உலகிலேயே இந்த நாட்டில் மட்டும் தான் ஆணுறுப்பு பெரிதாக்கும் சிகிச்சை இலவசமாம்!

Posted By:
Subscribe to Boldsky

கரீபியனின் பெரிய தீவு கியூபா. இதன் நிலப்பரப்பு மொத்தம் 42,800 சதுர கிலோ மீட்டர் தூரம். ஃபிடல் காஸ்ட்ரோ எனும் பெரும் தலைவனை பெற்ற நாடு. அப்பா எந்த நாட்டின் விடுதலைக்கு எதிராக இராணுவத்தில் சண்டையிட்டாரோ, அதே நாட்டுக்காக போராடி சுதந்திரம் பெற்று ஐம்பதாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சி செய்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

உலகிலேயே அதிக சதவித படிப்பு திறன் மற்றும் படிப்பறிவு பெற்றுள்ள நாடுகளில் கியூபா முதன்மை இடங்களில் இருக்கிறது. 2013வரை கியூபாவை சேர்ந்த நபரின் சராசரி மாத ஊதியம் வெறும் இருபது டாலர்கள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்குறி பெரிதாக்குதல்!

ஆண்குறி பெரிதாக்குதல்!

2009 நவம்பரில் பெரும் தீவு பகுதியான கியூபா அரசு இலவசமாக ஆண்குறி பெரிதாக்கும் அறுவை சிகிச்சை செய்து தரப்படும் என அறிக்கை வெளியிட்டது. இது அந்நாட்டு மக்களுக்கு மட்டும் தான். இயற்கையாக எந்தெந்த ஆண்களுக்கு ஆண்குறி பிரச்சனைகள் இருக்கிறதோ, அவர்களுக்கு இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படும் என அந்நாளில் வெளியான செய்தி அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஐந்து தசாப்தங்கள்!

ஐந்து தசாப்தங்கள்!

பிரிட்டனின் எலிசபெத் ராணி மற்றும் தாய்லாந்து அரசருக்கு அடுத்து நீண்ட காலம் தொடர்ந்து ஒரு பகுதியை ஆட்சி செய்த நபர் என்ற பெருமை பெற்றவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இதில், அரச குடும்பம் சாராது உலகில் ஐம்பதாண்டுகள் ஒரு பகுதியை ஆட்சி செய்த ஒரே நபர் என்ற பெருமையும் இவரையே சேரும்.

செல்போன்!

செல்போன்!

2000-களின் துவக்கத்தில் இருந்தே செல்போன்கள் பெருமளவு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. 2008 காலக்கத்தில் குறைந்தபட்சம் வீட்டில் ஒருவராவது செல்போன் வைத்திருப்பார் என்ற நிலை இருந்தது. ஆனால், 2008 வரையிலும் கியூபாவில் தனி நபர் செல்போன் சொந்தமாக பயன்படுத்த தடை இருந்தது.

தாடி!

தாடி!

சி.ஐ.எ மயிர் நீக்கும் தன்மை கொண்டிருந்த இரசாயனங்கள் (depilatory) கொண்டு ஃபிடல்காஸ்ட்ரோவின் தாடியின் வளர்ச்சியை நிறுத்த வேண்டும் என முயற்சி செய்தனர். இதன் மூலமாக அவரது வீரத்தையும், தைரியத்தையும் இழக்க செய்யலாம் என கருதினர்.

பிடல்காஸ்ட்ரோ தனது தாடியை ஷேவிங் செய்ய எப்போதுமே மறுப்பார். தாடியை ஷேவிங் செய்வதில் கவனம் செலுத்துவதால், ஒரு வருடத்திற்கு பத்து நாட்கள் வேலை செய்வதில் குறைகிறது என பிடல்காஸ்ட்ரோ கருதினார்.

இரவு பயணிகள்...

இரவு பயணிகள்...

இரவு நேரத்தில் பயணிக்கும் நபர்களை கியூபாவின் அரசு வாகனங்கள் கட்டாயம் ஏற்றி சென்று, அவர்கள் செல்ல வேண்டிய இடத்தில் பத்திரமாக இறக்கிவிட வேண்டும் என்ற லீகல் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிகரட்!

சிகரட்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி, சரியாக கியூபாவிற்கு தடை விதிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் 1,200 கியூபா சிகரட்டுகளை வாங்கினார். இதன் பிறகு தடையை விதித்தார் என ஒரு தகவல் அறியப்படுகிறது.

13ம் நாள், வெள்ளிக்கிழமை!

13ம் நாள், வெள்ளிக்கிழமை!

உலகளவில் திகிலூட்டும் நாளாக கருதப்படுவது Friday The 13th. நமது ஊர்களில் எப்படி அமாவசை அன்று பேய் பிடிக்கும் என கூறுகிறோமோ. அப்படி தான் மேற்கத்திய நாடுகளில் 13ம் நாள் வெள்ளிக்கிழமையை ஒரு அபசகுனமான நாளாகவே பார்க்கிறார்கள்.

பிடல்காஸ்ட்ரோ பிறந்த நாள் 13ம் நாள் வெள்ளிக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

வட கொரியா!

வட கொரியா!

வட கொரியாவிற்கு ஆயுதங்கள் அனுப்பி கடந்த 2013ல் கியூபா சிக்கியது. ஒருவேளை உலகில் மூன்றாம் உலகப்போர் வரும் எனில், அதற்கு இரண்டே காரணங்கள் மட்டும் இருக்க முடியும். இன்று உணவு, மற்றொன்று வட கொரியா.

ஒபாமா!

ஒபாமா!

கடந்த ஒரு நூற்றாண்டில் அமெரிக்காவின் சிட்டிங் அதிபராக இருந்த ஒருவர் கியூபாவிற்கு சென்றது ஒபாமா மட்டும் தான். தங்களுக்கு எதிராக கியூபா செயற்படுகிறது என எதிர்க்க ஆரம்பதிக்க காலக்கட்டத்தில் இருந்து புஷ் வரையிலும் யாரும் கியூபாவிற்கு சென்றதே இல்லை. இதை உடைத்து ஒபாமா கியூபாவிற்கு சென்று வந்தார்.

கோலா!

கோலா!

உலகிலேயே இரண்டே நாடுகள் மட்டும் தான். தங்கள் நாட்டில் கோலா பானம் விற்க தடை செய்துள்ளது. அவை கியூபா மற்றும் வட கொரியா. இந்த இரண்டு நாடுகளிலும் கோலாவிற்கு தடைவிதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளன.

சிறை!

சிறை!

ஊடகவியலாளர்களை அதிகம் கைது செய்த இரண்டாவது நாடு என்ற பெருமையும் கியூபாவிற்கே சொந்தம். கடந்த 2008ல் மட்டுமே பல ஊடகவியலாளர்களை கியூபா கைது செய்தது. இதற்கு பலதரப்பட்ட வழிகளில் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

அரசியல்வாதியின் பெயர்!

அரசியல்வாதியின் பெயர்!

தனி மனிதரின் பெயர் ஒரு போதும் அந்த சாலைக்கோ, கட்டிடத்திற்கோ, நிறுவனங்களுக்கோ அல்லது இடங்களுக்கோ வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் பிடல்காஸ்ட்ரோ. இந்த காரணத்தால் தனது பெயரையும் யாரும் பயன்படுத்த கூடாது என கூறியிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DYK: Penis Enhancement is Free in this Country - Facts About Cuba!

DYK: Penis Enhancement is Free in this Country - Facts About Cuba!
Subscribe Newsletter