Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
வாட்ஸ்-அப்பில் நிர்வாண படம் பகிர்ந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கதி - My Story #263
நிர்வாண படங்களை ஆன்லைனில் பதிவிடுவேன் என்று மிரட்டினான் - My Story #263
அப்போது நான் பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து ரிசல்ட்க்காக காத்திருந்த காலம். எனக்கு சமூக தளங்கள் பரிச்சயம் ஆனதும் அப்போது தான். ஃபேஸ்புக் கணக்கை துவக்கினேன். புதியதாக நிறைய பேர் நண்பர்கள் ஆனார்கள். நிறைய பேர் எனக்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
நான் பெரிதாக யாருக்கும் ரிப்ளை செய்ய மாட்டேன். அவன் மட்டும் எனக்கு தினமும் பேச வேண்டும் என்று நச்சரித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்திற்கு மேல் ரிப்ளை செய்தேன். பிறகு, ஒருசில மாதங்கள் நட்பாக பேசி வந்தோம். மிக கனிவாக, அன்பாக பேசி வந்தான். நட்பு பிறகு காதலாக மாறியது.

அவனது உண்மையான முகம் என்பதை போக போக தான் அறிந்துக் கொண்டேன். நாங்கள் காதலிக்க துவங்கி ஐந்தாறு மாதங்கள் இருக்கும். என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டான். என்னால் முடியாது என்று மறுத்து வந்தேன்.
ஆனால், அவன் என்னை விடுவதாய் இல்லை. தொடர்ந்து ஓரிரு மாதங்கள் என்னை கட்டாயப்படுத்திக் கொண்டே இருந்தான். பிறகு, இதற்கு நான் சம்மதம் தெரிவிக்க மறுப்பதன் காரணம், நான் அவனை உண்மையாக காதலிக்கவில்லை என்பதால் தான் என்று பேச துவங்கினான்.

செக்ஸ்!
ஒரு கட்டத்தில் மறுப்பு தெரிவிக்க முடியாமல் செக்ஸ் வைத்துக் கொண்டோம். பிறகு, நாங்கள் எப்போதெல்லாம் சந்தித்துக் கொள்கிறோமோ அப்போதெல்லாம் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினான். நான் முடியாது என்று மறுத்தால் எமோஷனலாக பிளாக்மெயில் செய்ய துவங்கினான். அதன் பிறகு தான் அறிந்தேன், அவனுக்கு தேவை நான் அல்ல, செக்ஸ் என்று. அப்போது போதிய முதிர்ச்சி இல்லாததால் அவனால் ஏமாற்றப்பட்டேன்.

நிர்வாண படம்!
பிறகு, வாட்ஸ்-அப்பில் நிர்வாண படங்கள் அனுப்ப கூறினான். அனுப்ப முடியாது என்று மறுத்தால், என்னை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டுவான். நான் அவனை மிகவும் நேசித்தேன். அனைத்திற்கும் மேலாக, உறவில் பலமுறை இணைந்திருந்தேன். அவன் என்னைவிட்டு விலகிவிட்டால், என் வாழ்க்கை என்னவாகுமோ என்ற அச்சம் கொண்டிருந்தேன்.

பாதுகாப்பற்ற உறவு!
அவனை முற்றிலும் நம்பினேன், அவன் நிச்சயம் மாறிவிடுவான். முதிர்ச்சி இன்றி நடந்துக் கொள்கிறான் என்று கருதினேன். ஆனால், அவனிடம் என் மேல் காதல் இருந்ததாக அறியவில்லை. ஆனால், அவனைவிட்டு பிரியவும் முடியவில்லை.
ஒருமுறை என் வீட்டில் யாரும் இல்லாத போது என்னை காண வந்தான். பேச வேண்டும் என்று கூறியவன், பிறகு வறுபுறுத்தி பாதுகாப்பற்ற உறவில் இணைந்தான். அதனால் நான் கருவுற்றேன்.

அதிர்ச்சி!
என் கர்ப்பம் சாதாரணமானது அல்ல. ectopic எனப்படும், Fallopian குழாயில் கரு வளரும் அபாயமான கர்ப்பம் அது. இதனால் எனது அடிவயிற்றில் வலி அதிகமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு பிறகே நான் கர்ப்பமாக இருப்பதை அறிந்தேன். என் நிலைமை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
கரு வளர்ச்சி காரணமாக Fallopian குழாயில் ஒன்று உள்ளேயே வெடித்து இரத்தப்போக்கு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். ஒருசில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்திருந்தனர்.

வரவில்லை!
என் தோழிகள் மருத்துவமனையில் என்னை பார்க்க வந்தனர். அவன் வந்தானா என்று கேட்டேன். செய்தி அறிந்துமே கூட அவன் என்னை பார்க்க வரவில்லை என்று கூறினார்கள். இது என்னை மிகுந்த மனவருத்தம் அடைய செய்தது.
அவன் என்னிடம் சுத்தமாக பேசவில்லை. அவனை பிரிந்துவிட வேண்டியது தான் முடிவு என்று கருதினேன். ஆனால், அவன் என்னை விடுவதாய் இல்லை. எனது நிர்வாண படங்களை ஆன்லைனில் பதிவிடுவேன் என்று கூறி மிரட்டினான்.

அபாயம்!
ஆனால், அவனுடன் சேர்ந்து இருப்பது என் வாழ்க்கையை தான் அபாயமாக மாற்றும் என்பதை காலதாமதமாக தான் நான் அறிந்தேன். என் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டிக் கொண்டே இருந்தான். எனது ஃபேஸ்புக் முகவரியை லாகின் செய்து தவறான பதிவுகளிட துவங்கினான். நிறைய தொல்லைகள் கொடுத்தான். ஆனால், இந்த நிர்வாண படங்கள் பிரச்சனையை பெற்றோரிடம் கொண்டு போக வேண்டாம் என்று கருதினேன்.

தோழன்!
இந்த நேரத்தில் தான் எனது தோழன் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அவன் என் மீது மிகவும் நேசமாக் இருந்தான். ஆனால், மீண்டும் ஒரு உறவில் இணைவது குறித்து என்னுள் கடும் அச்சம் இருந்தது. அவன் என்னை காதலிப்பதாக கூறினான். அதற்கு முன் அவனிடம் என்னை பற்றி முழுமையாக கூறினேன். என் முன்னாள் காதலன், அவனால் என் வாழ்வில் ஏற்பட்ட தாக்கங்கள், அவன் என்னை மிரட்டுவது என அனைத்தும் கூறினேன்.

உண்மை காதல்!
உண்மை அனைத்தும் அறிந்த பிறகு தான் என்னை மேலும் விரும்ப துவங்கினான். அவனிடம் நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் விட்டுவிடு என்றேன். அவன் விடுவதாய் இல்லை. பிறகு நாங்கள் போலீஸிடம் செல்வோம் என்று கூறிய பிறகு தான் தொல்லை செய்வதை குறைத்துக் கொண்டான். குறைத்து தான் கொண்டானே தவிர நிறுத்தவில்லை. அடிக்கடி மிரட்டினான். ஆனால், அதை தாண்டி அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.

கொலை மிரட்டல்!
முதலில் அவனது மிரட்டலுக்கு பயந்தாலும், அதன் பிறகு அது சார்ந்து நாங்கள் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. அவன் ஒரு குரைக்கும் நாய் என்பதை அறிந்தேன். என் தற்போதைய காதலன், நிஜமாகவே எனக்கு பெரிய பலமாக இருக்கிறான்.
என் அச்சத்தை போக்கியவன் அவன் தான். எனக்கு உண்மையான காதல் மற்றும் அரவணைப்பு என்ன என்பதை காட்டியவன் அவன் தான். அவனது மிரட்டலுக்கு எல்லாம் பதில் கொடுத்தவனும் அவன் தான்.
இப்போது அவன் எங்கள் எதிரில் வருவதில்லை. ஆனாலும், சும்மா மிரட்டி பார்க்க முயல்கிறான். ஒருமுறை எங்கள் இருவரையும் கொன்று விடுவேன் என்று கூட மிரட்டினான்.
அறியாத பருவத்தில் செய்த ஒரு தவறால், என் வாழ்வில் பெரிய பாடங்களை கற்றவள் நான். நான் கடந்து வந்த பாதை நிச்சயம் பலருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு பதாகையாக இருக்கும் என்று நம்புகிறேன்.



Click it and Unblock the Notifications











