Latest Updates
-
வாழைத்தண்டு வாங்குனா இந்த மாதிரி மோர் கூட்டு செய்யுங்க... வெயில் காலத்துக்கு சூப்பரா குளுகுளுனு இருக்கும்...! -
பிரியாணியின் தலைநகரம் என்று அழைக்கப்படும் இந்திய நகரம் எது தெரியுமா? உங்களுக்கு எந்த பிரியாணி பிடிக்கும்? -
நாவூறும்.. சிக்கன் ரா ரா - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
KFC ஸ்டைல் பாப்கார்ன் சிக்கன் ரெசிபி... சிக்கனை இந்த மாதிரி செஞ்சு பாருங்க... எல்லாரும் ஆசையா சாப்பிடுவாங்க... -
சொந்த நட்சத்திரம் செல்லும் சுக்கிரன்: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
புதன் சனிபகவானின் நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளில் புரளப் போகும் 3 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்குநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோகங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
வார ராசிபலன் (29 March 2026-04 April 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
Tamil Nadu Election 2026: நம்ம தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கல்வித்தகுதி தெரியுமா?
சாஷ்டாங்க நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்ன?
இந்து மதக் கலச்சாரத்தில் நமஸ்காரமானது மிகவும் முக்கியமானது. கடவுளை வணங்குவதாகட்டும், அல்லது பெரியவர்களை வணங்குவதாகட்டும், நமஸ்காரம் மிகவும் முக்கியமாகும். நமஸ்காரத்தில் பல்வேறு வகைகள் உள்ளது. அதில் சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது மிகவும் புனிதமானது. இதில் உடலின் அனைத்து பாகங்களும் அதாவது அங்கங்கள் அனைத்தும் தரையில் படும்.
சாஷ்டங்க நமஸ்காரம் பொதுவாக "தண்டகார நமஸ்காரம்" மற்றும் "உதண்ட நமஸ்காரம்" என்றும் அறியப்படுகிறது. இந்து மத கோட்பாட்டின் படி, "தண்டா" என்கிற வார்த்தைக்கு "குச்சி" என்று பொருள். எனவே, ஒருவர் இந்த வகை நமஸ்காரம் செய்யும் பொழுது அந்த நபர் தரையில் விழுந்த குச்சி போல தெரிவதால் இதற்கு இந்த வகை பெயர் வழங்கப்படுகின்றது.

அர்த்தம்
இந்த செய்கையானது ஒரு விழுந்த குச்சி எவ்வாறு உதவியற்ற நிலையில் இருக்கின்றதோ, அதே நிலையில் தான் இருக்கின்றேன்; எனக்கு உன்னைச் சரணடைவதைத் தவிர வேறு கதி இல்லை; நீயே எனக்குத் தஞ்சம் என இறைவனை நோக்கி இறைஞ்சுவதை குறிக்கின்றது. மேலும் இந்த சாஷ்டாங்க நமஸ்காரம் இறைவனின் பாதங்களை நீங்கள் சரணாகதி அடைந்ததை குறிக்கும் ஒரு சின்னமாக விளங்குகின்றது.

அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம்
சில வழிகளில், இது இந்த நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை அழிக்கும் ஒரு வடிவம் என்று நம்பப்படுகிறது. நாம் நிற்கும் நிலையில் இருந்து தரையில் விழும் பொழுது நமக்கு காயம்பட்டுவிடுமோ என்று சிலர் அஞ்சக் கூடும். நாம் உட்கார்ந்த நிலையில் இருந்தாலும் நமக்கு காயம்படும் சாத்தியங்களும் உள்ளது. ஆனால், நாம் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யும் பொழுது, நாம் கீழே விழுந்து விடும் அபாயம் இல்லை, எனவே இங்கு நமக்கு காயம்படும் சந்தர்ப்பம் துளியும் இல்லை.

அடக்கத்தைக் குறிக்கும்
சாஷ்டாங்க நமஸ்காரமானது நம்முடைய அகங்காரத்தை நீக்கும் ஒரு உன்னதமான செயல்முறை ஆகும். மேழும் இதைப் பின்பற்றும் நபரிடம் அடக்கம் உருவாகத் தொடங்குகின்றது. பிறர் முன் நாம் அவர்களின் செய்கையின் காரணமாக் நாம் தலை வணங்கினால் அது நமக்கு அவமானம். அதுவே நாம் பிறரை விட உயர்ந்து இருந்தும், அடக்கமாக தலை தாழ்த்தி இருந்தால் அது நமக்கு மரியாதை மற்றும் வெகுமதியைப் பெற்றுத் தரும்.

நமஸ்காரம்
இந்த நமஸ்காரத்தை ஒரு சன்யாசி/வயதில் பெரியவர்கள/குருவிற்கு செய்யும் போது, அவர்கள் நம்முடைய நமஸ்காரத்தை எல்லாம் வல்ல இறைவனை நோக்கி எடுத்துக் செல்லும் ஒரு ஊடகமாக செயல்படுகின்றார்கள். இந்த நமஸ்காரத்தை மறுமுனையில் பெற்றுக் கொள்பவர்கள், எதிரே உள்ளவர் தன்னை வணங்காமல் இறைவனை நோக்கி வணங்குவதாக கருதிக் கொள்வார்கள். எனினும், அவர் அந்த நமஸ்காரத்தை இறைவனிடம் எடுத்துச் செல்கின்றார். மேழும் அவர் அந்த நபரின் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை புரிகின்றார்.

எனவே, சாஷ்டாங்க நமஸ்காரம் எவ்வாறு செய்யப்படுகிறது?
சாஷ்டாங்க நமஸ்காரம் புரியும் பொழுது அந்த நபரின் வயிறு தரையில் பட வேண்டும். மேழும் அந்த நபரின் எட்டு அங்கங்களும் தரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். எட்டு அங்கங்கள் என்பது மார்பு, தலை, கைகள், கால்கள், முழங்கால்கள், உடல், மனம் மற்றும் பேச்சைக் குறிக்கும். இந்த நமஸ்காரம் பொதுவாக ஆண்களால் செய்யப்படுகிறது.

பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியலாமா?
இந்து மத மரபுகளின் படி, பெண்கள் இந்த வகை நமஸ்காரம் புரியக்கூடாது. ஏனெனில் பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக்கூடாது.

ஏன் பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதி இல்லை?
பெண்கள் 'பஞ்சாங்க நமஸ்காரம்' மட்டுமே புரிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரியக்கூடாது. பெண்கள் தங்களுடைய உள்ளங்கைகளை ஒன்றாக சேர்ந்து தன் முன் உள்ள பெரியவர்களின் முன் மண்டியிட்டு தன் மதிப்பிற்குரியவர்களின் கால்கள் தொட்டு வணங்குவது 'பஞ்சாங்க நமஸ்காரம்' என அழைக்கப்படுகின்றது. இந்து மத சாஸ்திரங்களின் படி, பெண்களின் கர்ப்பப்பை மற்றும் மார்பகங்கள் தரையில் படக் கூடாது. எனவே அவர்களுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் புரிய அனுமதியில்லை. பெண்களின் கருப்பையானது ஒரு உயிரைத் தாங்கும் உன்னத வேலையைச் செய்கின்றது. அவர்களின் மார்பகமானது குழந்தைக்கு பாலூட்டும் உயரிய வேலையைச் செய்கின்றது. எனவே, அவை இரண்டும் தரையில் படக்கூடாது.



Click it and Unblock the Notifications











