Latest Updates
-
பாபா வாங்காவின் கணிப்பு படி 2026-ன் பிற்பகுதியில் உலகில் என்னென்ன சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
டெல்லியை ஆண்ட முதல் சுல்தான் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
ஆந்திராவின் அட்டகாசமான வெஜ் புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
ராகு சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் முடிவுக்கு வரப்போகுதாம் -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ள பெண் மனைவியாக கிடைத்த ஆண்கள் உலகிலேயே அதிர்ஷ்டசாலியாம் -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க
பிரதமர் முதல் எம்எல்ஏ வரை இந்தியாவில் ஒரு ஓட்டால் தோல்வியை சந்தித்த விசித்திர நிகழ்வுகளை பற்றி தெரியுமா?
உலக அரங்கில் இந்தியாவின் முக்கியமான அடையாளமாக இருப்பது அதன் ஜனநாயகம்தான். நாம் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இருக்கலாம், ஆனாலும் நம் மக்கள் ஓட்டுப்போடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியோ வாக்கின் பலத்தைப் பற்றியோ அதிகம் நம்புவதாகத் தெரியவில்லை. அதனால்தான், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியாவில் குறைந்தளவு வாக்குப்பதிவே இன்றுவரை பதிவாகி வருகிறது.
100% சதவீத வாக்குப்பதிவு என்பது இன்றுவரை கனவாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான மக்கள் நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்கின்றனர். நம்முடைய ஒரு ஓட்டு பெரிதாக என்ன செய்து விடுகிறது எனும் அலட்சியமே இதற்கு காரணாமாக இருக்கிறது.

ஆனால் நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு வாக்கு தேர்தலின் போக்கையே மாற்றியமைத்த தருணங்கள் பல உள்ளன. அவை என்னென்ன என்று இதை பதிவில் பார்க்கலாம்.
கர்நாடக சட்டசபை தேர்தல்(2004)
மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஏ ஆர் கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸின் ஆர் துருவநாராயணனிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். சந்தேமரஹள்ளி தொகுதியில் போட்டியிட்ட அவர்கள் முறையே 40751 மற்றும் 40752 வாக்குகள் பெற்றனர். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் கிருஷ்ணமூர்த்தி தனது சொந்த ஓட்டுநரை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளார்.
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்(2008)
மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி. ஜோஷி பிஜேபியின் கல்யாண் சிங் சௌஹானிடம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், ஜோஷி 62215 வாக்குகளைப் பெற்றார், 62216 வாக்குகளை சௌஹான் பெற்றார். ஜோஷியின் சொந்த தாய், மனைவி, ஓட்டுனர் ஆகியோர் வாக்களிக்க வந்திருந்தால், ஜோஷி வெற்றி பெற்றிருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அவர்களால் ஓட்டு போட வர முடியவில்லை.
மொஹாலி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல்(2015)
அகாலிதள கிளர்ச்சியாளர் குல்வந்த் சிங் தலைமையிலான 'ஆசாத் குழு'வைச் சேர்ந்த நிர்மல் கவுரை எதிர்த்து காங்கிரஸின் குல்விந்தர் கவுர் ரங்கி மீண்டும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
BMC தேர்தல் (2017)
மும்பையில் நடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டு எண். 220 பேர் ஒரு வாக்கின் முக்கியத்துவத்தை நேரடியாகப் புரிந்துகொண்டனர். தேர்தலில் முதலில் சிவசேனாவை சேர்ந்த சுரேந்திர பாகல்கருக்கு அந்த இடம் கிடைத்தது. இருப்பினும், பாஜக வேட்பாளர் அதுல் ஷா மறு வாக்கு எண்ணிக்கையைக் கோரியபோது, இரு வேட்பாளர்களும் ஒரே எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றுள்ளனர் - 5,946. ஷா இறுதியாக குலுக்கலின் அடிப்படையில் அந்த இடத்தை வென்றார். ஆனால் ஒருவருக்கு ஆதரவாக ஒருவர் வாக்களித்திருந்தால், முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
நம்பிக்கை வாக்கெடுப்பு(1999)
நாட்டின் தலையெழுத்தே ஒரு ஓட்டால் மாறிய சம்பவம் 1999-ல் நடந்தது. பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒரு ஓட்டால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று தனது ஆட்சியை இழந்தார். ஏப்ரல் 17, 1999 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி.க்கள் ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கு வாக்களிப்பதாக உறுதியளித்திருந்தனர், ஆனால் பின்னர் வாக்களிக்காமல் கவிழ்த்து விட்டனர். வாக்களிப்பு முடிந்ததும், வாஜ்பாய் இந்தியப் பிரதமராக இருக்கும் வாய்ப்பை இழந்தார்.



Click it and Unblock the Notifications
