43,200 முறை கற்பழிக்கப்பட்ட சிறுமி, பதற வைக்கும் நிழலுலக செக்ஸ் ஸ்லேவ் கொடூரம்!

Subscribe to Boldsky

குழந்தை கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பணத்திற்காக, குற்ற செயல்களில் ஈடுபடுத்த, பாலியல் தொழில் போன்ற குற்ற செயல்களுக்காக குழந்தைகளை கடத்துகிறார்கள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்...

கார்லா ஜேசினோ, தனது 12 - 16 வயதுக்குட்பட்ட நான்கு வருட காலத்தில் 43,200 முறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அபலை சிறுமி. மெக்ஸிகோவை சேர்ந்த தெனன்சிங்கோ எனும் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கார்லா ஜேசினோ.

கடத்தல் கும்பலால் கடத்தி செல்லப்பட்ட கார்லா ஜேசினோ., "காலை 10 மணிக்கு துவங்கினால், நள்ளிரவு வரை தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன்" என சி.என்.என் ப்ரீடம் பிராஜக்ட் நிகழ்ச்சியல் தெரிவித்துள்ளார்.

ஏறத்தாழ நான்கு வருடத்தில் 43,200 முறை என்பது சராசரியாக ஒருநாளுக்கு முப்பது முறை. அதுவும் அந்த சின்னஞ்சிறு வயதில். படிப்பதற்கே பதைபதைப்புடன் இருக்கிறது அல்லவா.

கார்லா ஜேசினோ அப்படி ஒரு வாழ்க்கையை கடந்து வந்து, செக்ஸ் ஸ்லேவ் செயல்பாடுகளை ஒழிக்க போராடி வருகிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தப்பி வந்த கார்லா :

தப்பி வந்த கார்லா :

மெக்சிகோவைச் சேர்ந்த கார்லா ஜெசிண்டோ என்ற பெண்மணி 2008 ஆம் ஆண்டு, தான் கடத்தி அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தப்பி வந்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 16.

அதன் பின்னர் இந்த விஷயம் கேள்விப்பட்டு விஷயம் பரவ, அப்போது பேட்டியெடுக்க பலரும் அணுகினார்கள்.

Image Courtesy

கண்களை இறுக்கமாக மூடிக் கொள்வேன்...

கண்களை இறுக்கமாக மூடிக் கொள்வேன்...

"அவர்கள் என்னை நெருங்கும் போது, எனது கண்களை இறுக்கமாக மூடிக் கொள்வேன். அதனால், எனக்கு நேரும் கொடுமையை நான் காண முடியாது. ஆகையால் அந்த கொடுமையை என்னால் உணரவும் முடியாது.

நான் வலியால் துடித்து அழுவதையும் கண்டு ஏளனமாக சிரித்தவர்கள் தான் என்னை சுற்றி இருந்தனர். எதையும் பொருட்படுத்தாமல் என்னை அணுகுவார்கள். ஒரு நாளுக்கு முப்பது பேருடன் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது" என தனது வலிகளை குறித்து கூறியுள்ளார் கார்லா ஜேசினோ

20 ஆயிரம் பெண்கள் :

தான் கடத்தப்பட்டத்தில் தன்னுடைய குடும்பத்திற்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று சொல்லியிருக்கும் கார்லா, ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் பெண்கள் வரை இப்படி சிக்கி பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டியிருக்கிறார். அவர்களை காப்பாற்ற அவர்களின் குடும்ப உறுப்பினர்களே தயாராக இல்லை என்பது தான் இதில் அதிர்சியளிக்ககூடிய ஒன்றாக இருக்கிறது.

உறுதி :

தற்போது 25 வயதாகும் கார்லா தான் அனுபவித்த வேதனைகளை எல்லாம் மறந்து விட்டு புதிய மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார். மனித உரிமை செயற்பாட்டாளராக இருக்கும் கார்லா, உலகம் முழுவதும், பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களை மீட்க போராடுவேன் என்று உறுதியேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

மாடர்ன் அடிமை தொழில்!

மாடர்ன் அடிமை தொழில்!

பண்டையக் காலத்தை போலவே இந்த மாடர்ன் நாட்களிலும் கூட அடிமை தொழில் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. வேறு ஒரு பெயரில், வேறு ஒரு தோற்றத்தில். ஒவ்வொரு நாடுகளின் எல்லை பகுதிகளிலும் குழந்தைகள், பெண்கள் கடத்தப்படும் செயல்கள் தொடர்கதையாக நடந்து வருகிறது.

போலீஸ் போன்ற பல அதிகார வர்க்கத்தை சேர்த்தவர்கள் அந்த இருட்டுக்குள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மிக கொடுமையான தவறுகள் செய்து வருகிறார்கள் என கூறியுள்ளார் கார்லா ஜேசினோ.

800,000!

800,000!

ஒவ்வொரு ஆண்டும் 800,000-திற்கும் மேற்பட்ட குழந்தைகள், இளம் பெண்கள் சர்வதேச எல்லை பகுதிகளில் கடத்தப்படுகிறார்கள். இதனால் எண்ணற்ற சிறுமிகள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது.

அந்தந்த நாட்டை சேர்ந்த பெண்கள், அந்தந்த நாட்டவர்களால், அந்தந்த நாட்டுக்குள்ளேயே கடத்தப்படுவது தான் கொடுமையின் உச்சம்.

தப்பித்து வருகிறார்கள்!

தப்பித்து வருகிறார்கள்!

"அந்த அடர்த்தியான காடுகளில், கொடூரமான மிருகங்களிடம் இருந்து வெகு சில மான்கள், முயல்கள் மட்டுமே தப்பித்து வருகின்றன. என்னைப்போன்ற, என்னைவிடவும் அதிக கொடுமைகளை எதிர்கொண்டு பலர் அங்கே தினம், தினம் இறந்து வருகிறார்கள்.

வெறும் விழிப்புணர்வுகளாலும், சமூக அமைப்புகளாலும் மட்டும் இதை நிறுத்திவிட முடியாது. அனைத்து நாடுகளின் அரசுகள், அனைத்து அமைப்புகளும் கைகோர்த்து செயற்பட்டால் மட்டுமே, இந்த செக்ஸ் ஸ்லேவ் முறையை தடுக்கவும், ஒழிக்கவும் முடியும்" என கார்லா ஜேசினோ கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    Read more about: insync life women sex child
    English summary

    Human Trafficking Survivor, Who was Rapped 43,200 Times!

    A girl raped 43000 times in 4 years
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more