தற்கொலை செய்துக் கொள்ள தூண்டும் முக்கிய காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரின் வெற்றிக்கு கண்டிப்பாக பலர் காரணமாக இருக்கலாம், ஆனால் தோல்விக்கு அந்த நபர் தான் காரணம். சிலர் அவனை நம்பி ஏமார்ந்து விட்டேன், அவன் தான் என் தோல்விக்கு காரணம் என்பார்கள். ஆனால், அப்படி ஒரு நபரை நம்பியது உங்கள் தவறு தானே.

அப்படி தான் இறப்பும். நாம் பிறக்க நமது பெற்றோர், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெரியோர் பலர் காரணமாக இருக்கலாம். ஆனால், நமது, மரணத்திற்கு நாம் தான் காரணம். அது, இயற்கை, விபத்து, நோய் என எதுவாக வேணுமானாலும் இருக்கலாம்.

Reasons Behind Suicide Attempt!

ஆனால், மரணம் நம்மை தேடி வர வேண்டும் தவிர, நாம் மரணத்தை தேடி செல்ல கூடாது...தற்கொலை தன்னம்பிக்கை இல்லாதவன் செய்யும் காரியம் என்பது சான்றோர் வாக்கு. ஆனால், தற்கொலைக்கு முயற்சிக்கும் அளவிற்கு தைரியம் இருப்பவன், அதை திசை திருப்பினால் வாழ்வில் பெரும் வெற்றியாளராக திகழ முடியும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

பல்வேறு காரணங்களால், குறைகளால், மற்றவரின் பேச்சுக்களால், ஊக்கமின்மையால் ஒருவர் மனதில் அதிகரிக்கும் மன அழுத்தம் தற்கொலைக்கு தூண்டும் முதல் கருவியாக காணப்படுகிறது.

நம்பிக்கை இழத்தல்

நம்பிக்கை இழத்தல்

மக்கள் மீது, உறவில் மீது, நம்மீது வைத்திருந்த நம்பிக்கை, நமது திறமை கொண்டிருந்த நம்பிக்கையிழந்து நாம் இனி அவ்வளவு தான்... நம்மால் இனி எதுவும் சாதிக்க முடியாத என்ற நிலை பிறக்கும் போது, இறப்பு முடிவு என சிலர் தற்கொலைக்கு முயல்கிறார்கள்.

இழப்பு

இழப்பு

உறவுகள், தொழில், சம்பாதித்த பணம், சேமித்த பெயர், என இந்த சமூகத்தில் அந்தஸ்து, அங்கீகாரம், நற்பெயர் இழப்பு ஏற்படும் போது கெளரவம் கருதி சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

அச்சம்

அச்சம்

இனிமேல் நம்மால் இங்க உலகில் நிலைத்து வாழ முடியுமா, கடன் தொல்லை அதிகரித்து விட்டதே, நாம் அவருக்கு செய்த பாவம் நம்மை சும்மாவிடுமா... , கொலை, கொள்ளை, போலீஸ் பிடித்துவிடு மோ என்ற பல அச்சங்கள் ஒரு நபரை தற்கொலைக்கு தூண்டுகிறது.

சோகம்

சோகம்

நெருங்கிய உறவின் இறப்பு கனவு பறிபோன சோகம், தோல்வியில் துவண்டு போகும் நிலை என சோகம் எனும் மேகம் கருமை சூழ்ந்து கண்ணில் மழை பொழியும் போது, அதில் இருந்து தப்பிக்க மரணம் எனும் குடை தேடி போகிறது மனிதனின் மனம்.

வேலையின்மை, கனவு

வேலையின்மை, கனவு

படித்த படிப்புக்கு வேலை இல்லை, எட்டிப்பிடிக்க நினைத்த படிப்பை படிக்க முடியவில்லை., நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை, தகுதி இல்லாதவன் நுழைந்துவிட்டான்... எல்லா தகுதியும் இருந்து நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்ற நிலை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டும் மூலக் கருவியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Behind Suicide Attempt!

Reasons Behind Suicide Attempt!
Story first published: Saturday, September 2, 2017, 12:43 [IST]
Subscribe Newsletter