Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மறந்தும் இந்த 5 பொருட்களை தானம் செஞ்சுடாதீங்க.. இல்ல அது நிதி பிரச்சனையை ஏற்படுத்தும்...
Astrology Tips: தானம் செய்வது என்பது ஒரு புண்ணிய செயல். இந்து மதத்தில் தானம் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தன்னிடம் போதுமான அளவு இருப்பதை இல்லாதவருக்கு கொடுக்கும் போது, அது புண்ணியத்தை சேர்ப்பதோடு, கடவுளின் அருளும் கிடைக்கும் என ஜோதிடம் கூறுகிறது. என்ன தான் தானம் ஒரு நற்செயலாக இருந்தாலும், ஒருசில பொருட்களை நாம் தானம் செய்யக்கூடாது.
அப்படி தானம் செய்தால், அது நன்மைக்கு பதிலாக தீமையை விளைவிக்கும் என சாஸ்திரம் கூறுகிறது. குறிப்பாக ஜோதிடத்தில் தானமாக கொடுக்கக்கூடாத பொருட்களை தானம் செய்தால், அது ஒருவரது வாழ்வில் நிதி பிரச்சனைகளை கொண்டு வரும். இப்போது எந்த பொருட்களை தானம் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

சீப்பு
ஜோதிடத்தின் படி, தலைசீவும் சீப்பை எப்போது யாருடனும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது தானமாக கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால், அது ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, ஒருவரது அதிர்ஷ்டத்தில் தடையை ஏற்படுத்தும். எனவே சீப்பை எப்போதும் யாருக்கும் தானம் கொடுக்காதீர்கள்.
பேனா
பேனா அல்லது பென்சில் போன்றவை வெறும் எழுதும் பொருட்களாக இருக்கலாம். ஆனால் அவற்றை ஒருவருக்கு தானமாக கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், அது உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதோடு, வாழ்க்கையில் பலவிதமாக சிக்கல்களை சந்திக்க வைக்கும்.
கைக்கடிகாரம்
நிறைய பேர் கைக்கடிகாரத்தை பரிசாக வழங்குவார்கள். ஆனால் எப்போதும் கைக்கடிகாரத்தை யாருக்கும் பரிசளிக்கக்கூடாது. அப்படி வழங்குவதன் மூலம், நீங்கள் உங்களின் நல்ல மற்றும் கெட்ட நேரத்தை மற்றவருக்கு கொடுக்கிறீர்கள் என்று அர்த்தம். மேலும் கைக்கடிகாரத்தை மற்றவருக்கு கொடுப்பது பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் மற்றும் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிளாஸ்டிக் பொருட்கள்
பிளாஸ்டிக் பொருட்களை எப்போதும் தானம் கொடுக்கக்கூடாது என்று ஜோதிடம் கூறுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்கினால், அது வணிகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, தொழிலை பாழாக்கலாம். மேலும் வீட்டில் பணப் பிரச்சனைகளையும், சண்டை சச்சரவுகளையும் அதிகரிக்கும். எனவே பிளாஸ்டிக் பொருட்களை தானம் செய்யாதீர்கள்.
காலாவதியான உணவு, கிழிந்த ஆடைகள், காலணிகள்
ஏழை எளியோருக்கு தானம் செய்வதாக இருந்தால், வீட்டில் உள்ள கெட்டுப் போன பொருட்கள், கிழிந்த ஆடைகள், காலணிகள் போன்றவற்றை கொடுக்கக்கூடாது. இது புண்ணியத்திற்கு பதிலாக பாவத்தையே அதிகரிக்கும். மேலும் இச்செயல் தொழிலில் நஷ்டத்தை ஏற்படுத்துவதோடு, முன்னேற்றத்தைத் தடுக்கும். ஆகவே எப்போதும் தானம் செய்வதாக இருந்தால், அது புதியதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications