Latest Updates
-
மட்டன் பஞ்சு போல சாப்ட்டா இருக்கணுமா? அப்ப இந்த 2 பொருட்களை சேத்துக்கோங்க போதும்! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம் -
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...!
மனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்!
மனிதர்கள் மீது வடகொரிய அரசு நடத்திய கொடூரமான பரிசோதனைகள்!

Image Source: humanexperimentations | Life
வடகொரியா, தென்கொரியா இரண்டும் இரு துருவங்கள் போல. வடகொரியா ஒரு நரகம் என அங்கே வாழும் நாட்டு மக்களே கூறும் அளவிற்கு கடுமையான சட்டங்கள் மற்றும் கெடுபிடிகள் இருக்கின்றன.
உலகில் மிக சாதாரணமாக மக்கள் கையாளும் விஷயங்கள், பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் எல்லாம் வடகொரியாவில் அரசால் தடை செய்யப்பட்டுள்ளன.
மக்களை தடைகள் மூலமும், கடுமையான சட்டங்கள் விதித்தும் தான் வடகொரியா கொடுமை செய்கிறது என பார்த்தால், தனது கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்சிகளுக்கும் கூட தன்நாட்டு மக்களை ஏதோ எலிகளை போல பயன்படுத்தியுள்ளது வடகொரியா.
இதோ! தனது சொந்த மக்கள் மீதே வடகொரியா நடதியாதாக கூறப்படும் கொடூரமான பரிசோதனைகள்...

நச்சு!
வடகொரியாவின் சிறையில் இருந்த பெண்மணி ஒருவர் தான் கண்டதாக கூறிய பெண்கள் மீது நடத்தப்பட்ட ஒரு கொடுமையான மனித பரிசோதனை இது. அந்த ஆய்வில் சிறையில் இருந்த ஐம்பது பெண் கைதிகளை உட்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் மிகவும் ஆரோக்கியமாக இருந்தவர்கள். அவர்களை நச்சு கலந்த முட்டைகோஸ் இலைகளை சாப்பிட கூறி வலியுறுத்தியுள்ளனர்.

கதறல்!
அந்த பெண்கள் தங்களை இந்த ஆய்வில் உட்படுத்த வேண்டாம் என கதறி மன்றாடி அழுதுள்ளனர். அந்த நச்சு கலந்த முட்டைகோஸ் இலைகளை உண்ட பிறகு அனைவருக்கும் இரத்த வாந்தி வந்துள்ளது. சிலருக்கு ஆசனவாய் வழியாக இரத்தம் வெளியாகியுள்ளது. அந்த இலைகளை உண்ட இருபது நிமிடங்களில் அந்த பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை!
வடகொரியா நடத்திய கொடூரமான பரிசோதனைகளில் ஒன்று, அனஸ்தீஷியா தராமல் அறுவை சிகிச்சை செய்வது. அறுவை சிகிச்சையை அந்த நபர் விழிப்புடன் இருக்கும் போதே முழுமையாக செய்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறை காவலர்!
வடகொரிய சிறை காவலராக பணியாற்றி அங்கிருந்து வெளியான நபர் ஒருவர் கூறியிருக்கும் விஷயம் மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, ஆய்வுகளில் உட்படுத்தப்படும் நபர்கள் மற்றும் மரண தண்டனை பெற்றுள்ள நபர்களை ஒரு பானம் கொடுத்து பிறகு, தலையில் வலுவாக சுத்தியல் போன்ற பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு தாக்குவார்களாம். பிறகு ஜோம்பிகள் போல அவர்களை துப்பாக்கி சுடுதல் பயிற்சிக்கு பயன்படுத்திக் கொலை செய்வார்களாம்.

கேம்ப் 22
கேம்ப் 22 என்ற இடத்தில் பணியாற்றி வந்த சிறை காவலர் ஒருவர் வடகொரியாவில் பரிசோதனை செய்யப்பட்ட வாயு ஆயுதங்கள் பற்றி கூறியுள்ளார். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. இந்த பரிசோதனையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் ஒரு கேஸ் சாம்பாரில் அடைக்கப்படுவார்கள். இந்த சாம்பார் மிகவும் நெருக்கமாக இருக்கும். அதில் காற்று இருக்காது.

நச்சு காற்று!
பிறகு ஒரு குழாய் வழியாக விஷத்தன்மை வாய்ந்த காற்றை அந்த கேஸ் சாம்பாருக்குள் அனுப்புவார்கள். அவர்களால் நிச்சயம் அந்த காற்றை சுவாசிக்காமல் இருக்க முடியாத நிலை உண்டாகும். அந்த காற்றை சுவாசிக்க துவங்கிய கொஞ்ச நேரத்தில் அவர்கள் இரத்தம் கக்கி இறந்துவிடுவார்கள். இதை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பு எடுத்துக் கொள்வார்கள்.

சித்திரவதை!
சித்திரவதை செய்யும் முறைகளிலும் பல புது வழிகளில் பரிசோதனைகள் செய்துள்ளது வடகொரிய அரசு. இவர்கள் புதிதாக கொண்டுவரும் ஒவ்வொரு யுக்திகளும் மிக பயங்கரமாக தான் இருக்கும். அதில் இன்று தான் 'The Knee and The Wood' எனும் முறை.

மரத்துண்டு!
இந்த முறையில் சிறைவாசி ஒரு மரத்துண்டு மீது முட்டியிட்டு நிற்க வேண்டும். அப்பது முட்டிக்கு கீழே இரத்த ஓட்டம் தடைப்படுவது போல கால்களை லாக் செய்துவிடுவார்கள். இப்படியாக ஒரு வாரம் வைத்திருந்தால் அந்த கைதியால் நடக்கவே முடியாது. இது ஒரு மாதத்திற்கு தொடர்ந்தால் அந்த சிறை கைதி இறந்துவிடுவர்.

ஆந்த்ராக்ஸ்!
வடகொரியாவில் இருந்து பின்லாந்துக்கு தப்பித்து ஓடிவந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் தான் உட்படுத்தப்பட்டிருந்த பரிசோதனை பயிற்சி குறித்து கூறிய சம்பவம் இது. பிறப்பால் குறைப்பாடு கொண்டிருக்கும் குழந்தைகள் மீது ஆந்த்ராக்ஸ் பரிசோதனை நடத்தியுள்ளது வடகொரிய அரசு.

பயங்கர கெமிக்கல்!
ஆந்த்ராக்ஸ் என்பது பயங்கரமான கெமிக்கல் ஆகும். இதை பிறக்கும் போதே மனவளர்ச்சி அல்லது உடல் வளர்ச்சி போன்ற பிறப்பு குறைபாடுகளுடன் இருக்கும் குழந்தைகள் மீது பரிசோதனை செய்துள்ளனர். இது எப்படி அவர்கள் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்கள் எப்படி இறக்கிறார்கள் என ஈவிரக்கம் இன்றி வடகொரிய அரசு செயற்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications











