ஆயுளை முடித்த 7-ம் இடம்... ஸ்ரீதேவி இறந்தது பற்றி அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது?...

Written By: manimegalai
Subscribe to Boldsky

தென்னகத்தில் பிறந்து இந்திய சினிமா வரலாற்றில் முத்திரை பதித்த ஸ்ரீதேவி அவர்களின் திடீர் மரணம் நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருகிறது.

actress sridevi death

ஏன் இப்படி நடந்தது? இவ்வளவு சீக்கிரம் அவர் இறப்பதற்கு ஜாதக ரீதியான காரணங்கள் என்ன? எப்படி இறந்தார் என்ற பல சந்தேகங்கள் நமக்கு இருந்தாலும் ஏன் இறந்தார் என்றும் கொஞ்சம் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டுமல்லவா?...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ரீதேவி மரணம்

ஸ்ரீதேவி மரணம்

ஸ்ரீதேவியின் மரணத்துக்கு குடி, கார்டியாக் அரெஸ்ட் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஏன் வேறுவிதமான சந்தேகங்கள் கூட எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அவருடைய மரணம் இவருடைய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே இன்னும் இருந்து வருகிறது. அதனால் தான் அதுகுறித்த சர்ச்சைகளும் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

ஜாதகம்

ஜாதகம்

மருத்துவ ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில், அவருடைய மரணம் குறித்து அவருடைய ஜாதகம் என்னதான் சொல்கிறது என்றும் நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம் இல்லையா?... பலருக்கும் இதில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதை நம்புகிற சிலருக்கு ஸ்ரீதேவியின் ஜாதக அமைப்பு பற்றிய அதளிவைத் தருவது தானே நியாயம். அப்போதுதானே அவர்களுக்கும் சிறிது ஆறுதல் கிடைக்கும்.

ஸ்ரீதேவியின் ராசி

ஸ்ரீதேவியின் ராசி

ஸ்ரீதேவியினுடைய ராசி ரிஷபம். லக்கினம்- கடக லக்கினம். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர் ஆவார். ரிஷப ராசிக்காரர்களுக்கு வருகிற 2019 ஆம் ஆண்டு வரையிலும் சுயபுத்தி நடக்கிறது. அது மற்ற எல்லா யோக ஸ்தானங்களையும் மீறி செயல்படக்கூடிய ஆற்றல் உண்டு.

யோக ஜாதகம்

யோக ஜாதகம்

கடக லக்கினம், யோக ஜாதகம் கொண்டவர் தான். 2016 ஜூன் அவருடைய குரு திசை முடிந்து சனி திசையில் சனி புத்தி தொடங்கியது. 2 ஆம் வீட்டுக்கும் 7 ஆம் வீட்டுக்கும் அதிபதி மாரகாதிபதி என்று சொல்வார்கள். அது சிலசமயம் கொல்லும். சனி திசையில் சனி புத்தி தொடங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகியும் சுயபுத்தி கொன்றிருக்கிறது. இரண்டரை வருடம் ஆகிவிட்டது என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. 3 வருடம் 3 நாள் கடந்தபின் தான்அதன் பாதிப்புகள் குறையும்.

 மாரக ஸ்தானம்

மாரக ஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது களத்திரஸ்தானம், கூட்டாளிகளின் ஸ்தானம் என்கிறது ஜோதிடகலை. அதே 7-ம் இடம், மாரகஸ்தானமும் ஆகிறது.

ஒரு திசை நடக்கும்பொழுது, அந்த திசை லக்கினத்திற்கு 7-ல் அமர்ந்த கிரகத்தின் திசையாக இருந்தால் மரணம் அல்லது மரணத்திற்கு ஒப்ப கண்டம் ஏற்படும்.

அஷ்டம சனி

அஷ்டம சனி

ஸ்ரீதேவியின் ஜாதகத்தில், கடக லக்கினத்திற்கு 7-ல் அதாவது மகரத்தில் சனி அமர்ந்து அந்த திசையே நடந்ததால் அதுவும், சனி திசையில், சனி புக்தி 22.02.2019 வரை இருக்கிறது. அந்த சனியே, லக்கினத்திற்கு 8-க்குரியவனாக அமைந்து ஏழாம் இடத்தில் அமர்ந்து மரணத்தை கொடுத்துவிட்டான். அதுமட்டுமல்ல இவர் ரிஷப இராசியில் பிறந்தவர். ரிஷப இராசிக்கு தற்காலம் அஷ்டம சனி நடக்கிறது. இதுவும் மேலும் இவருக்கு பாதித்துவிட்டது.

கீர்த்தி ஸ்தானம்

கீர்த்தி ஸ்தானம்

லக்கினத்திற்கு மூன்றாம் இடமான கன்னியில் அதாவது கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்ததால் இவரின் புகழ் கடல் கடந்ததாக அமைந்தது. செவ்வாயை மீன குரு பார்வை செய்து, குரு மங்கள யோகம் தந்து இவரை மக்கள் மத்தியில் பெரிய அளவில் புகழுடன் திகழ வைத்தது.

யோக ஸ்தானம்

யோகஸ்தானம்

யோகஸ்தானம்

யோகஸ்தானம் என்கிற 5-ம் இடத்தை சந்திரன் மற்றும் குருவின் பார்வையும் இவருக்கு பெரிய யோக வாழ்க்கை கொடுத்தது. இவ்வளவு சிறப்பு இருந்தும் சனி பகவான் 7-ம் இடத்தில் அமர்ந்து அதே திசையும் வந்து இவரின் உயிரை பறித்து, திரை உலகத்தையும், இவரின் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. இவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: zodiac
English summary

astrological reasons behind sridevi death

According to Astrology, her lagna starts with the Cancer zodiac sign, whose lord is Moon. Sun and Venus are placed in Lagna. Sun is the Maraka Planet for her Ascendant sign. Saturn is placed in 7th house of the horoscope which is again the Maraka planet and rules over 7th and 8th houses of the horoscope. There was a Mahadasha of Saturn, which was currently running for her. In that Mahadasha, there was a Pratyantar Dasha of Sun. Both Planets Saturn and Sun, being the maraka planet for her, became the cause of her death.
Story first published: Friday, March 9, 2018, 13:57 [IST]