Latest Updates
-
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...!
மனிதன் செய்த மிக மோசமான துரோகங்கள் எவை என்று தெரியுமா ? உறைய வைக்கும் உண்மைகள்!!
மனிதர்களை பெருமளவு பாதிக்கும் விஷயங்களில் ஒன்று இயற்கை மாசுபாடு தான். மனிதர்களே ஏற்படுத்திய மாசுபாடுகளால் வந்த வினை என்ன தெரியுமா?
தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் போதிருந்து பட்டாசுகளை வெடிக்காதீர்கள் காற்று மாசுபடுகிறது என்று ஒரு கூட்டம் கிளம்பும் அவர்கள் வரும் ஒவ்வொரு வண்டியின் புகையுமே காற்றை பெரும்பளவு மாசு படுத்திடுக்கொண்டிருக்கும்.
மற்ற நாட்களில் எல்லாம் எதுவுமே தெரியாமல் பண்டிகை நாட்களில் மட்டும் எப்படி சட்டென இப்படி மாறிடுகிறார்களோ தெரியவில்லை. இயற்கையை அளவுக்கு மீறி சுரண்டும் போது அதன் சீற்றம் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவு இருக்கும்.

சுனாமி, பூகம்பம்,மழை வெள்ளம்,புயல் போன்றவை வந்தால் தற்காத்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் யோசிக்க முடிகிறதே தவிர வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று யாருக்கும் இன்றளவும் பிடிபட வில்லை. இப்படியிருக்கையில் மனிதனால் இயற்கைக்கு எப்படிப்பட்ட கேடுகள் எல்லாம் நடந்திருக்கிறது ஒவ்வொன்றும் எவ்வளவு பெரிய பாதிப்பாக இருக்கிறது என்று பாருங்கள்.

கிங்க்ஸ்ட்டன் ஃபோசில் ப்ளாண்ட் :
சுமார் 84 ஏக்கர் பரப்பளவில் திட குப்பைகள் சாம்பல் நிறத்தில் வெளியேறியது. இது நடைப்பெற்றது 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி. ரொவ்னே நாட்டில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்றாலும் ஏக்கர் கணக்கிலான இடம் நாஸ்தியானது.

எண்ணெய் :
1989 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி இரண்டு லட்சத்து அறுபதாயிரம் பேரல்கள் முதல் 7 லட்சத்து ஐம்பதாயிரம் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெய் அலஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்ட் என்னுமிடத்தில் எக்சஸன் வால்டெஸ் என்ற கப்பலிருந்து கொட்டியது.
மனிதன் ஏற்படுத்தியதிலேயே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது இது என்று கூட சொல்லலாம். ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. சுமார் 2800 ஏக்கர் வரை கடல் மாசடைந்தது.

பசிபிக் கடல் :
மனிதர்கள் ஏற்படுத்திய மாசு என்றே சொல்லலாம். மனிதர்கள் பயன்படுத்தி தூக்கியெறிந்த ப்ளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல்கள்,என பல கிலோமீட்டர் தூரம் கடல் நீரே தெரியாத அளவிற்கு ப்ளாஸ்டிக் பொருட்கள் மிதந்தன.

ஜிலின் கெமிக்கல் :
நவம்பர் 13 2005 ஆம் ஆண்டு ஜிலின் கெமிக்கில் ப்ளாண்ட்டில் வெடி விபத்து நிகழ்ந்தது. சீனாவில் இருக்கும் இந்த பெட்ரோ கெமிக்கல் ப்ளாண்டில் நடந்த வெடிவிபத்தினால் அங்கு பணியாற்றிய ஆறு ஊழியர்கள் உயிரிழந்தனர்.
அதோடு பத்தாயிரத்திற்கும் மேற்பப்ட்ட மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து கொண்டு இடம் பெயர்ந்தனர். இந்த வெடிவிபத்தினால் அருகில் இருந்த சொங்குவா என்ற ஆறு பயங்கரமாக மாசடைந்தது. சுமார் 100 டன் அளவில் கெமிக்கல்கள் ஆற்றில் கலந்தன.

கேஸ்டில் ப்ராவோ :
கேஸ்டில் ப்ராவோ என்பது ஒரு ரகசிய குறியீட்டின் பெயர். அமெரிக்காவின் முதல் தெர்மோநியூக்கிளியர் ஹைட்ரஜன் பாமின் பெயர். மார்சல் தீவில் இருக்கும் பிகின் அடோல் எனுமிடத்தில் குண்டு போடப்பட்டது. போடப்பட்ட ஆண்டு 1954,மார்ச் ஒன்றாம் தேதி. இதனை அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய அணுஆயுத சோதனை என்றே சொல்லலாம். இதனால் வெகு காலம் அங்கு கதிர்வீச்சு பாதிப்பு இருந்தது.

த்ரீ மைல் தீவு :
அணு ஆயுத விபத்து இது. பென்சல்வேனியாவில் இருக்கும் டவ்பின் அருகில் உள்ள த்ரீ மைல் தீவில் அணு ஆயுத பரிசோதனைக்கூடம் நடந்திருக்கிறது. அங்கு நடைப்பெற்ற விபத்து தான் அமெரிக்காவில் நடைப்பெற்ற மிக மோசமான அணு ஆயுத விபத்து என்று சொல்லலாம்.

குவைத் :
குவைத்தில் 1991 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் சுமார் ஆறு மில்லியன் பேரல் எண்ணெய் எரிந்து நாசமானது. ஈராக்கிய ராணுவப் படைகளால் சுமார் 600 எண்ணெய்க் கிணறுகள் பாதிப்படைந்தது. இந்த விபத்தினால் மண்ணும் காற்றும் பயங்கரமாக பாதிப்படைந்தது. அதனை சரிசெய்ய அரசாங்கம் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழித்தது.

மீதேன் :
டர்க்மெனிஸ்தானில் இருக்கும் டெர்வீஸ் என்னும் இடத்தில் சோவியத்தை சேர்ந்த புவியியலார்களால் ஆராய்ச்சி மேற்கொள்லப்பட்டது. இதற்காக 70 மீட்டர் சுற்றளவில் பெரிய குழி வெட்டப்பட்டது. மீத்தேன் வாயு நீரோட்டத்தை அறிவதற்காக 1971 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
கணிசமாக மீத்தேன் வாயு வெளியேறியவுடன். இது தொடர்ந்து நீடித்தால் பாதிப்புகள் அதிகரிக்குமோ என்று எண்ணி அதனை நிறுத்த முயற்சித்தனர். அதன் பலனாக மீத்தேன் வாயிவை எரித்தால் வாயு வெளியாவது நின்றுவிடும் என்று நினைத்து எரித்து விட அது இன்றுவரை எரிந்து கொண்டிருக்கிறது.

பலோமேர்ஸ் விபத்து :
ஜனவரி 17,1966 அன்று அமெரிக்காவின் பாம்பர் விமானம் ஒன்று ஸ்பெயினில் அல்மெரியா அருகில் பலோமேர்ஸ் என்னும் சிறிய கிராமத்தில் குண்டு வெடிக்கச் செய்தது. இன்றளவும் அதன் தடயங்கள் எஞ்சி நிற்கிறது என்பது தான் சோகம்.

லிப்பி :
லிப்பியில் இருக்கும் வெர்மிக்குலைட் சுரங்கங்களில் அங்கிருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அங்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் அஸ்பெஸ்டோஸ் என்ற கெமிக்கலினால் அங்கு பணியாற்றுவோர் பெரும் பாதிப்பிற்கு உள்ளானர்கள்.
இதனால் பலரும் அந்த ஊரை விட்டே வெளியேறத் துவங்கினார்கள். இன்றளவும் பாதிப்புகளின் எச்சங்கள் தொடர்கின்றன.

டீப் வாட்டர் :
பெட்ரோலிய வரலாற்றிலேயே மிகப்பெரிய விபத்து இது. மெக்ஸிகோ நாட்டின் அருகில் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த கப்பல் திடிரென வெடித்துச் சிதறியது. இதில் 11 பேர் வரை உயிரிழந்தனர். 4.9 மில்லியன் பேரல் எண்ணெய் வரை வீணானது.

வியட்நாம் :
வியட்நாம் போரின் போது, அமெரிக்க இராணுவத்தினரால் தங்கள் எதிரி நாட்டு மக்களுக்கு உணவு கிடைக்க கூடாது என்று கோதுமை விளைந்த வயல்களில் எல்லாம் பூச்சி மருந்துகள் அதிகளவில் தூவப்பட்டன.
அதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக காடுகள்,வயல்கள் எல்லாம் அழிக்கப்பட்டன.

சல்ஃப்ர் ப்ளாண்ட் :
இராக்கில் இருக்கும் மோசுல் நகரில் சல்ஃப்ர் ப்ளாண்ட் செயல்பட்டு வந்தது. 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அங்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. ஒரு மாதத்திற்கும் அதிகமாக அங்கு தீ அணையாமல் எரிந்து கொண்டேயிருந்தது.
அப்போது ஒரு நாளைக்கு 21,000 டன் சல்ஃபர் டை ஆக்ஸைடு காற்றில் கலந்தது.

லவ் கெனால் :
ஹூக்கர் கெமிக்கல் என்ற நிறுவனம் தங்களின் ரசாயன தொழிற்கூடங்களில் இருந்து வெளியாகும் டாக்சிக் கழிவுகளை லவ் கெனால் அருகில் பூமிக்கடியில் போட்டு அழிக்கப் போவதாக அறிவித்தனர்.
1940களில் 21000 டன் வீரியமிக்க தொழிற்சாலைக் கழிவுகள் கொட்டப்பட்டன. இதனால் இப்பகுதியால் வாழ்ந்த மக்களுக்கு மிகப்பெரிய அளவில ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்ப்பட்டது.
பிறவிக் குறைபாடுகளும் அதிகளவில் தோன்றியது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மினம்டா :
இது மனிதர்களை தாக்கும் மிகக் கொடிய நரம்பு வியாதி. இதனைப்பற்றி பிற நாட்டினருக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் ஜப்பான் நாட்டினருக்கும் குறிப்பாக மினம்டா என்ற ஊரில் வசிப்பவர்களுக்கும் இந்த பெயர் தங்கள் வாழ்நாளின் சாபமாகத்தான் பார்க்கிறார்கள்.
மினம்டா என்பது அந்த வியாதியின் பெயரல்ல. முதன்முதலாக நரம்புக் கோளாறுகள் இந்த ஊரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த வியாதியின் பெயரே ஊர்ப்பெயராகிப் போனது.
1956களில் சிஸ்ஸோ என்ற தொழிற்சாலை நிறுவனம் அதிகப்படியான மிதைல் மெர்குரியை ஆற்றில் கலந்தது. இது சுழலையும் அதிகப்படியாக பாதிக்க அதன் பாதிப்பு எல்லா உயிரினங்களுக்கும் பரவியது. மனிதர்களுக்கு மத்திய நரம்பு மண்டலத்தையே பாதித்து பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.

செவேசோ :
இத்தாலியில் இருக்கும் கெமிக்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வெடி விபத்து. 1976 ஜூலையில் நடைப்பெற்ற இந்த விபத்தினால் Tetrachlorodibenzo-p-dioxin (TCDD) என்ற கெமிக்கல் அதிகப்படியாக வெளியேறியது.
இதனால் 3300 கால்நடைகள் வரை உயிரிழந்தன. மேலும் பல கெமிக்கல் பாதிப்பிற்கு உள்ளானது. அதனை சாப்பிடும் மற்ற மிருகங்கள், அதனைச் சாப்பிடும் மனிதர்கள் என உணவுச்சங்கிலியால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்

ஈ வேஸ்ட் :
ஈ வேஸ்ட் எனப்படுகிற எலக்ட்ரானிக் வேஸ்ட் போடப்படுகிற மிகப்பெரிய இடமாக இருப்பது சீனாவின் க்யூ எனும் இடம் தான். உலகிலேயே அதிகளவு எலக்ட்ரானிக் வேஸ் கொட்டப்படுகிறது.
அதனால் இந்தப் பகுதியில் இருக்கும் 88 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் லெட் எனும் கெமிக்கலினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர்.

சையனைட் :
ஐரோப்பாவின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பாக இது பார்க்கப்படுகிறது. ரோமானியாவில் இருக்கும் பையா மேர் எனுமிடத்தில் சையனைட் அதிகளவு கொட்டியது.
தங்கச் சுரங்க நிறுவனம் ஒன்று அதன் ஆலைக் கழிவு நீரினை டேமில் தேக்கி வைத்திருந்தது, எதிர்பாராதவிதமாக திடீரென அந்த டேம் உடைந்ததில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் 700 மடங்கு வீரியமான சையனைட் ஆற்றில் கலந்தது. இதனால் ஆற்றில் வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் உயிரிழந்தன. அந்த ஆறு செல்லும் வழித்தடங்களில் எல்லாம் பெரும் பாதிப்பை உள்ளாக்கியது.

போபால் :
மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் போபாலில் உள்ள Union Carbide India Limited என்ற நிறுவனத்தில் இருந்து மெதைல் ஐஸோசினேட் என்ற கேஸ் வெளியேறியது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் வெளியேறிய இந்த விஷப்புகையினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் பாதிப்படைந்தனர்.
இப்பவும் அங்கே மரபணு தாக்கத்தினால் குறைபாடுள்ள குழந்தைகள் பிறந்த வண்ணம் இருக்கின்றது.

கெர்னோபைல் நியூக்கிலியர் :
நியூக்லியர் பவர் ப்ளாண்ட் விபத்தில் மிகவும் கொடூரமானது இது. இந்த விபத்தினால் மனிதர்கள் இன்றளவும் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். இதனால் பிறக்கப்போகும் குழந்தைக்கு கூட பாதிப்பு உண்டாகிறது. மனிதர்களைத் தவிர விலங்குகளுக்கும் இந்த கதிர்வீச்சினால் பாதிப்பு உண்டாகிறது.

தி கிரேட் ஸ்மோக் :
லண்டனில் பனிப்படர்வது சாதாரணம், ஆனால் பனிப்படர்கையில் தங்களை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள கரியை எரித்து குளிர்காய்வார்கள். இதே போல அருகில் உள்ள பல ஊர்களிலும் எண்ணற்ற நிலக்கரரி சுரங்களில் இருந்து வெளியாகும் நச்சுப்புகை என எல்லாம் ஒன்று சேர 1952 ஆம் ஆண்டு ஐந்து நாட்கள் லண்டன் கரும்புகையால் சூழ்ந்திருந்தது.
இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ப்ளாங்கெட் ஆஃப் ஸ்மோக் என்றும் வர்ணிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











