Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இன்றைக்கு யாருக்கு வரமான நாள்... யாருக்கு சாபமான நாள் தெரியுமா?
இன்றைய தினம் யாருடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். யாருக்கு பிரச்சினை ஏற்படும். யாருக்கு பணம் வரவு வரும் யாருக்கு செலவு வரும் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா?
இன்றைய தினம் யாருடைய உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும். யாருக்கு பிரச்சினை ஏற்படும். யாருக்கு பணம் வரவு வரும் யாருக்கு செலவு வரும் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் இன்றைய ராசி பலன் பதில் தருகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்று பார்க்கலாம். இன்றைய சூழ்நிலையில் நாம் ஒவ்வொரு நாளும் உயிரோடு இருப்பதே வரமான நாள்தான். இன்றைக்கு யார் யாருக்கு வரமான நாள் யாருக்கு சாபமான நாள் என்று பார்க்கலாம்.

மேஷம்
வேலையில இருக்குறவங்களுக்கு இன்னிக்கு வேலைச்சுமை கூடும். வேலை வேலைன்னு இருக்காம கொஞ்சம் ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க. இல்லேன்னா உஷ்ணம் சம்பந்தமான நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. சத்தான சாப்பாட்டை சாப்பிடுங்க. இன்னிக்கு தண்டச்செலவுங்களும் வந்துடும். அநாவசிய மனக்குழப்பம் வரலாம். வீட்டுல இருக்குறவங்க கூட மனஸ்தாபம் வரலாம் கவனம். நீங்க சந்தோஷமா பேசுனா காதல் வைபோகமேன்னு பாடுவீங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 18
சாதகமான நேரம் : பிற்பகல் 01:00 முதல் பிற்பகல் 3:00 மணிவரை

ரிஷபம்
இன்னிக்கு உத்தியோகத்துல இருக்குறவங்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். அதோட உழைக்குறதுக்கு ஏத்த மாதிரியே வருமானம் இருக்கும். அதனால பணத்தை கொஞ்சம் சிக்கனமா செலவழிக்க பாருங்க. இல்லேன்னா செலவுக்கு வெளியில கடன் வாங்குற நிலைமை வந்துடும். பிசினஸ் பண்றவங்களுக்கு வியாபாரத்துல லாபம் நிறைய வரும். உங்க வீட்ல சின்னச் சின்ன சந்தோஷங்கள் ரொமான்ஸ் அனுபவங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : மாலை 6:00 முதல் இரவு 10:00 மணிவரை

மிதுனம்
இன்னிக்கு பிசினஸ்ல லாபம் பிச்சிக்கிட்டு போகும். புது முயற்சிங்களுக்கு வெற்றி கிடைச்சிடும். பண வரத்தும் நார்மலா இருக்கும். அதனால செலவுங்களை கண்ட்ரோல் பண்றது நல்லது. செய்யுற வேலையை உற்சாகமா சந்தோஷமா செய்வீங்க. ஹெல்த் கண்டிஷன் அற்புதமா இருக்கும். உங்களுக்கு இன்றைக்கு ரொமான்ஸ் ஆன நாள்.
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
அதிர்ஷ்ட எண் : 14
சாதகமான நேரம் : மாலை 4:00 முதல் இரவு 6:00 மணிவரை

கடகம்
இன்னிக்கு உங்க ஃபைனான்ஸ் பொசிஷன் ரொம்பவே அற்புதமா இருக்கும். புதுசா எடுக்குற முயற்சியில தடை, தாமதம் ஏற்படலாம் கொடுக்கும். வீட்டுல இருக்குறவங்களை கொஞ்சம் அனுசரிச்சி விட்டுக்கொடுத்து போறது நல்லது. பிசினஸ்லயும் லாபம் கிடைக்கும். குடும்பத்துல இன்னிக்கு மருத்துவு செலவு வகையில பணம் கரையலாம் கவனமாக இருங்க
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 11
சாதகமான நேரம் : இரவு 8:00 முதல் இரவு 10:40 மணிவரை

சிம்மம்
இன்னிக்கு உங்க ராசிக்கு சந்திராஷ்டமம் இருக்குறதுனால, வீட்டை விட்டு வெளியில எங்கயும் போக வேணாம். வண்டி வாகனத்தை எடுத்தா பிரச்சனை வந்துடும். வீட்டுல இருந்து வேலை பாக்குறவங்க இன்னிக்கு சீனியர் அதிகாரியோட வாக்குவாதம் பண்றதை அவாய்ட் பண்றது நல்லது. வீட்டுல இருக்குறவங்க கூட சின்னச்சின்னதா சண்டை, வாக்குவாதம்னு வர வாய்ப்பிருக்கு கவனமாக இருங்க. அதனால விட்டுக்கொடுத்து போறது நல்லது இல்லாட்டி அடி விழுகும். திடீர்னு பெரிய தொகையை யாருக்கும் கடனாகக் கொடுக்க வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம் : ப்ரவுன்
அதிர்ஷ்ட எண் : 24
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

கன்னி
இன்னிக்கு நீங்க பெரிய விஐபிக்களோட பேசறதுக்கு வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்துல கணவன் மனைவிக்குள்ளாற இருந்து வந்த ஊடல் குறைஞ்சி கூடல் அதிகாகிடும். ஃப்ரண்ட்ஸுங்க கிட்ட இருந்து ஹெல்ப் கிடைக்கும். மறைமுக எதிரிங்களோட பலம் குறைஞ்சி உங்களோட பலமும் கூடிடும். இன்றைக்கு உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமையப்போகுது.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 32
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

துலாம்
இன்னிக்கு வெளியில யார்கிட்டயும் பணம் கடன் வாங்க வேணாம். வேலை பாக்குறவங்களுக்கு சீனியர் அதிகாரிங்களோட சப்போர்ட் கிடைக்கும். இன்னிக்கு உங்க வருமானம் கூடிடும்கிறதுனால வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய சாமான்களையும் வாங்கிடுவீங்க. மனசும் நிம்மதியாகிடும். உங்க வீட்ல சந்தோஷத்திற்கு இன்றைக்கு குறைவு இருக்காது.
அதிர்ஷ்ட நிறம் : வயலட்
அதிர்ஷ்ட எண் : 33
சாதகமான நேரம் : பிற்பகல் 2:45 முதல் இரவு 8:00 மணிவரை

விருச்சிகம்
இன்னிக்கு பழைய கடன்கள் எல்லாம் வசூலாகிடும். அதோட பேங்க் லோனும் கிடைக்க வாய்ப்பிருக்கு. பிள்ளைங்களால வீட்டுல பிரச்சனை வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. கவனமா பாத்துக்கோங்க. பண வரத்தும் அமோகமா இருக்கும். கண்டதையும் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காம ஹெல்த் கண்டிஷன்ல அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 27
சாதகமான நேரம் : நண்பகல் 1:45 முதல் பிற்பகல் 3:30 மணிவரை

தனுசு
இன்னிக்கு வீட்டுல இருக்குறவங்க கிட்ட கொஞ்சம் விட்டுக்கொடுத்து அனுசரிச்சி போனா பிரச்சனை வராம பாத்துக்கலாம். புதுசா எந்த முயற்சியோ அல்லது புதுசா எதுலயும் இண்வெஸ்ட் பண்றதோ இப்போதைக்கு வேணாம். இன்னிக்கு உங்களுக்கு பணவரத்து சுமாரா தான் இருக்கும். அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்ல கொஞ்சம் அக்கறை எடுத்துக்குறது நல்லது.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் இரவு 9:00 மணிவரை

மகரம்
இன்னிக்கு பண வரத்து அமோகமா இருந்தாலும், அதுக்கேத்த மாதிரி செலவுங்களும் வரிசையா வந்து தொல்லை கொடுக்கும். வீட்டுலயும் அநாவசியமா யார்கிட்டயும் வெட்டி பேச்சு பேசாம அமைதியா இருந்தா நல்லது. கூடவே விட்டுக்கொடுத்து போனீங்கன்னா பிரச்சனை பெருசாகாமா அவாய்ட் பண்ணலாம். இன்னிக்கு புதுசா எடுக்குற முயற்சிங்கள்ள ஜெயிச்சி காட்டுவீங்க. உங்க வீட்ல உங்க காதல் துணையோ சும்மா ரொமான்ஸ் பிச்சிக்கிட்டு போகும்.
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு
அதிர்ஷ்ட எண் : 62
சாதகமான நேரம் : மாலை 3:40 முதல் மாலை 6:15 மணிவரை

கும்பம்
இன்னிக்கு விரைய செலவுகளுக்காக வெளியில கடன் வாங்குற நிலைமை ஏற்படும். எச்சரிக்கையா இருக்க பாருங்க. பணத்தை செலவு பண்றதுக்கு முன்னாடி எதையும் ஒரு தடவைக்கு நாலு தடவை நல்லா யோசிச்சி அதுக்கப்புறமா செலவழிக்க பாருங்க. உத்தியோகம் பாக்குறவங்களுக்கும் இன்னிக்கு அநாவசிய பிரச்சனைங்க முளைக்கலாம். செய்யுற வேலையிலும் அசமஞ்சமா இருப்பீங்க. மொத்தத்துல இன்னிக்கு உங்களுக்கு மந்தமான நாள் எதிலும் எச்சரிக்கையாக இருங்க.
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம்
அதிர்ஷ்ட எண் : 26
சாதகமான நேரம் : நண்பகல் 12:30 முதல் மாலை 5:00 மணிவரை

மீனம்
இன்னிக்கு பிசினஸ்ல நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும், கூடவே லாபமும் வரும். ஏற்கனவே கொடுத்த கடனும் இன்னிக்கு வசூலாகிடும். பிள்ளைங்களால உங்களுக்கு பெருமை வந்து சேரும். அதனால இன்னிக்கு ரொம்பவே உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க. குடும்பத்துலயும் இன்னிக்கு எல்லோர் கிட்டயும் ஒத்துமை கூடிடும். சொந்தக்காரங்களால உண்டான பிரச்சனையும் குறையும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 21
சாதகமான நேரம் : காலை 4:30 முதல் காலை 10:00 மணிவரை



Click it and Unblock the Notifications











