித்து, மூளையை வறுத்து தின்று மிக கொடூரமாக நடந்துக் கொண்டிருக்கிறார் அந்த ஆண். மேலும், தான் தன் காதலியை கொன்று திண்ணதற்கு சாத்தான் தான் காரணம் என்று ஒரு பயங்கரமான காரணத்தை முன் வைக்கிறார்.

ட்மித்ரி!
ட்மித்ரி லூசின் (23) தன் காதலியை சிதைத்து கொலை செய்திருக்கிறார். கொலை செய்தது மட்டுமின்றி, இவர் தன் காதலின் மூளையை வறுத்து தின்றுள்ளார். மேலும், படங்களில் பேய், பிசாசு கொலை செய்வது போல, இவர் தன் காதலியின் உடலை கிழித்து, உள்ளே இருந்து உறுப்புகளை வெளியே எடுத்து சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்.
மேலும், நீதி மன்றதில் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், லூசினுக்கு 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

ஒயின் பாட்டில்!
கொடூரமான கொலையிலும் மிக அவஸ்தை செய்து இருக்கிறார் லூசின். தன் காதலியை ஒயின் பாட்டில் கொண்டு அவரது தலையில் அடித்தே கொலை செய்திருக்கிறார். இதற்கு பிறகு தான் கசாப்பு கடைகளில் பயன்படுத்தப்படும் கறி வெட்டும் கத்தியை கொண்டு உடலை கூறுப்போட்டுள்ளார். மேலும், காதலியின் மூளையை எடுத்து வறுத்து தின்றது மட்டுமின்றி, அவரது இரத்தத்தை குடித்தும் இருக்கிறார் லூசின்.

சீரியல் கில்லர்கள்!
இந்த கொலை குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், லூசின் நிறைய சீரியல் கில்லர்கள் குறித்து ஆன்லைனில் படித்து வந்திருக்கிறார் என்றும். சீரியல் கில்லர் மீது இவருக்கு பேரார்வம் இருந்ததையும் கண்டறிந்தனர். ஆகையால் தான், தனது காதலியை மிகவும் கொடூரமான முறையில் இவர் சித்திரவதை செய்து கொலை செய்தது அறியப்பட்டது.

ருசி!
போலீஸார் விசாரணையில், காதலியின் இரத்தத்தை ருசி பார்க்க தான் விரும்பியதாக வாக்கு மூலம் அளித்திருகிறார் லூசின். மேலும், அதற்காக தான் அவரது உடலை அறுத்து நிறைய இரத்தம் எடுத்தேன். மேலும், காதலியின் காதினை அறுத்து, ஒன்றை காதலியின் வாயிலே திணித்தும், மற்றொன்றை தன் பூனைக்கு உணவாக இட்டேன் என்றும் வாக்குமூலத்தில் தகவல்கள் தெரிவித்திருக்கிறார் லூசின்.

இரத்தத்தால்...
காதலியின் உடலை கூறுப்போட்டு இரத்தம் ருசித்தது மட்டுமின்றி, அந்த இரத்தத்தை கொண்டு தன் வீட்டு கதவுகளில் ஓவியம் போல ஏதோ வரைந்திருக்கிறார். மேலும், காதலியின் வயிற்றில் வேசி எனும் பொருள் கொண்ட ஆங்கில சொல்லை, காதலியின் வயிற்றில் நெயில் பாலிஷ் கொண்டு எழுதி வைத்திருக்கிறார் .

அப்பாவி!
இப்படி கொடூரமான முறையில் கொலை செய்த லூசின், தான் ஒரு அப்பாவி என்று பொருள் அடங்கிய வினோதமான கவிதை எழுதி வைத்திருக்கிறார். இவருக்கு மன ரீதியான நோய் ஏதாவது இருக்குமா என்று பரிசோதனை செய்தனர். ஆனால், நிபுணர்கள் இவர் பூரண குணமாக தான் இருக்கிறார். மேலும், இவரே தன் குற்றத்தை ஒப்புக் கொள்வதால், தண்டனை வழங்கலாம் என்று முடிவு செய்தனர்.

தண்டனை!
தானே முன் வந்து, தன் காதலியை எப்படி கொலை செய்தேன், என்னவெல்லாம் செய்தேன் என்பதை வாக்கு மூலமாக அளித்த காரணத்தாலும், மருத்துவர்கள் இவருக்கு எந்தவிதமான மன நோயும் இல்லை என்று அறிக்கை அழித்ததாலும், லூசினுக்க்கு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தது.



Click it and Unblock the Notifications
