தினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி!

Posted By:
Subscribe to Boldsky

வினோதங்களுக்கு பஞ்சமில்லாத பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம். நீங்கள் சில ரியாலிட்டி ஷோக்களில் அல்லது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற வினோதமான உணவுகள் உண்ணும் நபர்களை கண்டிருப்பீர்கள்.

ஆனால், இங்கே மத்திய பிரதேசத்தை சேர்த்த நபர் தனது உணவில் தினமும் பல்லி, பூச்சிகள் போன்றவற்றை சேர்த்து போட்டு சமைத்து சாப்பிட்டு வருகிறார். இவரால், பல்லி இல்லாத உணவை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது என கூறுகிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கைலாஷ்!

கைலாஷ்!

இவர் பெயர் கைலாஷ்., மத்திய பிரதேசத்தில் இருக்கும் மேனா எனும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனது அன்றாட உணவில் மூன்று பல்லியை தினந்தோறும் சேர்த்துக் கொள்கிறார்.

தன்னால் பல்லி சூப் குடிக்காமல் வாழவே முடியாது என கூறுகிறார் கைலாஷ். இவரது வாழ்நாளில் பல்லி இல்லாத நாளே இல்லை.

பாய்ஸன் மேன்!

பாய்ஸன் மேன்!

இவரை மக்கள் "பாய்ஸன் மேன்" என்று அழைத்து வருகிறார்கள். கடந்த இருபது வருடங்களாக கைலாஷ் இப்படி தினமும் பல்லியை சாப்பிட்டு வருகிறார்.

மேலும், தினமும் தூங்க செல்லும் முன் ஒரு டம்ளர் பல்லி ஜூஸ் குடித்து விட்டு தான் படுக்கைக்கு செல்கிறார் கைலாஷ்.

60 வகை!

60 வகை!

இதுவரை கைலாஷ் ஊர்வன, பூச்சிகள் என 60 வகை விசித்திர உணவுகள் சாப்பிட்டுள்ளார். விஷத்தன்மை உடைய பூச்சிகளை கூட அசால்ட்டாக சாப்பிடுகிறார் கைலாஷ். மேலும், இவர் உடலில் அந்த விஷத்தன்மை எந்த தாக்கமும் ஏற்படுத்தாதிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

விஷத்தன்மை!

விஷத்தன்மை!

மேலும், இந்த காரணத்தால் ஊரில் யாரேனும் ஒருவரை பாம்பு, தேள் போன்ற விஷப்பூசிகள் கடித்துவிட்டால் கைலாஷ் சென்று தன் வாயால் விஷத்தை உறிஞ்சி எடுத்து மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

His Everyday Breakfast, Lunch and Dinner is Lizard. He Loves to Eat Lizards Everyday!

His Everyday Breakfast, Lunch and Dinner is Lizard. He Loves to Eat Lizards Everyday,
Story first published: Tuesday, October 10, 2017, 16:30 [IST]