இந்த செயல்கள் செய்தால் உங்கள் வீட்டில் தெய்வ சக்தி நுழையும் என தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும், பில்லி சூனியமும், நம்மை ஒன்றும் செய்யாது.

வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் கூறுகின்றன. அவற்றில் தெய்வ சக்தியை அதிகரிக்கும் செயல்களை பற்றி இங்கே காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் தெய்வ சக்தி நுழைய வேண்டும்?

ஏன் தெய்வ சக்தி நுழைய வேண்டும்?

ஒரு வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால், அந்த வீட்டில் நல்லவை அதிகம் நடக்கும், வீட்டில் இருக்கும் நபர்களை எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாது. வீட்டில் செல்வமும், வெற்றியும் அதிகரிக்கும்.

பறவைகள்!

பறவைகள்!

வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, அணில் போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தி அறியும் ஆற்றல் உள்ளது என அறியப்படுகிறது.

ஜீவசக்தி!

ஜீவசக்தி!

நீங்கள் புதிதாக குடிபோகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.

நெற்கதிர்!

நெற்கதிர்!

உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

கலைக்க கூடாது!

கலைக்க கூடாது!

புறா, குருவி போன்ற ஜீவசக்தி கூண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம்.

விரட்டவும் வேண்டாம்!

விரட்டவும் வேண்டாம்!

புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Should Do to Bring Spiritual Power to Your House!

Things You Should Do to Bring Spiritual Power to Your House!
Story first published: Monday, May 8, 2017, 11:20 [IST]
Subscribe Newsletter