For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக வரலாற்றை மாற்றி அமைத்த இந்தியர்களின் அரிய கண்டுபிடிப்புகள்!

உலக வரலாற்றை மாற்றி அமைத்த இந்தியர்களின் அறிய கண்டுபிடிப்புகள்!

|

இந்த கட்டுரை படித்து முடித்தவுடன், "அட இதெல்லாம் கூட இந்தியாவுல தான் கண்டுப்புடிச்சாங்களா?" என்ற வியப்புடனான கேள்வி உங்கள் மனதில் எழலாம்.

பெரும்பாலும் சிந்துசமவெளி நாகரீகத்தில் நமது மக்கள் கையாளாத நுட்பங்களே இல்லை போல. விவசாயம், மருத்துவம், நகரமைப்பு என அனைத்திலும் சிறந்து காணப்பட்டுள்ளனர்.

சிந்துசமவெளி, மொகஞ்சதாரோ காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அறிவிலும், அறிவியலிலும் மேன்மையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

அந்த பண்டையக் காலத்தில் இந்தியர்கள் கண்டுபிடித்த பொருட்கள் மற்றும் நவீன யுகத்தில் இந்தியர்கள் கண்டுபிடித்த பொருட்கள் உலக வரலாற்றில் ஒரு புரட்சியாகவே இருந்துள்ளன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொத்தான்!

பொத்தான்!

ஆங்கிலத்தில் பட்டன் எனப்படும் பொத்தான்களை சிந்து சமவெளி நாகரீகத்திலேயே இந்திய மக்கள் கண்டுபிடித்துவிட்டனர். ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்னர் மொகஞ்சதாரோ காலத்தில் முதல் பொத்தான் பயன்படுத்திய அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

ஷாம்பூ!

ஷாம்பூ!

பண்டைய இந்தியாவில் பல மூலிகைகளில் இருந்து எடுக்கப்பட்ட சாற்றை தலைக்கு குளிக்க ஷாம்பூவாக பயன்படுத்தி வந்துள்ளனர். ஷாம்பூ எனும் சொல்லே chāmpo (चाँपो) என்பதில் இருந்து மருவிய சொல் எனவும் கூறப்படுகிறது.

பிபோனச்சி தொடர்!

பிபோனச்சி தொடர்!

இந்தியர்கள் கணிதத்தில் மிக வல்லமை பெற்றவர்கள் என்பது உலகிற்கே தெரியும். பிபோனச்சி தொடர் முதன் முதலில் விவரிக்கப்பட்டது விராஹாங்க, கோபலா மற்றும் ஹெமாசந்திரா ஆகியோரால் தான். # Fibonacci series

பிளாஸ்டிக் சர்ஜரி!

பிளாஸ்டிக் சர்ஜரி!

இது உங்களுக்கு வியப்பை அளிக்கலாம். ஆம்! இந்தியர்கள் தான் பிளாஸ்டிக் சர்ஜரியை முதன் முதலில் கண்டறிந்தவர்கள். 2000 BCE-யிலேயே இந்தியாவின் நிபுணர் சுஷ்ருதா இந்த சிகிச்சை பற்றி நுட்பங்கள் எழுதிவைத்துள்ளார்.

Image Credit: blog.pardesilink

மை!

மை!

கரி (கார்பன்) நிறமியை கொண்டு பழங்கால இந்தியாவில் எழுத பயன்படுத்தியுள்ளனர். நான்காம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் இன்க் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஃப்ளஷ் கழிவறைகள்!

ஃப்ளஷ் கழிவறைகள்!

மொகஞ்சதாரோ - ஹரப்பா காலத்தில் கட்டமைக்கப்பட்டிருந்த நகரமைப்பில் இந்தியர்கள் நீர் ஊற்றி கழுவப்படும் கழிவறைகள் பயன்படுத்தியுள்ளனர். இதுவே உலகில் முதல்ஃப்ளஷ் கழிவறைகள்!

சுழியம்!

சுழியம்!

இது நாம் அனைவரும் அறிந்த உண்மை. சுழியத்தை உலகத்திற்கு அறிமுகம் செய்ததே இந்தியர்கள் தான். 500 AD-யிலேயே ஆர்யபட்டா சுழியத்தை கண்டுபிடித்தார்.

இழை ஒளியியல் (Fibre Optics)

இழை ஒளியியல் (Fibre Optics)

டாக்டர் நரேந்திர சிங் கபானி உலகளவில் இழை ஒளியியலின் தந்தை என அறியப்படுகிறார். இவர் இந்த தொழில்நுட்பத்தின் முன்னோடியாகவும் காணப்படுகிறார்.

வரைகோல் (Scale)

வரைகோல் (Scale)

சிந்து சமவெளி நாகரீகத்திலேயே தந்தத்தால் ஆன வரைகோல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் டெசிமல் முறையில் வரைகோல் உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்.

பரமபதம்!

பரமபதம்!

பரமபதம் முதன்முதலில் இந்தியாவில் தான் அறநெறி விளையாட்டாக இருந்து வந்தது. பிறகு இது இங்கிலாந்தில் பரவியது. 1943-ல் அமெரிக்காவில் இதை மில்டன் எனும் நபர் அறிமுகப்படுதினார்.

பருத்தி சாகுபடி!

பருத்தி சாகுபடி!

சிந்துசமவெளி நாகரீகத்தில் இருந்தே பருத்தி சாகுபடி இந்தியர்கள் செய்து வந்திருந்தது அறியப்படுகிறது. இங்கிருந்து தான் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கு பருத்தி சாகுபடி முறை பரவி, அங்கிருந்து உலகம் முழுக்க பரவியிருக்கிறது.

வைரச்சுரங்கம்!

வைரச்சுரங்கம்!

கிருஷ்ணா, கோதாவரி ஆற்று பகுதிகளில் தான் முதன்முதலில் வைரச்சுரங்கம் உருவானது. 18ம் நூற்றாண்டு வரை இந்தியா தான் வைரதிற்கான ஆதார இடமாக காணப்பட்டது. அதன் பிறகே பிரேசிலும் இதில் இணைந்தது.

கண்புரை சர்ஜரி!

கண்புரை சர்ஜரி!

இந்திய மருத்துவர் சுஷ்ருதா கண்புரை சர்ஜரி நுட்பம் குறித்தி அறிந்திருந்தவர். இவர் இதற்கான கருவியும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இக்கருவி ஜபமுகி சலாகா என பெயர்பெற்று இருந்துள்ளது. ஒரு வளைந்துஊசி போன்ற உருவம் கொண்டிருந்துள்ளது இந்த கருவி. இதன் மூலம் அவர் கண்புரை குனமாக்கியுள்ளார்.

இந்த முறை மெல்ல, மெல்ல சீனா, கிரேக்கம் என பரவி, இதை கற்க அவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

Image Credit: entokey

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Inventions By Indians Changed The Course Of History!

These Inventions By Indians Changed The Course Of History,
Desktop Bottom Promotion