Latest Updates
-
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்.. -
1/4 கிலோ வெண்டைக்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா செஞ்சு பாருங்க - இதுவரை நீங்க சாப்பிடாத சுவையில் இருக்கும் -
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்..
இறந்த மனித உடல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட வினோத கருவிகள்!
உடை, ஆபரணங்கள், கட்டிடம், வீடு உபயோக பொருட்கள் போன்றவற்றை எலும்புக் கூடுகள், பற்கள், மனித கூந்தல் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்...
விசித்திரங்கள் நிறைந்த நமது உலகில் கற்பனையில் அடங்காத விஷயங்கள் கூட நடந்தேறி வருகின்றன. இப்படிக் கூடவா செய்வார்கள்? ஏன் இப்படி? என ஆச்சரியத்தை அள்ளித் தெளிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் ஒரு வகை தான் இவை.
மனித உடல் பாகங்களை வைத்துக் கொண்டு உலகில் செய்த சில விசித்திர விஷயங்கள். உடை, ஆபரணங்கள், கட்டிடம், வீடு உபயோக பொருட்கள் போன்றவற்றை எலும்புக் கூடுகள், பற்கள், மனித கூந்தல் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர்...

எலும்புக்கூடுகள் நிறைந்த சர்ச்!
"The Sedlec Ossuary" என்ற சர்ச் ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைக்கும். காரணம் இந்த சர்ச் கட்டிடம் வெளிப்புறம் இருந்து பார்க்க சாதாரணமாக இருந்தாலும். உள்ளே சென்று பார்த்தால் விசித்திரமாக இருக்கும். நான்கு புற சுவர், பில்லர்கள், சீலிங் என எல்லா இடங்களிலும் எலும்புக் கூடுகள் அலங்காரம் தான் இருக்கிறது.

ஆபரணங்கள்!
சிலர் அவர்களது பால் பல்லை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஆனால், இங்கே பாருங்கள்... பற்களை வைத்துக் கொண்டு கழுத்தில் போடும் சங்கிலி, மோதிரம், காதணி எல்லாம் செய்துள்ளனர்.

யாழ்!
தென் அமெரிக்காவில் 18ம் நூற்றாண்டில் இது மிகவும் சாதாரணம். எலும்புக் எலும்புகூடுகளினால் ஆன யாழ் இசை கருவிகளை போர் வீரர்கள் கையில் வைத்திருப்பார்களாம். மண்டை ஓட்டை பாதியாக அறுத்து அதில் இந்த கருவியை செய்துள்ளனர்.

கூந்தல் சூட்!
மனித முடிகளை கொண்டு The Apex Predator என்ற சூட் தயாரிக்கப்பட்டுள்ளது. பார்க்க அழகாக இருந்தாலும், இது மனித கூந்தலால் ஆனது எனப்படும் போது தான் கொஞ்சம் உதறுகிறது.

பாத்திரங்கள்!
கற்காலத்தில் இருந்த பழக்கம் தான். அப்போது எலும்பு கூடுகளை வைத்து தான் பாத்திரங்கள், போர் கருவிகள் செய்தனர். இதை நாம் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்துள்ளோம்.
ஆனால், 11ம் நூற்றாண்டில் வாழ்ந்த The Aztec இனத்தவர்கள் பெண்களின் எலும்புகளில் இருந்து கத்தி, ஸ்பூன் போன்றவற்றை தயாரித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications
