மகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி!

மகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி!

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் இரண்டு சூரியன்கள் தமிழகத்தில் அஸ்தமனம் ஆனது. ஒன்று 12 மணிநேரம் கழித்தும், ஒன்று 80 ஆண்டுகள் கழித்தும் அஸ்தமனம் ஆகின. பொதுவாழ்வில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டதில் இருந்து அயராது கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைத்த பெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

Name Reasons Behind The Sons of Former Tamil Nadu Chief Minister Muthuvel Karunanidhi!

கலைஞர் கருணாநிதி அவர்கள் ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களுக்காக நிறைய திட்டங்கள், மாற்றங்கள் ஏற்படுத்தி நற்பெயர் பெற்றவர். இந்த சூரியன், கதிரவன் உதிக்கும் முன்னரே கண்விழித்துக் கொள்ளும் என்பதை அனைவரும் அறிவார்கள். தன்னை ஈர்த்தவர்கள், தனக்கு உதவியவர்களுக்கு எந்நாளும் நன்றி மறவா குணமும் படைத்திருந்தார் கலைஞர் கருணாநிதி.

கருணாநிதி எதை செய்தாலும் அதில் ஒரு பின்னணி காரணம் இருக்கும், பொருள் இருக்கும். இது அரசியல் பயணத்திலும், அவர் கொண்டு வந்த திட்டங்களிலும் மட்டுமின்றி, அவர் தனது மகன்களுக்கு வைத்து பெயரிலும் கூட பிரதிபலித்தது. தன் மகன்களான முத்து, அழகிரி, ஸ்டாலினுக்கு இவர் இந்த பெயர் சூட்ட பின்னணி காரணங்கள் இருக்கின்றன. அதுக்குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முத்து!

முத்து!

மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் மூத்த தலைமகன் மு.க. முத்து. முத்து கருணாநிதிக்கும் அவரது முதல் மனைவி பத்மாவதிக்கும் ஒரே மகனாக பிறந்தவர். திரை மற்றும் அரசியல் என இரண்டு துறையிலும் பயணித்தவர் கலைஞர். இவரது நாடக திரைக்கதை திறனை கண்டு வியந்து தான், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதா அவர்கள் இவருக்கு கலைஞர் என்று புகழாராம் சூட்டினார்.

கலைவாரிசு!

கலைவாரிசு!

சினிமா துறை மூலம் கலைஞர் என்ற பெயர் பெற்ற கருணாநிதியின் கலை வாரிசாக மு.க. முத்து திரைப்படங்களில் நடிகராக நடிக்க துவங்கினார். இவர் சில பாடல்களும் பாடி இருக்கிறார்.. "நல்ல மனதில் குடி இருக்கும் நாகூர் ஆண்டவா", "சொந்த காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.. " போன்ற பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றவை.

தகப்பனார் பெயர்!

தகப்பனார் பெயர்!

தனது முதல் மகனுக்கு முத்து என்று கருணாநிதி அவர்கள் பெயர் வைக்க காரணம்... கருணாநிதியின் தந்தையின் பெயர் முத்துவேல். தன் தகப்பனார் பெயரையே தனது தலைமகனுக்கு சூட்டி இருந்தார் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

அழகிரி!

அழகிரி!

கருணாநிதி அவர்கள் தனது 14வது வயதில் இருந்தே பொதுவாழ்வில் ஈடுபட்டு வருபவர் என்று பலரும் அறிந்தது தான். இவர் தி.கவில் இணைந்து பிறகு, அதில் இருந்து பிரிந்து அண்ணாவால் பிறந்த திமுகவில் வளர்ந்து, அக்கட்சியை வளர்த்தவர் கருணாநிதி அவர்கள் என்று நாம் அனைவரும் அறிவோம்.

அழகிரிசாமி!

அழகிரிசாமி!

ஆனால், தி.க கொள்கைகளால் ஈர்க்கப்படாமல் இருந்திருந்தா தான் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று கருணாநிதி அவர்களே கூறி இருக்கிறார். இதற்கு எல்லாம் முன்பாக, கலைஞர் கருணாநிதி அவர்கள் அரசியல் பொதுவாழ்வில் களமிறங்க காரணமாக இருந்தவர் நீதிக் கட்சியின் அழகிரிசாமி என்பவர். இவர் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக தான் அரசியலில் ஈடுப்பட துவங்கினாராம் கலைஞர்.

அமைச்சர்!

அமைச்சர்!

இவரது இணைவாகவே, தனக்கும் தனது இரண்டாவது மனைவி தயாளு அம்மாவிற்கும் பிறந்த மூத்த மகனுக்கு அழகிரி என்ற பெயரை வைத்தார் கலைஞர். இவர் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின்!

ஸ்டாலின்!

ஸ்டாலின் என்றால் பலரும் நினைவுக்கு வரலாம். ஆனால், தளபதி என்றால் தமிழக மக்கள் மனதில் முதல் ஆளாக நினைவுக்கு வருபவர் திமுகவின் தற்போதைய செயற் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தான். உண்மையில் கருணாநிதி அவர்கள் ஸ்டாலின் பிறக்கும் முன் அவருக்கு அய்யாதுரை என்ற பெயரை வைக்கவே கருதினார். இதற்கும் ஒரு காரணம் உண்டு.

அண்ணாதுரை!

அண்ணாதுரை!

திராவிட இயக்கத்தின் தலைவர் பெரியார் அவர்களை அனைவரும் அய்யா என்றே அழைப்பார்கள். மேலும்., பெரியாருக்கு அடுத்து கருணாநிதிக்கு பெரிதும் நெருக்கமான தலைவர் முன்னாள் தமிழக முதல் அண்ணாதுரை அவர்கள். இவர்கள் இருவரின் பெயரையும் சேர்த்து அய்யாத்துரை என்ற பெயரை தயாளு அம்மாள் மூலம் தனக்கு பிறக்கவிருக்கும் இரண்டாவது மகனுக்கு சூட்டி மகிழ வேண்டும் என்று நினைத்தார் கருணாநிதி.

இரங்கல் கூட்டம்!

இரங்கல் கூட்டம்!

ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர் ஜோசப் ஸ்டாலின் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்த போதே, அவருக்கு இரண்டாவதாக மகன் பிறந்துவிட்ட செய்தி வந்தடைந்தது. அந்த கூட்டின் போதே, தனக்கு பிறந்துள்ள இரண்டாவது மகனுக்கு மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஸ்டாலின் அவர்களது பெயரை சூட்டுகிறேன் என்று அறிவித்தாராம் கலைஞர்.

விழா!

விழா!

இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக செயற் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் பிறந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா ஒன்றில் கலந்துக் கொண்டார். சென்னையில் நடந்த அந்த விழாவில் பேசிக் கொண்டிருந்த போது தான், தனக்கு ஸ்டாலின் என்ற பெயர் எப்படி வந்தது, அதற்கு முன் தலைவர் கருணாநிதி அவர்கள் தனக்கு எந்த பெயர் சூட்ட நினைத்திருந்தார் என்ற ருசிகரமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion