அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் என்ற அசாத்திய மனிதன் பற்றிய வியக்கத்தக்க தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், பெயரைக் கேட்டாலே சும்மா அதிரும். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை "பில்லியன்" நெஞ்சங்களில் குடியிருக்கும் கம்பீர நாயகன். பாடி பில்டராக இருந்த போது அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் கட்டழகை கண்டு வியந்த ஆண்களை விட விழுந்த பெண்கள் தான் அதிகம். சென்ற இடமெல்லாம் வெற்றி கண்டுள்ளார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

புரூஸ் லீ ஒரு வரலாற்று நாயகன் என ஊர்ஜிதம் செய்யும் கூற்றுகள்!!!

ஆறு முறை தொடர்ச்சியாக மிஸ்டர். ஒலிம்பியா பட்டம் வென்று சாதனைப் படைத்தவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். இதுமட்டுமல்லாது ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என இரண்டு முறை முன்னிலை வகித்தவர். மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராக தொடர்ந்து இரண்டு முறை வெற்றிப் பெற்றவர்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும் வெற்றிகளை வாரிக் குவித்த அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் உண்மையிலேயே ஒரு அசாத்திய மனிதன் தான். இந்த அசாத்திய மனிதனின் வாழ்க்கையில் பல வியக்கத்தக்க ஆச்சரியமான விஷயங்களும் நடந்திருக்கிறது, அந்த தகவல்கள் பற்றி இனி காணலாம்...

"பாப் மன்னன்" மைகேல் ஜாக்சனின் வினோதமான குணாதிசயங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண் அழகன்

ஆண் அழகன்

"தி டேட்டிங் கேம்" என்ற போட்டியில் போட்டியாளராக பங்கு பெற, தனது உடல் அங்க அளவுகள் பற்றி அவர் கூறிக் கொண்டிருக்கும் போது, பல பெண்கள் வெட்கத்தில் முகம் சிவந்து போனதாக அவரது நண்பர் டாம் அர்னால்ட் கூறியுள்ளார். தனது உடலைக் கச்சிதமாக வைத்துக் கொள்ள உடலுறவுக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாராம் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

செல்ல பெயர்கள்

செல்ல பெயர்கள்

தி கவர்னேட்டர், ரன்னிங் மேன், கெனான் ஆப் தி கவர்னர், கெனான் ஆப் ரிபப்லிக்கேன், தி மெஷின் போன்ற பல செல்ல பெயர்கள் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு இருக்கிறது.

ஹம்வீ

ஹம்வீ

ஹம்வீ எனும் வாகனத்தை வாங்கிய முதல் அமெரிக்க தனிக் குடிமகன் என்ற பெருமை அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரை சார்ந்தது. இது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் வாகனமாகும். இதை நிறுத்த இரண்டு சாதாரண காரின் இடம் தேவை.

காஸ்ட்லி நாயகன்

காஸ்ட்லி நாயகன்

ஹாலிவுட்டின் காஸ்ட்லி நாயகனாக திகழ்ந்தவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர். முறையே 1991 மற்றும் 2000 ஆம் ஆண்டு டெர்மினேட்டர் பாகம் இரண்டு மற்றும் மூன்று ஆகிய படங்களுக்கு இவர் வாங்கிய சம்பளம் இவருக்கு ஹாலிவுட்டின் காஸ்ட்லியான நாயகன் என்ற பெருமையை தந்தது. இவர் வாங்கிய சம்பளம் 20 மில்லியன் டாலர் (டெர்மினேட்டர் II) 30 மில்லியன் டாலர் (டெர்மினேட்டர் III)

குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம்

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் குழந்தைப் பருவத்தில், அவரது வீட்டில் அலைப்பேசி கிடையாது, குளிர் சாதன வசதி கிடையாது, ஏன் கழிவறை கூட கிடையாதாம். அவரது அப்பா மிகவும் "ஸ்ட்ரிக்ட்"டான அப்பாவாம்.

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் கனவு

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கரின் கனவு

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தனது வாழ்நாள் கனவாக அமெரிக்கா செல்ல வேண்டும், பெரிய நடிகராக வேண்டும் என்ற குறிக்கோள்கள் வைத்திருந்தாராம்.. அந்த இரண்டையும் சாதித்து, மாகாண கவர்னராகவும் பதவி வகித்து வருகிறார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

"ஐ வில் பி பேக்"

டெர்மினேட்டர் படத்தில் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் பேசிய, "ஐ வில் பி பேக்" என்ற வசனம் மிகவும் பிரபலமானது. ஆனால், உண்மையில் படத்தின் வசனகர்த்தா, " "ஐ வில் கம் பேக்" என்று தான் எழுதியிருந்தாராம். அதை மாற்றி பேசி பிரபலமாகவும் செய்தார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

அமெரிக்கன்

அமெரிக்கன்

ஆஸ்திரியாவில் 1947 ஆம் ஆண்டு பிறந்த அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், அமெரிக்க குடியிரிமைப் பெற்றது 1983 ஆம் ஆண்டு தான். இந்த இரு ஆண்டுகளும் இந்தியர்களுக்கும் மிக முக்கியமான ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அர்னால்ட் ஸ்ட்ராங்

அர்னால்ட் ஸ்ட்ராங்

இவர் நடித்த "ஹெர்குலிஸ்" திரைப்படத்தில் மட்டும் இவரது பெயர் அர்னால்ட் ஸ்ட்ராங் என்றுப் போடப்பட்டது.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில், உலக வரலாற்றிலேயே உடலை மிக கட்சிதமாக மெருகேற்றியவர் என்ற பெருமை அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

"கர்ண" கவர்னர்

கவர்னர் பதவிக்காக தான் வாங்கும் ஆண்டு சம்பளமான ஒரு கோடி ரூபாயை (இந்திய மதிப்பில்) அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துவிடுகிறார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

எடைத் திறன்

எடைத் திறன்

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், 300 எடை வரை தூக்கம் வலிமைக் கொண்டவர்.

700 வார்த்தைகள்

700 வார்த்தைகள்

டெர்மினேட்டர் II திரைப்படத்தில் மொத்தமே 700 வார்த்தைகள் தான் பேசியிருக்கிறார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்.

கண் இமைக்கவில்லை

கண் இமைக்கவில்லை

டெர்மினேட்டர் II திரைப்படத்தில் ஒரு காட்சியில் கூட அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் கண் இமைத்திருக்க மாட்டார். துப்பாக்கி சுடும் காட்சியில் கூட அவர் கண் இமைக்கவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Facts About the Star of the Epoch Arnold Schwarzenegger

Arnold Schwarzenegger is the real human hulk. From his earlier career to the Governor of States position, there are so many facts which amaze you about this star of epoch.
Story first published: Saturday, April 4, 2015, 15:41 [IST]
Subscribe Newsletter