ஆழ்கடலைப் பற்றிய வியக்கவைக்கும் சில அதிசய தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

நியூட்டனின் மூன்றாம் விதி எதற்கு ஒத்துப்போகிறதோ இல்லையோ, கடலுக்கு நன்கு ஒத்துப்போகும். மேலோட்டமாகப் பார்க்க அமைதியான சமத்துப் பிள்ளை போல இருந்தாலும், உள்ளுக்குள் அசுரத்தனமான ஆட்டம் போடும் குணம் கொண்டது கடல்.

எவரெஸ்ட் சிகரம் பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்!!!

இன்னுமும் கூட ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியாத உயிரினங்கள் ஆயிரக்கணக்கில் கடலினுள் இருக்கின்றன. நிலத்தில் உள்ள அழகையும், ஆபத்தையும் விட பலநூறு மடங்கு அதிகமான அழகும், ஆபத்தும் கடலில் இருக்கின்றன.

ஏலியன்கள் வாழும் கிரகங்கள் என்று ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட கோள்கள்!!!

கடல் பல விசித்திரங்களை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதற்கு பெர்முடா முக்கோணமே ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. இனி, ஆழ்கடலைப் பற்றிய வியக்கவைக்கும் சில அதிசய தகவல்கள் குறித்துப் பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அட்லாண்டிக் சமுத்திரம்

அட்லாண்டிக் சமுத்திரம்

ஒட்டுமொத்த அட்லாண்டிக் சமுத்தரத்தில் இருக்கும் நீரின் அளவை விட, அட்லாண்டிக் பனிப்பாறைகளில் அதிகப்படியான நீர் உறைந்துக் கிடக்கிறது.

சத்தத்தின் வேகம்

சத்தத்தின் வேகம்

காற்றில் விட ஐந்து மடங்கு வேகமாக நீரில் சத்தம் பயணம் செய்கிறதாம். ஒரு நொடிக்கு 1,435 மீட்டர் தூரம் சத்தம் நீரில் பயணிக்கின்றதாம்.

எரிமலைகள்

எரிமலைகள்

90% எரிமலைகள் தண்ணீருக்கு அடியில் தான் இருக்கின்றதாம்.

கடல்வாழ் உயிரினங்கள்

கடல்வாழ் உயிரினங்கள்

இதுவரை கடலில் 2,26,408 வகையான உயரினங்கள் உயிர் வாழ்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

25 மில்லியன் உயிரினங்கள்

25 மில்லியன் உயிரினங்கள்

இன்னுமும் கடலில் 25 மில்லியனுக்கும் மேலான உயிரினங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர். இதை வைத்துப் பார்த்தல், இதுவரை 1% மட்டும் தான் கண்டுப்பிடித்துள்ளனர்.

தூரம் கடந்து போகவில்லை

தூரம் கடந்து போகவில்லை

விண்வெளியில் பல ஒளி ஆண்டுகளைத் தாண்டி இருக்கும் கிரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியாளர்கள். இன்னுமும் கடலில் அடிமட்ட ஆழத்தை ஆராயவில்லை. இதுவரை வெறும் 10% கடலை தான் ஆராய்ந்திருக்கின்றனர்.

நிலவை விட குறைவாக...

நிலவை விட குறைவாக...

நிலவின் மேற்புறத்தில் கண்டுப்பிடித்ததைவிட குறைவான சதவீதம் தான் ஆழ்கடலைப் பற்றி கண்டுப்பிடித்துள்ளோம்.

எவரெஸ்ட் சிகரம் மூழ்கினால்

எவரெஸ்ட் சிகரம் மூழ்கினால்

ஒருவேளை பசுபிக் சமுத்திரத்தில் எவரெஸ்ட் சிகரம் மூழ்கினால், அதனுடைய உச்சி கடலின் மேல்பரப்பில் இருந்து இரண்டு கி.மீ தூரம் அடியில் இருக்குமாம்.

அதிகமான தீவுகள்

அதிகமான தீவுகள்

பசுபிக் சமுத்திரத்தில் மட்டுமே 25,000 தீவுகள் இருக்கின்றன. உலகில் உள்ள மொத்த தீவுகளைவிட அதிகமான தீவுகளைக் கொண்டுள்ளது பசுபிக் சமுத்திரம்.

வர்த்தகம்

வர்த்தகம்

வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் 90% வர்த்தகம் கடல் வழியாக தான் நடக்கின்றது. மற்றும் வெவ்வேறு நாடுகளுக்கு மத்தியில் நடக்கும் 50% தொலை தொடர்புகளும் கடல் மூலமாக தான் நடக்கிறதாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Things You Might Not Know About Earths Oceans

Do You Know About Surprising Things You Might Not Know About Earth’s Oceans? Read Here.