For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ரேக்-அப் செய்த காதலனை, தோழியுடன் சேர்ந்து சித்திரவதை செய்து கொன்ற சிறுமி!

உலகின் மிருகத்தனமாக சிறுவர்கள் - டாப் 25!

|

குழந்தைகள், சிறுவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். காரணம் அவர்கள் பொய்கூற மாட்டார்கள், அநீதி இழைக்க மாட்டார்கள், அவர்களுக்கு குற்றம் செய்ய தெரியாது என கூறுவார்கள். ஆனால், நாங்கள் சாத்தானுக்கும் சமம் என சில சிறுவர்கள் நிரூபித்துள்ளனர்.

இரக்கமின்றி இரண்டு வயதை கொலை, அக்கம்பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களை சுட்டு கொலை, பதின் வயது பெண்ணை கற்பழித்து கொலை என ஏதோ கைதேர்ந்த கொலையாளி செய்யும் குற்ற சம்பவங்களை எல்லாம் இந்த சிறுவர்கள் செய்துள்ளனர்.

சிலர் நீதிமன்றத்தில் ஏன் கொலை செய்தாய் என நீதி அரசர் கேட்ட கேள்விற்கு, ஜஸ்ட் ஃபார் ஃபன் என கூறி அதிர்ச்சியும் அளித்துள்ளனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜான் வென்னபிள்ஸ் - ராபர்ட் தாம்சன்

ஜான் வென்னபிள்ஸ் - ராபர்ட் தாம்சன்

இங்கிலாந்தில் ஒரு நாள் இந்த இரு சிறுவர்கள் நாள் முழுக்க ஒரு லோக்கல் மாலில் இருந்து பல பொருட்களை திருடினார்கள். இது மட்டுமின்றி ஜேம்ஸ் பக்லர் எனும் இரண்டு வயது குழந்தையை கடத்தியும் சென்றனர். அந்த மாலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவில் இவர்கள் செய்தவை பதிவாகியிருந்தன.

கடத்தப்பட்ட அந்த இரு வயது குழந்தையை இந்த இரண்டு சிறுவர்களும் மிக கொடூரமாக கொலை செய்த நிகழ்வும் அந்த மாலின் கீழ்த்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த குற்ற சம்பவம் இங்கிலாந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பீட்டர் உட்காக்

பீட்டர் உட்காக்

தனது பதின் வயதிலேயே பீட்டர் உட்காக் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்திருந்தான். இவன் 1950-களில் டொராண்டோ பகுதியில் வாழ்ந்த வந்தவன். கைதான பிறகும், சிறையில் வேறு ஒரு கைதியை சைக்கோத்தனமாக கொலை செய்ய முயன்றான். இந்த காரணத்தால் பீட்டர் உட்காக்கை தனிமை சிறையில் அடைத்தனர்.

லாரி டாக்கெட் - மெலிண்டா லவ்லெஸ்

லாரி டாக்கெட் - மெலிண்டா லவ்லெஸ்

சந்தா ஷரேர் எனும் நபரை இந்த இரண்டு பெண்களும் கடத்தி, சித்திரவதை செய்து குத்தி, எரித்து கொன்றனர். இதற்கு காரணம் சந்தா எனும் அந்த நபர் மெலிண்டாவுடனான உறவை பிரேக்-அப் செய்து கொண்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கியது என கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு இது என கூறுகிறார்கள்.

கிரேக் ப்ரைஸ்!

கிரேக் ப்ரைஸ்!

1989ல் 15 வயதான கிரேக் ப்ரைஸ் எனும் சிறுவன் தனது வீட்டருக வசித்து வந்த நான்கு பேரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து இவன் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டதன் காரணத்தால் பல்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டான். இந்த வருடம் கூட, தன்னுடன் தங்கியிருந்த சிறைவாசியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக இவன் மேல் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டது.

பிரெண்டா ஆன் ஸ்பென்சர்

பிரெண்டா ஆன் ஸ்பென்சர்

1979ல் 16 வயதான பிரெண்டா எட்டு குழந்தைகளை மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை சுட்டு கொலை செய்தாள். இந்த சம்பவம் சான்டியாகோ பகுதியில் ஒரு பள்ளியில் நடந்தது. மேலும், பள்ளியின் பிரின்சிபால் மற்றும் காவல் அதிகாரியையும் கொலை செய்தாள். ஏன் கொலை செய்தாய் என நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்ட போது, "ஜஸ்ட் ஃபார் ஃபன்" என கூறினாள்.

ஜேமி ரைஸ்

ஜேமி ரைஸ்

1995ல் 17 வயதான ஜேமி ரைஸ் எனும் நபர் ரிச்லாண்ட்பள்ளியை சேர்ந்த இருவரை கொலை செய்தார், நான்கு நபர்களை படுகாயம் அடைய செய்தார். ஜேமி ரைஸ்க்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

வில்லி போஸ்கெட்

வில்லி போஸ்கெட்

1987ல் 15 வயது நிரம்பிய சிறுவன் வில்லி போஸ்கெட் நியூயார்க் சப்வேயில் கொள்ளையடிக்க முயற்சி செய்தான். இதை தடுக்க வந்த ஒரு நபரை கொலை செய்தான். இந்த சிறுவனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வெளியான பிறகும் மீண்டும் சில குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மார்கன் கேசர் - அனிசா வேயர்

மார்கன் கேசர் - அனிசா வேயர்

ஸ்லேண்டர் மேன் எனும் கற்பனை கதாபாத்திரம் போல தங்களை அனுமானம் செய்துக் கொண்டு, அந்த கதாபாத்திரம் செய்வது போலவே தங்கள் நண்பனை 19 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ய முயற்சித்துள்ளனர் இவர்கள். எப்படியோ தப்பித்த இந்த சிறுவன் அந்த வழியில் சைக்கிளில் சென்ற நபரால் காப்பாற்ற பட்டார்.

அலிஸ்ஸா புஸ்டமண்டே

அலிஸ்ஸா புஸ்டமண்டே

அக்டோபர் 21, 2009ல் அலிஸ்ஸா புஸ்டமண்டே தனது வீட்டருகே இருந்த ஒன்பது வயது சிறுமியை கொலை செய்ய நினைத்தார். அந்த சிறுமியை வசியப்படுத்தி, கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலை செய்யும் போது அலிஸ்ஸா புஸ்டமண்டே வயது வெறும் 15 தான்.

ஜோசுவா பிலிப்ஸ்

ஜோசுவா பிலிப்ஸ்

1998ல் 14 வயதான ஜோஷ் தன் வீட்டருகே குடியிருந்த எட்டு வயது சிறுமியை மெத்தையில் வைத்து தலையணை அமுத்தி கொலை செய்தான். ஆரம்பத்தில் மரணத்திற்கான காரணம் தெரியாமல் தான் இருந்தது. போலீஸ் விசாரணையின் போதுதான் ஜோஷ் கொலை செய்தது தெரியவந்தது. ஜோஷ்க்கு பரோலில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறை தண்டனை கிடைத்தது.

ஜேக்கப் டெலாஷ்முட், ஜோசப் ஃபியோர்லா - ராய்ஸ் கேசி

ஜேக்கப் டெலாஷ்முட், ஜோசப் ஃபியோர்லா - ராய்ஸ் கேசி

ஜேக்கப் டெலாஷ்முட், ஜோசப் ஃபியோர்லா மற்றும் ராய்ஸ் கேசி, இந்த மூவரும் தங்கள் இசை பயணத்தில் வெற்றியடைய ஓர் உயிர் தியாகம் தேவை என கருதி, 15 வயது எலிசி எனும் நபரை வேண்டுமென்றே கொலை செய்தனர். இப்போது இந்த மூவரும் 25 வருட சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

எரிக் ஹாரிஸ் - டிலான் கில்போல்ட்

எரிக் ஹாரிஸ் - டிலான் கில்போல்ட்

எரிக் (18), டிலான் (17) சேர்ந்து 13 பேரை கொடூரமான முறையில் கொலை செய்தனர். மேலும், இவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலம்பைன் பள்ளியை சேர்ந்த 25 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் 1999ல் நடந்தது.

ஜெஸ்ஸி பொமரோய்

ஜெஸ்ஸி பொமரோய்

ஜெஸ்ஸி பொமரோய் 7 சிறுவர்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை ஆனான். விடுதலை ஆன கொஞ்சம் நாட்களிலேயே பத்து வயது சிறுமியை உருச்சிதைவு செய்து கொலை செய்தான். பிறகு, மிக கொடூரமாக நான்கு வயது சிறுவனை கொலை செய்தான். இதெல்லாம் இவன் தனது 14 வயதில் செய்தான். இந்த சம்பவங்கள் நடந்த ஆண்டு 1874.

லியோனல் டேட்

லியோனல் டேட்

1999ல் 13 வயதான லியோனல் டேட் ஆறு வயது யுனிக் எனும் பெண்ணை டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தான். அமெரிக்காவில் மிக குறைந்த வயதில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற சிறுவன் என இவனை குறிப்பிடுகிறார்கள்.

சில வருடங்களில் இவனது தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். ஆனால், வெளியான சில காலத்திலேயே மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டான்.

பாரி லாகாய்டிஸ்

பாரி லாகாய்டிஸ்

1996ல் 14 வயதான பாரி லாகாய்டிஸ் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்று அல்ஜீப்ரா டீச்சர் மற்றும் இரண்டு மாணவர்களை கொலை தான். மேலும், ஒரு டீச்சரை கொலை செய்ய முயற்சித்தான். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். இந்த கொலைகளை இவன் ஏன் செய்தான் என்பது தெரியவில்லை.

எட்மண்ட் கெம்பெர்

எட்மண்ட் கெம்பெர்

1964ல் 15 வயதான எட்மண்ட் கெம்பெர் தனது தாத்தா. பாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டான். தண்டனை காலம் முடிந்து இவன் வெளியானதும், மீண்டும் எட்டு பெண்களை அங்கங்களை துண்டித்து கொலை தான். இதில் இவனது தாயும் ஒருவராவார்.

மேரி பெல்

மேரி பெல்

தனது 11வது பிறந்தநாளில் மேரி பெல் நான்கு வயது மார்டின் பிரவுன் எனும் சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்தாள். அடுத்த இரண்டு மாதத்தில் மூன்று வயது பிரைன் எனும் குழந்தையை கொலை செய்தாள். மேலும், தனது வயிறு பகுதியில் "M" என்ற வடிவில் பிளேட் வைத்து கீறிக் கொண்டிருந்தான். தனது பிறப்புறுப்புகளை இவளே அறுத்துக் கொண்டிருந்தாள். உடனடியாக கைது செய்யப்பட்ட மேரி, அவளது 23 வயதில் விடுதலை செய்யப்பட்டாள்.

ரிக்கி கஸோ

ரிக்கி கஸோ

1984ல் 17 வயதான ரிக்கி தனது நண்பன் கேரியை நியூயார்க் நார்த்போர்ட் பகுதியில் வைத்து கொலை செய்திருந்தான். போலீஸ் விசாரணையின் போது ரிக்கி தன்னுள் சாத்தான் குடிப்புகுந்திருப்பதாக கூறினான். அந்த சாத்தான் காக்கை வடிவத்தில் இருப்பதாகவும் கூறினான்.

டோட் கேமரூன் ஸ்மித்

டோட் கேமரூன் ஸ்மித்

1999ல் ஏப்ரல் 28ம் தேதி, ஸ்மித் தனது பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்தான். இவன் ஒரு மாணவனை சுட்டு கொன்றான். மேலும், இரு மாணவர்கள் அபாயகரமான காயம் அடைய செய்தான். இந்த சம்பவம் கனடாவின் அல்பர்டா எனும் பகுதியில் நடந்தது.

ஆண்ட்ரூ கோல்டன் - மிட்செல் ஜான்சன்

ஆண்ட்ரூ கோல்டன் - மிட்செல் ஜான்சன்

ஆண்ட்ரூ (11) மற்றும் மிட்செல் (13) வெஸ்ட்சைட் பள்ளி ஒன்றில் 15 பேரை சுட்டுக் கொன்றனர்.இளம் வயது என்பதால் குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டது. பிறகு, தண்டனை காலம் முடிந்து வெளியாகினர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 25: Most Evil Kids In History!

Top 25: Most Evil Kids In History!
Desktop Bottom Promotion