கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இராஜராஜ சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன! பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழ பேரரசு!

மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!

தென்னிந்தியாவில் தொடங்கி, மேற்கு இந்தியா வழியே தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, தற்போதைய பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கடாரம், இலங்கை போன்ற நாடுகளை தனது கப்பற்படையைக் கொண்டு வெற்றி வாகை சூடியவர்கள் சோழ பேரரசர்கள்.

இந்திய புராணக் கதைகளில் கூறப்பட்டுள்ள வியக்க வைக்கும் அறிவியல் பூர்வமான கண்டுப்பிடிப்புகள்!!!

இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழன் போன்றவர்கள் சோழ பேரரசின் மிக முக்கிய அரசர்களாக குறிப்பிடப்படுகின்றனர். இனி, இவர்களது வியக்க வைக்கும் கப்பற்படையைப் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆயிரம் வருடம்

ஆயிரம் வருடம்

ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து ராஜாங்கம் நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ சாம்ராஜ்யத்திற்கு மட்டும் தான் இருக்கிறது.

Image Courtesy

"கனம்"

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

Image Courtesy

"கன்னி"

தமிழில் "கண்ணி" என்பதற்கு, "பொறி" என்ற பொருள் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கண்ணி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்

Image Courtesy

"ஜதளம்" அல்லது "தளம்"

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

Image Courtesy

"மண்டலம்"

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

Image Courtesy

நிரந்திர போர் பிரிவு

நிரந்திர போர் பிரிவு

நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

Image Courtesy

அணி

அணி

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

Image Courtesy

"அதிபதி"

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

Image Courtesy

கைப்பற்றிய பகுதிகள்

கைப்பற்றிய பகுதிகள்

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, ஜாவா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

Image Courtesy

"நாவாய்"

பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Facts About Chozha Kings And Their Navy Force

Do you know about the amazing facts about the chozha kings and their navy force? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter