Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம் -
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
இது என்னன்னு தெரியுதா? தெரிஞ்சுக்கணுமா... இதப்படிங்க!
உலகின் விசித்திரமான தோற்றம் கொண்டிருக்கும் கடல்வாழ் உயிரினங்கள்!
கற்றது கைய்யளவு, அறியாதது கடல் அளவு என்பார்கள். இது அனைத்திற்கும் பொருந்தும். ஏன் கடலுக்கும் பொருந்தும். கடற்கரையில் இருந்து பார்த்தல் வானெட்டும் தொலைவிற்கு கடல் மட்டுமே நீண்டிருப்பதாக தான் நமது கண்களுக்கு காட்சியளிக்கும். ஆனால், கண்களுக்கு புலப்படாத கடலுக்குள் எத்தனையோ விசித்திரங்கள் இருக்கின்றன.
நிலத்திற்கு மேல் பல அற்புதங்கள் நடக்கிறது என்றால், ஆழ்கடலில் அதைவிட பன்மடங்கு அற்புதங்கள் இருக்கின்றன. அழிந்த நகரங்களில் இருந்து, நாம் அறிந்திராக கற்பனைக்கு அப்பாற்பட்ட உயிரினங்கள் வரை பலவன மனிதர்களின் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாக வாழ்ந்து வருகின்றன.
அவற்றில், கடலில் வாழும் சில விசித்திர உயிரினங்கள் பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

ஆண்குறி மீன்!
இந்த மீனை ஆங்கிலத்தில் "Urechis unicinctus" குறிப்பிடுகிறார்கள். இதற்கு ஆண்குறி மீன் (Penis Fish) என்ற பெயரும் இருக்கிறது. பார்பதற்கு ஆண்குறி போன்ற தோற்றம் கொண்டுள்ளதால் இந்த வகை மீனை இப்படி அழைக்கிறார்கள். இது பார்பதற்கு புழு போன்றும் இருப்பதால் ஸ்பூன் வார்ம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
Image Credit: J. Patrick Fischer

நீளம்!
இந்த விசித்திர மீன் வகை பெரும்பாலும் ஆழமான நீர் பகுதியின் சகதியில் தான் வாழும். இது பத்து முதல் முப்பது சென்டிமீட்டர் நீளம் இருக்கும். இதற்கு எலும்புகள் இல்லை என்பதால் வளைந்து, நெளிந்து தான் பயணிக்கும். மிகவும் மிருதுவான தேகம் கொண்டதாகும்.
Image Credit: ProjectManhattan

ருசியானது!
ஆண்குறி மீன் என அழைக்கப்படும் இந்த மீன் அதிகமாக கொரியா மற்றும் சீனாவில் தான் கிடைக்கின்றன. சீனார்கள் இதை விரும்பி உண்கிறார்கள். இதை அப்படியே உப்பில் தடவி உண்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதன் ருசிக்கு மிகவும் பிரபலமாக விளங்கிவருகிறது. இதை பார்த்தால் ஒரு மீன் போலவே இருக்காது.

ஹட்சட் மீன்!
ஹட்சட் மீன் (Hatchetfish), கடலின் மிகவும் ஆழமான பகுதியில் வாழ்ந்து வருகிறது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பயங்கரமான மீனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது பார்பதற்கு குட்டியாக இருக்கும்.

நிறம்!
இது சில்வர் நிறம் கொண்டிருக்கும். கத்தி போன்ற கூர்மையான மேலுடல் கொண்டிருக்கிறது. இது அதிகமாக ஐந்து அங்குலம் வரை நீளமாக வளரலாம் என கூறுகிறார்கள். பார்க்க கவர்ச்சிகரமாக இருந்தாலும், ஆளை கொல்லும் அளவிற்கு பயங்கரமான மீன்.
Image Credit: digitalfishlibrary

எந்த இடத்தில்?
இதை காண வேண்டும் என்றால் நீங்கள் அதற்கு தகுந்த தற்காப்பு உபகரணங்களோடு இந்தியன், பசுபிக், அட்லாண்டிக் கடலின் ஆழமான பகுதிக்கு நீந்தி செல்ல வேண்டும். குறைந்தபட்சம் ஐம்பது மீட்டர் கடல் மட்டத்திற்கு சென்றால் தான் இந்த மீனை காண முடியும்.

ப்லோப்
ப்லோப் மீன் (The Blob Fish), மிக வழவழப்பான மீன். பார்பதற்கு மிகவும் வயதான உடல் பருமனான தாத்தா, பாட்டியின் முகம் எப்படி இருக்குமோ, அப்படி தான் இருக்கும். கடந்த 2013ல் மிகவும் அசிங்கமான மீன் என இந்த மீனுக்கு பட்டம் அளித்தனர்.

அடர்த்தியானது!
ஆழ்கடல் நீரை போலவே இதன் சருமம் மிகவும் அடர்த்தியானது. ப்லோப் மீனை கண்டு இதற்கு தசை வலிமை இருக்காது. இதுதான் இதன் குறை என பார்ப்பவர்கள் கருதலாம். அனால், இறைச்சிக்கு இணையான அடர்த்தியான தசை கொண்டுள்ளது இந்த மீன்.

ஃபங்க்டூத்
ஃபங்க்டூத் (Fangtooth)! பிட்புல் என்ற அமெரிக்க நாயை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அதன் பற்களுக்கு இணையான கூர்மையும், மிரட்டலான தோற்றமும் கொண்டுள்ளது இந்த ஃபங்க்டூத் வகை மீன். இதற்கு கண்பார்வை மிகவும் குறைவு. வேட்டையாடி உண்ணும் பழக்கம் கொண்டுள்ளது இந்த ஃபங்க்டூத் மீன்.

ஆழ்கடல்!
பல் நிபுண மருத்துவர்களின் கெட்டக் கனவாக இந்த மீனை நகைச்சுவையாக கூறுவதுண்டு. இதன் பற்கள் மிகவும் கூர்மையானவை, பெரியவை. நல்ல வேலையாக இந்த மீன் கடலின் 16,400 அடிகளுக்கு கீழே இருக்கிறது. ஆகையால், அதுவும் நம்மிடத்திற்கு வராது. நாமும் அதன் இடத்திற்கு போக மாட்டோம்.
Image Credit: deepseacreatures

தி சீ குக்கும்பர்!
இதன் பெயரை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்றால் கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும், கடல் வெள்ளரி. தி சீ குக்கும்பர் என அழைக்கப்படும் இந்த மீன் சருமம் மிகவும் அடர்த்தியாக கொஞ்சம் அருவருப்பாகவும் இருக்கிறது.

கொப்லின் ஷார்க்!
சில ஆய்வாளர்கள் இது வாழ்ந்து வரும் உயிரினம் என்கிறார்கள். கடந்த 125 மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சுறா குடுமபத்தில், இன்றும் கடலில் வாழ்ந்து வரும் அரியவகை இனமாக இந்த மீன் காணப்படுகிறது. மிகவும் தனித்துவம் கொண்ட மீன் இது.

ஜப்பான்!
இதை பொது மக்கள் காண வாய்ப்பே இல்லை. இது ஆழ்கடல் பகுதியில் வாழ்ந்து வருகிறது. தனிகாட்டு ராஜா போன்ற மீன் வகை. தன்னை தற்காத்து கொள்ள வேண்டிய அவசியம் இதற்கில்லை. இதை வேறு எந்த மீன்களாலும் நெருங்க முடியாது.
ஜப்பானில் ஒரு அருங்காட்சியகத்திற்கு இந்த மீனை கொண்டு வந்தனர். ஆனால், சில நாட்களிலேயே இந்த மீன் இறந்துவிட்டது.

ப்ளேமிங்கோ நத்தை
பழைய காசு, போஸ்ட் ஸ்டாம்ப் போன்றவற்றை சேகரிப்பது போல சிலருக்கு சிப்பிகள் சேகரிக்கும் பழக்கம் இருக்கும். நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆம்! இந்த நத்தையின் மேற்புற தோற்றம் காண்பதற்கு சிப்பி போல இருக்கும்.
இது அட்லாண்ட்டிக் மற்றும் கரீபியன் கடற்பகுதியில் வாழ்ந்து வருகிறது. இதன் நாக்கில் இருந்து மிகுந்த நச்சு வெளிப்படும் என்பதால் இதை யாரும் தொட்டுவிடக் கூடாது என எச்சரிக்கைப்படுகிறார்கள்.

தூண்டில் மீன்!
Angler Fish என அறியப்படும் இந்த மீன் கடலில் வாழும் மற்றொரு வகை அதிசய உயிரினம். இதன் இனபெருக்க செயலே வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. தனக்கு இனபெருக்கம் செய்ய வேண்டம் என்ற விருப்பம் இருக்கும் போது மட்டுமே பெண் மீனை அனுகுமாம் ஆண் மீன்.
அணுகியதும், முதலில் பெண் மீனின் தோலை கடித்த பிறகே இனபெருக்கத்தில் ஈடுப்படுமாம் இந்த மீன். கடித்தே பிறகு இரண்டும் ஒன்றுடன் ஒன்று தோல் மூலமாக கூடி இனப்பெருக்கும் செய்கின்றன.



Click it and Unblock the Notifications











