உங்க எதிர்காலத்த பத்தி உங்க தாடை என்ன சொல்லுது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய அல்லது தான் நேசிக்கும், வெறுக்கும் நபர்களைப் பற்றிய குணாதிசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமிருக்கும். ஒருவரது பெர்ஸ்னாலிட்டியை வைத்தே அவரைப் பற்றிய அபிப்ராயங்கள் நமக்கு முன்னரே தெரிந்திடும்.

ஒருவரின் தாடையின் வடிவத்தை வைத்தே அவரைப் பற்றிய குணநலன்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா உங்களால்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வட்ட வடிவம் :

வட்ட வடிவம் :

தாடையின் வடிவம் வட்ட வடிவமாக இருந்தால் அவர்கள் மிகவும் நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். தனியாக செயல்படும் போது கொஞ்சம் சொதப்பினாலும் கூட்டு முயற்சியின் மேல் மிகுந்த நம்பிக்கையுடையவர்களாக இருப்பர், தலைமைப்பண்பு மேலோங்கியிருக்கும். நண்பர்களுக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

Image Courtesy

சிறிய மற்றும் நேர் வடிவம் :

சிறிய மற்றும் நேர் வடிவம் :

இவர்கள் மிகவும் சென்சிட்டிவ்வான ஆட்களாக இருப்பார்கள். பிறருடன் எளிதாக பழகிடும் இவர்கள், உலகத்தை அதன் நடைமுறைகளை குற்றம் சுமத்திக் கொண்டிருப்பார்கள். எதுவும் சட்டென நிகழ்ந்திட வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு பொறுமையே இருக்காது. பேசுவதற்கு முன்னர் ஒரு முறை யோசித்து பேசினால் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

Image Courtesy

சதுர வடிவம் :

சதுர வடிவம் :

இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள். பிறரை எளிதாக கவர்ந்திடும் இவர்கள், சுயமாக முடிவெடுப்பதில் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். பிறரது மனதைப் பற்றி கவலைப்படமால் நினைத்ததை முகத்திற்கு நேராக சொல்லிடும் பழக்கம் உடையவர்கள் இவர்கள். இதனால் பல சங்கடங்களையும் சந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

Image Courtesy

முன் நீட்டிய தாடை :

முன் நீட்டிய தாடை :

தலைமைப்பண்பு இவர்களுக்கு மேலோங்கியிருக்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். தன்னுடைய இலக்கை அடைய பயங்கர பிரயத்தனம் படுவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். புதுமையை விரும்புபவர்கள் இவர்கள்.

Image Courtesy

நீளமான தாடை :

நீளமான தாடை :

தனக்கு நெருக்கமானவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். முடிவு எடுப்பதில் மிகவும் சாமர்த்தியமாக நடந்து கொள்வார்கள். இவர்களுக்கு தொலை நோக்குப் பார்வை அதிகம்.

Image Courtesy

இரட்டை தாடை :

இரட்டை தாடை :

இரட்டை தாடை இருப்பது பலருக்கும் பிடிக்காது. ஏதோ ஒரு குறையாக அதனை நினைப்பார்கள். அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். இது அதிர்ஷடத்தின் அறிகுறி, அதோடு நீங்கள் எப்போதும் உறுதியுடன் இருப்பீர்கள். சறுக்கினாலும் விரைவில் மீண்டு வரும் குணம் உங்களுக்கு இருக்கிறது.

Image Courtesy

பிளவுப்பட்ட தாடை :

பிளவுப்பட்ட தாடை :

இவர்கள் மிகவும் சுவாரஸ்யமான நபர்களாக இருப்பார்கள். எப்போதும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் முதல் நபராக இருப்பார்கள். எப்போதும் இளமையான லுக் இவர்களுக்கு இருக்கும். ரிஸ்க் எடுப்பதில் கில்லாடி இவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, pulse, astrology
English summary

Chin Shape Can Reveal Your personality

Chin Shape Can Reveal Your personality
Subscribe Newsletter