For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்தியாவில் நடைப்பெற்ற மிகப்பெரிய மனித படுகொலை!

  |

  பல விதமான பன்முகத்தன்மையுடன் இந்தியா விளங்குகிறது என்று நாம் பெருமை பட்டுக்கொள்ளும் இதே நேரத்தில் இதன் பின்னணியைப் பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

  ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் துவங்கி நம் இந்திய மக்கள் ஏராளமான அடக்குமுறைகளை சந்தித்து வருகிறார்கள். இதுவரை நாம் கேள்விப்படாத ஆனால் வராலாற்றில் நடைப்பெற்ற மிகப்பெரிய மனித படுகொலையைப் பற்றிய ஒரு தொகுப்பு. மனதை திடப்படுத்திக் கொண்டு தொடருங்கள்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
   ஜாலியனவாலா பாக் (1919) :

  ஜாலியனவாலா பாக் (1919) :

  பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருக்கிற ஜாலியன்வாலா பாக் தோட்டத்தில் பைஸ்சகி என்ற இன மக்கள் கைது செய்து வைத்திருக்கும் இரண்டு தேசிய தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்த தோட்டத்தில் குழுமினர்.

  எதிர்பாராத நேரத்தில் ஆங்கிலேயேப் படைகள் வந்தது. வெளியே செல்ல இருந்த ஒரே ஒரு கதவை அடைக்கச் சொல்லி வீரர்களை துப்பாக்கியால் சுட உத்தரவிட்டார். கொத்து கொத்தாக மக்கள் செத்து விழுந்தனர்.

  தப்பிக்க நினைத்து நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்த ஒரு கிணற்றில் விழுந்து மாண்டனர்.வரலாற்றில் இன்று வரையிலும் மிகப்பெரிய மனிதர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையாகவே பார்க்கப்படுகிறது.

  Image Courtesy

  மாப்லா ரெபிலியன் (1922) :

  மாப்லா ரெபிலியன் (1922) :

  இந்த வன்முறையில் பத்தாயிரம் மக்கள் வரையிலும் கொல்லப்பட்டனர். மாப்பிலா இஸ்லாமியர்கள்,ஆங்கிலேய அரசு, இந்துக்கள் மூன்று பேருக்கும் இடையில் நடந்த வன்முறை இது.

  ஆங்கிலேய அடக்குமுறைகளை காட்டிலும் உள்நாட்டில் மத ரீதியான பாகுபாடு நிறைய இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டிய வன்முறை இது.

  Image Courtesy

  கல்கத்தா ரியாட்ஸ் (1946) :

  கல்கத்தா ரியாட்ஸ் (1946) :

  ஆகஸ்ட் 16 , 1946 அன்று காலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் ஒரு மைதானத்தில் குழுமியிருந்தனர். எதிர்பாரத நேரத்தில் உள்ளே நுழைந்தவர்கள் இரும்புத் தடி மற்றும் கம்பினைக் கொண்டு கண்மூடித்தனமாக தாக்க ஆரம்பித்தனர்.

  கடைகள் எல்லாம் அடைத்து நொறுக்கப்பட்டது. வீடுகளுக்கு நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டது. தப்பிக்க நினைத்து, கட்டிடங்களில் தஞ்சம் புகுந்த மக்களை வெளியில்

  இழுத்து வெட்டப்பட்டனர்.

  Image Courtesy

   பிஹார் மாசகர் (1946) :

  பிஹார் மாசகர் (1946) :

  இதுவும் 1946 ஆம் ஆண்டு தான் நடைப்பெற்றது. இந்த வருடத்தின் நடுவில் கல்கத்தா வன்முறை என்றால் அதேயாண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

  இந்தியா பிரிவிணை நடக்கப் போகிறது என்ற பேச்சு எழுந்த போது நடைப்பெற்ற வன்முறை இது. இதில் கொல்லப்பட்டவரக்ளின் எண்ணிக்கை மட்டும் முப்பாதாயிரத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

  Image Courtesy

  இந்தியப் பிரிவிணை (1947) :

  இந்தியப் பிரிவிணை (1947) :

  இந்திய வரலாற்றில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டது இந்த சம்பவத்தின் போது தான்.பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சார்ந்த மக்கள் என இருபுறங்களிலும் மாண்டனர்.

  அதை விட உலகமே வியந்து பார்த்த லட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வும் இதன் போது தான் நடந்தது.

  Image Courtesy

  ஹைதிராபாத் (1948) :

  ஹைதிராபாத் (1948) :

  சுதந்திரத்திற்கு பின் நடைப்பெற்ற மிகப்பெரிய அதே சமயம் மிகவும் மோசமான வன்முறைகளில் இதுவும் ஒன்று. ஹைதிராபாத்தில் இருந்த நிஜாம் ரசாகர் இஸ்லாமிய மிலிட்ரியை அங்கிருந்த பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர்.

  இதில் பாதிக்கப்பட்டது அத்தனை பேரும் மிகவும் சாதாரண பொதுமக்கள். இதன் போது தான் பாலியல் வன்கொடுமை செய்வதும் துவங்கியது.

  Image Courtesy

  குஜராத் (1969) :

  குஜராத் (1969) :

  குஜராத்தில் நடைப்பெற்ற இந்த படுகொலையில் 660 பேர் வரை கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்திற்கு பின்னர் இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனின் அறிக்கை தான் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

  இந்த போராட்டத்தில் போலீஸின் பங்கு என்ன என்ற அந்த அறிக்கையில் இருந்த கேள்வி,மக்களை பாதுகாக்க வேண்டியவர்களும் அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.

  Image Courtesy

  மொரடாபேட் :

  மொரடாபேட் :

  அதிகாரப்பூர்வமாக 450 பேர் தான் இறந்தார்கள் என்று தொடர்ந்து அரசாங்கம் அறிவிக்க மக்களோ... இறந்தது 2500 பேர் என மக்கள் கதறினார்கள். மொரடாபேட்டில் வாழ்ந்த

  இஸ்லாமியர்களுக்கும் போலீஸுக்கும் நடைப்பெற்ற யுத்தம் இது.

  இதில் கொல்லப்பட்ட 400 பேருக்கு மட்டுமே அரசாங்கம் உதவித்தொகை வழங்கியது.தொழில் வளர்ச்சி பயங்கரமாக சரிந்தது.

  Image Courtesy

   நெல்லி மாசகர் (1983) :

  நெல்லி மாசகர் (1983) :

  இந்த சம்பவம் அச்சாமில் நடைப்பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடந்தது இந்த வன்முறையில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். அதிகாரப்பூர்வமாகவே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

  Image Courtesy

  ஆண்ட்டி சீக் (1984) :

  ஆண்ட்டி சீக் (1984) :

  இந்தியாவின் பிரதமாக இருந்த இந்திரா காந்தி உடனிருந்த சீக்கிய பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு பழி தீர்க்கும் விதமான சீக்கியர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டது.

  இது எதோ எதேச்சையாக நடைப்பெற்ற வன்முறையல்ல திட்டமிடப்பட்டு அதே சமயம் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் நடைப்பெற்றது. 2011 ஆம் ஆண்டு மனித உரிமை கமிஷன்

  வெளியிட்ட அறிக்கையில் இந்திய அரசாங்கமே இதன் பின்னணியில் இருக்கிறது என்று தெரிவிக்க பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.

  Image Courtesy

  பகல்பூர் (1989) :

  பகல்பூர் (1989) :

  கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைப்பெற்ற வன்முறை இது. பகல் பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஏராளமான மக்கள்

  கொல்லப்பட்டதுடன் அதை விட அதிகமான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்த அநாதரவாய் நின்றார்கள்.

  Image Courtesy

  பாம்பே (1992-93) :

  பாம்பே (1992-93) :

  பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து நடைப்பெற்ற வன்முறை இது. இந்த சம்பவத்தில் தொல்லாயிரம் அப்பாவி மக்கள் வரை கொல்லப்பட்டனர். இந்த வன்முறையும் ப்ரீ ப்ளாண்ட் என்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம்.

  Image Courtesy

  குஜராத் (2002) :

  குஜராத் (2002) :

  சுமார் மூன்று நாட்கள் நடைப்பெற்ற வன்முறை இது. ஆயிரம் பேர் உயிரிழக்க இரண்டாயிரத்து ஐநூறு பேர்வரை பாதிக்கப்பட்டார்கள். அதை விட 200க்கும் மேற்ப்பட்டோர் என்ன ஆனார்கள் என்றே விவரம் இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  Read more about: insync pulse
  English summary

  Terrifying Massacres That Happened In India

  Terrifying Massacres That Happened In India
  Story first published: Thursday, December 28, 2017, 13:11 [IST]
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more