பிரபஞ்ச நிகழ்வுகள் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆதியும் அந்தமும் அறியப்படாத இந்த பிரபஞ்சம் என்றுமே ஒரு புரியாத புதிர் தான். இன்று வரையிலும் எந்த ஒரு அறிவியல் கூற்றும் பிரபஞ்சத்தைப் பற்றி 100% உண்மையை கூறியது இல்லை. அனைத்துமே ஏறத்தாழ இவ்வாறு இருக்கலாம் என அனுமானங்களாகவே இருக்கின்றன. நேற்று ஒரு விஞ்ஞானி ஒன்று கூறினால் இன்று அதை பற்றியே மற்றொருவர் வேறு விதமாக கூறுவார், நாளை அது வேறு விதமாக வேறொருவர் மூலமாக கூறப்படும். இதுதான் இன்று வரை நமது விண்வெளி அறிவியில் விஞ்ஞானிகள் நமக்கு புகட்டி வரும் பாடம்.

பால்வெளி அண்டத்தைப் பற்றிய நம்பமுடியாத சில மர்மங்கள்!

இதை எல்லாம் தாண்டி நாம் இன்று வரை அறியாத பல நிகழ்வகள் விண்வெளியில் நடந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில் நமது பக்கத்து வீட்டில் நடக்கும் விஷயங்களே நமக்கு தெரிவதில்லை இதில் எங்கு விண்வெளியில் நடக்கும் விஷயங்கள் நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், நீங்கள் வியப்படையும் வகையில் பல நிகழ்வுகள் விண்வெளியில் நடந்திருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் அறியவே இந்த கட்டுரை. சரி! இனி அந்த அறிய நிகழ்வுகள் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள, தொடர்ந்து படியுங்கள்...

விண்வெளி வாழ்க்கை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்வதேச விண்வெளி நிலையம்

சர்வதேச விண்வெளி நிலையம்

இதுவரை விண்வெளி ஆராய்ச்சிக்காக கட்டமைக்கப்பட்டதிலே மிக பெரிய பொருட் செலவிலும் மற்றும் பண செலவிலும் உருவாக்கப்பட்டது சர்வதேச விண்வெளி நிலையம் தான். இதன் கட்டுமான செலவு 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

விக்கிப்பீடியா

விக்கிப்பீடியா

நம் தினசரி பயன்படுத்திவரும் விக்கிபீடியா என்னும் வலைத்தளத்தின் பெயரில் உண்மையிலேயே ஒரு விண்கல் விண்வெளியில் இருக்கிறது. உக்ரைன் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதை கடந்த 2013 ஆம் ஆண்டு கண்டுபிடித்து இந்த பெயரை சூட்டியிருகின்றனர்.

நீராவி மேகம்

நீராவி மேகம்

நமது பூமியில் உள்ள நீரளவை விட கிட்டத்தட்ட 100 ட்ரில்லியன் மடங்கு அதிகமாக நீரளவு கொண்ட நீராவி மேகம் ஒன்று விண்வெளியில் இருக்கிறது. இதன் நீரளவை கொண்டு நமது பூமியில் உள்ள சமுத்திரங்களை போல 140 சமுத்திரங்களில் நீரை நிறைக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.

விண்வெளி மூலம் சம்பாதிக்கும் அமெரிக்கா

விண்வெளி மூலம் சம்பாதிக்கும் அமெரிக்கா

தற்போதைய கணக்கின் படி அமெரிக்கா விண்வெளிக்காக தான் செலவிடும் ஒரு டாலரின் மூலம் எட்டு டாலர் அளவு பொருளாதார பயனடைகிறது.

ஹைட்ரஜென் வெடிகுண்டு

ஹைட்ரஜென் வெடிகுண்டு

கடந்த 1962 ஆம் ஆண்டு அமெரிக்கா விண்வெளியில் ஹைட்ரஜென் வெடிகுண்டு ஒன்றை பரிசோதனை முறையில் வெடிக்க வைத்துள்ளது. இதன் சக்தி ஹீரோஷிமாவில் வெடிக்க வைத்த அணுகுண்டை போல 100 மடங்கு அதிகம். கிட்டத்தட்ட 250 மைல் சுற்றளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு சக்தி வாய்ந்தது அந்த வெடிகுண்டு!

விண்வெளியில் உங்களால் அழ முடியாது

விண்வெளியில் உங்களால் அழ முடியாது

விண்வெளியில் நீங்கள் அழ முடியாது, ஏனெனில் கண்ணீர் உங்கள் முகத்தோடு தான் ஒட்டியிருக்கும். நீங்களாக தான் அதை துடைத்தெடுக்க வேண்டும். கண்ணீர் துளி கீழே சிந்தாது!

வானொலி அலைவரிசை

வானொலி அலைவரிசை

கடந்த 1977 ஆம் ஆண்டு விண்வெளியில் இருந்து ஒரு வானொலி அலைவரிசையை பெறப்பட்டுள்ளது. இது தொடர்ந்து 72 வினாடிகள் நிலைத்திருந்துள்ளது. ஆனால், இன்று வரை அந்த வானொலி அலைவரிசை எங்கிருந்து வந்தது என கண்டறியப்படவில்லை.

1.2 கோடி

1.2 கோடி

நாசா அவர்களது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்காக வடிவமைக்கும் உடையின் விலை 1.2 கோடி ரூபாய் ஆகும்.

குப்பை குவியல்

குப்பை குவியல்

கடந்த ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் கொட்டிய குப்பை குவியல், கிராவிட்டி திரைப்படத்தில் வெடித்து சிதறியது போல ஒரு காட்சியில் காட்டியதை போல இன்னும் சர்வதேச விண்வெளி (ISS) சமூக பகுதியில் மிதந்துக் கொண்டிருகிறது.

உயரம்

உயரம்

நீங்கள் விண்வெளியில் இருக்கும் போது இரண்டு இன்ச் கூடுதலாக உயரம் அடைய முடியும். அங்கு புவி ஈர்ப்புவிசை இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அதனால் தான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சற்று உயரமடைந்து காணப்படுவதாய் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Space Facts to Increase Your Knowledge About the Universe


 You should surely need to know about the space facts to increase your knowledge about the universe.
 
Story first published: Monday, March 9, 2015, 14:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter