Latest Updates
-
உருளைக்கிழங்கு இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பொடிமாஸ் பண்ணுங்க - டேஸ்ட் டக்கரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி பெண்களின் கழுத்தை பார்த்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சொல்லிரலாமாம் - கவனிச்சு பாருங்க -
வரகரிசி மசாலா தோசை - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா?
தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களுடன் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் பெண்!
ஆம்ஸ்டர்டாமில் படித்து வரும் இந்த 20 வயது மாணவி, இப்படி தன்னை வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களோடு செல்ஃபீ எடுத்துக் கொள்கிறார்... ஏன் தெரியுமா?
இந்த தவறை கேலி, கிண்டல் என நாமும் செய்திருப்போம், நமது சகோதரர்கள் இன்றும் செய்துக் கொண்டிருக்கலாம். ஒரு வடிவான பெண்ணை சாலையில், நடைபாதையில், பேருந்து நிறுத்தத்தில், ஷாப்பிங் மால் என எங்கணும் கண்டால்... டக்கர் பிகரு, என்ன சைஸ் மச்சான், கொடுத்து வெச்சவன் எவன்னு தெரியல... இதற்கும் மேல் அப்பெண்ணின் உறுப்புகளை பற்றியும் அவள் செவிகளை எட்டும் வண்ணம் கேலி செய்து மகிழ்ந்திருப்போம்.

All Image Credit: Noa Jansma / Instagram
இதெல்லாம் பாலியல் வன்முறையா? என கேட்பவர்களுக்கு... உடல் ரீதியாக துன்புறுத்துவது மட்டுமல்ல, மன ரீதியாக துன்புறுத்துவதும் பாலியல் வன்முறை தான். இதே செயலை, நம் கண் முன் நமது சகோதரியை பார்த்து யாரேனும் கூறினால் சும்மா விடுவோமா நாம்.
ஆம்ஸ்டர்டாமில் படித்து வரும் இந்த 20 வயது மாணவி, இப்படி தன்னை வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களோடு செல்ஃபீ எடுத்துக் கொள்கிறார்... ஏன் தெரியுமா?

நோவா ஜான்ஸ்மா!
நோவா ஜான்ஸ்மா ஆம்ஸ்டர்டாமில் பயின்று வரும் இருபது வயது மாணவி. சாலையில் செல்லும் போறது தன்னை வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களுடன் செல்ஃபீ எடுத்து, அந்த படங்களை சமூக தளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த ஒரு மாத காலமாக இதை செய்து வருகிறார் நோவா ஜான்ஸ்மா.

அச்சுறுத்தல்!
பாலியல் உறவிற்கு அழைப்பது, ஊ ஊ என ஓநாய் போல கத்துவது, திடீரென நடந்து செல்லும் போது குறுக்கே வந்து பாதையை மறைப்பது என பல வகையில் ஆண்கள் தனக்கு பாலியல் வன்கொடுமைகள் செய்துள்ளதாக நோவா ஜான்ஸ்மா கூறியுள்ளார்.
அவர்கள் இப்படி செய்யும் போது அதற்கு எப்படி பதில் அளிப்பது, என்ன செய்ய வேண்டும் என்று அறியாநிலையில் இருந்துள்ளார் நோவா ஜான்ஸ்மா. எதாவது திருப்பி பேசினால் பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்ற அச்சமும் நோவா ஜான்ஸ்மாவிடம் இருந்துள்ளது.

எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது...
ஆண்கள் காலம் காலமாக இதை செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பாட்டுக்கு போகும் வழியில் இதை வெகு இயல்பாக செய்கிறார்கள். இதை எப்படி கண்டுகொள்ளாமல் இருப்பது என எண்ணிய நோவா ஜான்ஸ்மா ஒரு திட்டம் தீட்டினார்.
ஒரு நாளில் எத்தனை பேராக இருந்தாலும், தன்னை சாலையில் செல்லும் போது வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களிடம் நேரடியாக ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாமா என கேட்க துவங்கினார்.

பெருமை!
இப்படி நோவா ஜான்ஸ்மா ஆண்களிடம் செல்ஃபீ எடுத்துக் கொள்ளலாமா என கேட்கும் போது அவர்களுக்குள் பெருமையாக உணர்வதை கண்டதாக நோவா ஜான்ஸ்மா கூறியுள்ளார்.
நோவா ஜான்ஸ்மா மட்டுமின்றி, இவருடன் இவரது தோழியும் சேர்ந்து இப்படி செல்ஃபீ எடுப்பதை கடந்த ஒரு மாதமாக வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

ஏன்?
இதுவரை இவர்கள் பல செல்ஃபீக்கள் இப்படி எடுத்திருந்தாலும், ஒரே ஒருவரை தவிர வேறு யாரும் தங்களிடம் ஏன் இப்படி செல்ஃபீ எடுக்கிறீர்கள் என கேட்டதே இல்லை. கேள்வி கேட்ட அந்த ஒரு நபரும் செல்ஃபீ எடுத்துக் கொண்டார் என நோவா ஜான்ஸ்மா கூறுகிறார்.
எதற்காக இப்படி படம் எடுக்கிறாய் என கேள்வி கேட்கும் நண்பர்களுக்கும் நோவா ஜான்ஸ்மாஎந்த காரணமும் கூறுவதில்லை.

பெண்கள் என்ன ஏலியன்களா?
நம்முடன் சரி பாதியாக வீட்டில், உறவில், சமூகத்தில் இணைந்திருக்கும் பெண்களை நாம் உண்மையில் மதிக்கிறோமா? என்ற கேள்விக்கான பதில்கள் தான் இந்த செல்ஃபீ புகைப்படங்கள். இது எந்த ஒரு ஆணையும் அவமானப்படுத்த நான் செய்யவில்லை.
ஒருவேளை அவர்கள் எனது இன்ஸ்டாகிராம் பதிவில் இருந்து அவரது படத்தை நீக்க கூறினால், நாம் டெலிட் செய்துவிடுவேன். என்னால் ஒருவரது வாழ்க்கை அழிய நான் காரணமாக இருக்க விரும்பவில்லை என்கிறார் நோவா ஜான்ஸ்மா.

அனுதினம்!
நம், வீட்டில், தெருவில், ஏரியாவில், மாநிலத்தில், நாட்டில் என எந்த ஒரு எல்லை வேறுபாடும் இன்றி உலகம் முழுக்க பெண்களை இந்த பிரச்சனையை அனுதினம் கடந்து வருகிறார்கள்.
என்றாவது ஒருநாள் உங்கள் மகன், சகோதரர் இன்னிக்கு சாலையில் நடந்து போகும் போது நான்கு பெண்கள் எனது உடலை பற்றி கேவலமாக சித்தரித்து விமர்சித்தனர் நான் கூனி குறுகி போனேன் என கூறியது உண்டா?
புரிந்துக் கொள்ளுங்கள் நாம் விலாசம் தெரியாத பெண்ணை எப்படி கேலி செய்கிறோமா, அதே போல விலாசம் தெரியாத ஒரு ஆண் நமது சகோதரியை கேலி செய்துக் கொண்டிருக்கிறான்.

கேவலமானவர்கள்!
நோவா ஜான்ஸ்மா பதிவு செய்துள்ள இந்த படங்களில் உள்ளவர்களை கண்டால் உங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதா? நீங்கள் இதுவரை யாராவது ஒரு பெண்ணை கொச்சையாக கேலி செய்திருந்தால் உங்கள் முகமும் இப்படியாகப்பட்டதே ஆகும்.
இந்த படங்களில் இருப்பவர்கள் கேவலமானவர்கள் என்றால், நாமும் கேவலமானவர்களே!



Click it and Unblock the Notifications