Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்முன் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 4 விஷயங்கள்
ஓம் என்ற மந்திரத்தைச் சொல்லும்போது என்னென்ன விஷயங்களை மனதுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் சக்தியை பற்றி தெரியுமா? இது ஒரு இரண்டு வார்த்தை தான் ஆனால் இதன் சக்தி முழு பிரபஞ்சத்தையும் ஆட்டிப் படைக்கும் வல்லமை படைத்தது. இந்த ஓம் எனும் ஒலி இந்த பிரபஞ்சம் முழுவதும் இன்றளவும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

இது தான் அனைத்து மந்திரங்களுக்கும் உயிர் நாடியாக விளங்குகிறது. இந்த ஒம் என்ற பிரணவ மந்திரத்தை நாம் மனப் பூர்வமாக செபித்து வந்தால் நம் உடலும் மனமும் அமைதி நிலை பெறும்.

ஓம் மந்திரம்
உங்கள் மன அழுத்தத்தை ஒரு நொடிப் பொழுதில் போக்கும் அற்புத மந்திரம் இந்த ஓம் என்ற ஓங்கார ஒலி தான். நீங்கள் தினமும் இந்த மந்திரத்தை ஓத நினைத்தால் கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றி செய்யுங்கள். மனதில் அமைதியோடு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் கிட்டும்.

அமைதியான இடம்
இந்த மந்திரத்தை ஓதுவதற்கு முன் எந்த சத்தமும் இடையூறும் இல்லாத அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். நல்ல கற்றோட்டமான திறந்த வெளியில் செய்வது நல்லது. திறந்தவெளியான இடங்கள், மொட்டை மாடி, செளகரியமான இடம் போன்றவற்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

ஓத வேண்டிய நேரம்
எழுந்திருக்கும் போதே இந்த ஓம் மந்திரத்தை ஓதுவது அந்த ஓலி அதிர்வுகளே போதும் அந்த நாள் உங்களுக்கு அமைதியான நாளாக கழியும். உங்களால் அதிகாலையில் ஓத முடியா விட்டால் இரவு நேரங்களில் கூட இதை ஜெபிக்கலாம். மனது அமைதியை தழுவி நல்ல நிம்மதியான தூக்கத்தையும் பெறுவீர்கள்.

தியானம்
இந்த ஓம் என்ற பிரணவ மந்திரம் மதத்தை சார்ந்த ஒன்றாக பெரும்பாலும் கருதுகின்றனர். ஆனால் இது ஒரு தியான வார்த்தை. இது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் தாரக மந்திரம். இதை கடவுள், மதம் என்ற பெயரால் தள்ளி வைக்காதீர்கள். இது எல்லாராலும் ஜெபிக்க வேண்டிய மன நிம்மதி மந்திரம்.

பத்மாசனம்
நல்ல உரக்க ஓதுங்கள். பத்மாசனம் நிலையில் அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு உங்கள் அடிவயிற்றில் இருந்து இந்த மந்திரத்தின் சத்தம் ஒலிக்கட்டும். எவ்வளவு தூரம் உங்களால் ஒலியை நீடித்து சொல்ல முடியுமே அதுவரை ஓதுங்கள். அப்பொழுது மூச்சை இழுத்து சொல்லுங்கள.அப்படியே இந்த மந்திரத்தை மறுபடியும் மறுபடியும் ஓதுங்கள்.2 நிமிடங்களாவது இதை செய்து வாருங்கள். ஓம் என்ற ஓங்காரமும் உங்கள் உடலில் கலந்து மனதில் அமைதியை நிலைக்க செய்யும்.



Click it and Unblock the Notifications