Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
எம். ஜி.ஆர் முதல் நம்ம தளபதி விஜய் வரை- அரசியலுக்கு வந்த நடிகர்கள்!
Lok Sabha Election 2024: நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது புதிது கிடையாது. அந்த காலத்தில் இருந்த என். டி.ஆர், எம். ஜி.ஆர் முதல் நம்ம தளபதி விஜய் வரை பெரும்பாலான நடிகர்கள் அரசியலில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர். மக்கள் மனதில் பிடித்த இடத்தை அப்படியே வாக்குகளாக மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் அதையும் செய்து காட்டியவர் தான் நம்ம எம். ஜி.ஆர் அவர்கள்.
பிப்ரவரி 2 அன்று, தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான தளபதி விஜய் அவர்கள், தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்தார். இப்படி ஏராளமான நடிகர்கள் நம் நாட்டின் தலைவர்களாக மாறியுள்ளனர் அவர்களைப் பற்றித் தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

எம். ஜி ராமச்சந்திரன் என்ற எம். ஜி.ஆர்
எம்.ஜி.ஆர் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல ஒரு நல்ல தலைவரும் கூட. அவரது அரசியல் பயணம் உண்மையில் ஒரு சிறந்த பயணம் என்றே கூறலாம். அவர் ஆட்சியில் இருந்த வரை ஒரு சிறந்த அரசியல் வாதியாக திகழ்ந்து உள்ளார். தனது நடிப்பின் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்ற எம். ஜி.ஆர் அவர்கள் 1977 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்றார். 1980 ல் நான்கு மாதங்கள் தவிர, 1987 ல் அவர் இறக்கும் வரை தமிழக முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"மக்கள் திலகம்" என்ற பட்டத்தை மக்கள் ஒன்றும் சும்மா அவருக்கு கொடுக்கவில்லை. அதற்காக அவர் அரசியலில் மிகுந்த பாடுபட்டார். மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றார். மக்களின் அரசராக மாறினார். மக்களின் அன்பு மனங்களை வென்றதால் தான் அவர் இறக்கும் போது மக்கள் கூட்டம் அலைகடல் என திரண்டது. இன்றும் மக்கள் மனதில் நீங்காத ஒரு தலைவராக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
ஜெயலலிதா அம்மா
எம். ஜி ஆருக்கு அப்புறம் அவருடைய வழிதடத்தில் பயணம் செய்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியவர் தான் அம்மா ஜெயலலிதா அவர்கள். 1961 முதல் 1980 வரை திரைப்படங்கள் மூலம் தனது சினிமா முத்திரையைப் பதித்த பிறகு, தடையின்றி அரசியலில் இறங்கினார். ஆரம்பத்தில் பல அரசியல் சிக்கல்களை அவர் சிந்தித்தாலும் அவருடைய முயற்சியும் பிடிவாத குணமும் அவரை வெற்றி பெறச் செய்தது.
1991 இல் அவர் தமிழ்நாட்டின் இளைய முதல்வராக கிட்டத்தட்ட 1991 மற்றும் 2016 க்கு இடையில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார். தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையிலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர்.
மோகன் பாபு
மோகன் பாபு தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறந்தவர். அவரும் எம். டி. ராமா ராவும் நட்பாக பழகி வந்தார்கள். அவர் ராமாராவின் தெலுங்கு தேசம் கட்சியின் (டிடிபி) தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். 1982 ஆம் ஆண்டு அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்த மோகன் பாபு, ஆந்திரப் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ராஜ்யசபா உறுப்பினராக பொறுப்பேற்றார்.
தெலுங்கில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் தன்னுடைய பன்முகத் திறமையை காட்டியுள்ளார். மோகன் பாபு 500 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன் பாபு ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல ஒரு சிறந்த அரசியல்வாதியும் கூட
உலக நாயகன் கமல்ஹாசன்
சிலர் பேர் இரத்தத்தில் பிறக்கும் போதே நடிப்பு ஊறி இருக்கும் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட மெகா நடிகர் தான் கமல்ஹாசன் அவர்கள். என்ன வேடம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக நடிக்கக் கூடிய திறன் படைத்தவர். அதனால் தான் மக்கள் அவரை உலகநாயகன் என்று அழைக்கின்றனர்.
தன்னுடைய நடிப்புத் திறமையால் உலகத்தில் உள்ள எல்லா மக்களின் மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்தவர். நடிப்பு மட்டுமல்ல அரசியலுக்கு தேவையான பேச்சுத்திறமையும் மிக்கவர். 2018 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் (எம்என்எம்) ஐ நிறுவினார்.
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு உரிய ஒரே நபர் ரஜினிகாந்த் அவர்கள். அவருடைய ஸ்டைலால் மக்களை கட்டிப் போட்டவர். இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. திரையில் மாயாஜாலத்தை உருவாக்கிய இவர் 31 டிசம்பர் 2017 அன்று அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன்படி ரஜினி மக்கள் மன்றம் என்ற தனது அரசியல் கட்சியை உருவாக்கினார்.
ஆனால் உடல் நிலை காரணமாக அதை அவரால் தொடர முடியவில்லை. தன்னுடைய அரசியல் பயணத்தில் இருந்து வெளியேறி விட்டார். ஆனால் இன்றும் மக்கள் அவரை தலைவராக வர வேண்டும் என்று எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தளபதி விஜய்
பொதுவாக நடிகர்கள் என்றாலே பெரியவர்களுக்குத் தான் அதிகமாக பிடிக்கும். ஆனால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு நபர் என்றால் தளபதி விஜய் அவர்கள. தன்னுடைய நடிப்புத் திறமையால் மக்கள் மனதை வென்றவர்கள். அவர்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகராக திகழ்ந்து வருகிறார். தன்னுடைய அன்பான மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று நடிப்புப் பயணத்தை முடித்து விட்டு, தற்போது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
இதன் படி பிப்ரவரி 2 அன்று, தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை அறிவித்தார். இவருடைய தொண்டர்கள் மூலமாக மக்களுக்கு பல நல்ல விஷயங்களையும் செய்து வருகிறார். எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவராக பணியாற்ற தீராத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











