ஊர்ந்து செல்லும் எறும்புகள் சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்!

Posted By:
Subscribe to Boldsky

எல்லாருக்கும் தன்னுடைய வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். நேர் வழியோ குறுக்கு வழியோ எப்படியாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில்,ஆசையில் நாம் மேற்கொள்ள சில விஷயம் முட்டாள்தனமாக இருந்துவிடுவது உண்டு.

வெற்றிக்கான வழியை சொல்கிறவர்கள் பகட்டுடன் ஏற்கனவே தன்னுடைய வாழ்க்கையில் வெற்றிப் பெற்று பெரிய அந்தஸ்த்தில் இருக்க வேண்டும். அதாவது அவர் ஒரு சோதனை எலி என்ற எண்ணத்துடன் தான் நாம் பார்கிறோம். குறிப்பாக,வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் அல்லது யாரைப் பார்த்து நாம் பிரம்மிக்கிறோமோ அவர்களைப் பார்த்து தான் நம்முடைய வாழ்க்கை தடத்தை வகுத்துக் கொள்ள விரும்புவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எறும்பு பாடம் :

எறும்பு பாடம் :

அவர்கள் பின்பற்றிய வழியை தெரிந்து கொள்வதில் நமக்கெல்லாம் அதீத ஆர்வம் இருக்கும். ஜெயித்தவர்கள் மட்டும் தான் வெற்றிக்கு வழி காட்ட வேண்டுமா? அதுவும் மனிதர்கள் மட்டும் தான் காட்ட வேண்டுமா என்ன?

நாம் பார்த்தாலே நசுக்கி தூக்கியெறியும் எறும்புகளிடம் இருந்து கற்றுக் கொள்ளவும் வாழ்க்கைப் பாடம் இருக்கிறது.

முயற்சி :

முயற்சி :

தன்னுடைய இலக்கை அடைய இறுதி வரை அதாவது தன் உயிர் போகும் வரை போராடும். அவை செல்லும் வழியில் ஏதாவது தடங்களை ஏற்படுத்துங்கள். வழியை தவறவிட்டு தவிக்கும், முட்டி மோதும், வழி மாறி முன்னேற முயற்சி செய்யுமே தவிர ஒரு போதும் சோர்ந்து பின் வாங்குவதில்லை.

Image Courtesy

தைரியம் :

தைரியம் :

பிற உயிரினங்களால் தன்னுடைய உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் தைரியமாக தன்னுடைய உணவைத்தேடி வெளியே வருகிறது. தான் சந்திக்கும் தடங்கள்களையெல்லாம் வெற்றிபடிகளாக்கி எனக்கான உணவுடன் நான் மீண்டும் என்னுடைய இருப்பிடத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஒரே கோரிக்கையுடன் லட்சிய வெறியுடன் பயணிக்கிறது.

Image Courtesy

நம்பிக்கை :

நம்பிக்கை :

எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில் எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாக காத்திருக்கும்.

தனக்கான காலம் வரும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும். நினைத்தது போலவே கோடை காலம் வந்ததும் தன் உணவைத்தேடி வெளியில் கிளம்பி விடும்.

முன்னதாக ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். குளிர் காலம் வந்ததும் தன்னால் வெளியில் செல்ல முடியாது என்று தனக்கான உணவை அதாவது அந்த குளிர்காலம் முடியும் வரை தேவைப்படுகின்ற உணவை சேமித்து வைத்திடும்.

Image Courtesy

எல்லாரும் சமம் :

எல்லாரும் சமம் :

நான் பெரியவன்,முதலாளி என்று எந்த எறும்பும் தனித்து இருப்பதில்லை. எல்லாரும் சமம் எல்லாரும் சேர்ந்து உழைக்கின்றன.

ஒன்றுடன் ஒன்று போட்டிப் போடுவதில்லை, பொறாமை கொள்வதில்லை. எவ்வளவு பேர் இருக்கிறோம் நான் கொண்டு வருகின்ற ஒற்றை நெல் இல்லையென்றால் என்ன ஆகிடப் போகிறது.

நான் மட்டும் ஏன் உழைக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைப்பதில்லை. தான் என்ற எண்ணம் இல்லாமல் எல்லாரும் பசியாற நானும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து உழைக்கிறது.

Image Courtesy

எதிர்ப்பு :

எதிர்ப்பு :

முழு கவனத்துடன் தன் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது வரும் இடைஞ்சல்களையும் சமாளிக்க தெரிந்து வைத்திருக்கிறது எறும்புகள். முதலில் சமாதனத்துடன் விலகிச் செல்லும், மீண்டும் மீண்டும் தன்னை சீண்டுபவர்களை அலறி துடிக்கும் வண்ணம் கடிக்கும்.

அடங்கி அடங்கி பின் வாங்காமல் தன்னுடைய எதிர்ப்பை காட்டிட வேண்டும். அதுவும் சரியான நேரத்தில்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Did you watch these things from Ant!

Did you watch these things from Ant!
Story first published: Tuesday, September 12, 2017, 13:14 [IST]
Subscribe Newsletter