For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண நாளன்று கற்பழிக்கப்பட்ட இளம்பெண், நடுரோட்டில் வீசி சென்ற காமுகர்கள்!

திருமண நாளன்று கற்பழிக்கப்பட்ட இளம்பெண் - 8 மாதத்தில் உயிரிழந்த கணவன்!

|

கென்யாவின் தலைநகரம் நைரோபியாவை சேர்ந்த ஆங்கிலிகன் போதகர் அவர். அடுத்தடுத்த கூட்டு கற்பழிப்பு நிகழ்வில் சிக்கிய இளம்பெண். இப்போது அவரை இவ்வுலகம் மீண்டெழுந்தவர் என கூப்பிடுகிறது.

டெர்ரி கோபங்கா என்பது அவர் பெயர். அன்று அவரது வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்திருக்க வேண்டும். அமைந்தது, ஆனால் அவர் எதிர்பார்க்காத வகையில், வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அது ஒரு சிறந்த நாள்...

அது ஒரு சிறந்த நாள்...

அவர் போதகர் என்பதால், சர்ச்சின் உறுப்பினர்கள், ஒட்டுமொத்த குடும்பம் என அனைவரும் ஒன்றாக குழுமியிருந்த தருணம் அது.

டெர்ரியின் வருங்கால கணவர், அவர் விரும்பிய, கனவுக் கண்ட அந்நபர் மற்றும் டெர்ரி மிகவும் ஆத்மார்த்தமாக எதிர்பார்த்து காத்திருந்த நாளது. நைரோபியின் செயின்ட் கதீட்ரல் ஆலயத்தில் அவர்களது திருமணம் நடக்கவிருந்தது.

மிகுந்த கனவுகளுடன், தனது திருமணம் நாள் உடையை கண்டு கனவுகள் கண் முன் மெய்ப்பிக்கும் மறுநாளை எதிர்நோக்கி நிம்மதியாக டெர்ரி கழித்த கடைசி இரவு அது, என்பது டெர்ரிக்கே அந்த தருணத்தில் தெரியாது.

இரவு உறகும் முன்னர் தான், தனது வருங்கால கணவர் ஹேரியின் டை, மற்றும் சில உடைகள் தன்னிடம் இருப்பதை உணர்தார் டெர்ரி.

டெர்ரியுடன் தங்கியிருந்த தோழி, மறுநாள் காலை முதல் வேலையாக ஹேரியின் உடைகளை கொண்டு அவரிடம் சேர்த்துவிடுகிறேன் என கூறினார்.

கற்பழிப்பு!

கற்பழிப்பு!

சரி என தனது வீடு திரும்ப துவங்கினார் டெர்ரி. ஆனால், கார் அருகே ஹூட் உடை அணிந்திருந்த ஒரு நபர் திடீரென டெர்ரியை இழுத்து பின் இருக்கையில் தள்ளி, வீரிட்டு கிளம்பினர்.

அந்த காரில் இரண்டு நபர்கள் இருந்தனர். இவை அனைத்தும் ஓரிரு நொடிகளில் நடந்து முடிந்தன. அவர்கள் டெர்ரியின் வாயில் ஒரு துணியை திணித்து பேச முடியாமல் செய்தனர். அதிலிருந்து மீண்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள கத்த முயன்றார் டெர்ரி. ஆனால், இயலா நிலைக்கு தள்ளப்பட்டார்.

இன்று எனது திருமணம் நாள், என்னை விட்டுவிடுங்கள் என கதறினார் டெர்ரி. ஆனால், அவர்களுக்கு அந்த வார்த்தைகளை கேட்க, செவி சாய்க்க நேரமில்லை.

ஒருவனிடம் இருந்து மிரட்டல் தொணியில்...

"உனக்கு ஒரே வாய்ப்பு தான், ஒன்று எங்களுடன் உடன்படு, இல்லை செத்து மடி!"

கற்பழிக்க முயற்சிக்கிறார்கள் என அறிந்த டெர்ரி, அதில் இருந்து தன்னை கத்துக் கொள்ள போராடினார். ஒருவன் டெர்ரியை நெருங்கும் போது, அவரது பிறப்புறுப்பு பகுதியில் தாக்கினார். அவன் வலி தாங்க இயலாமல் கதறி அழுதான்.

இதை கண்டு மறு நபர், டெர்ரியின் வயிற்றில் தாக்கி நிலைகுலைந்துபோக செய்தான்.

கற்பழிக்கப்பட்டு, வயிற்றில் குத்தி, காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டார் டெர்ரி.

தனது வீட்டில் இருந்து பல மையில் தூரம் கடந்து நைரோபியாவின் ஒரு சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் டெர்ரி.

குழந்தை...

குழந்தை...

காரில் இருந்து டெர்ரி தூக்கி எறியப்படுவதை ஒரு குழந்தை கண்டது. அந்த குழந்தை உடனே வீட்டில் இருந்த தனது பாட்டியிடம் கூற, போலீஸார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

"நான் இறந்தே போனான் என்று தான் நான் எண்ணினேன். பிணவறை கொண்டு செல்லும் வழியில் நான் இருமிய நொடியில் தான், நான் உயிருடன் இருப்பதை போலீஸ் அறிந்து என்னை கென்யாவின் பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர்." என்கிறார் டெர்ரி.

அரைநிர்வாண நிலை...

அரைநிர்வாண நிலை...

அன்று திருமண ஆடையில் புன்னகை சூழ, திருமணம் நடந்து மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய தருணத்தில்..., டெர்ரி அரைநிர்வாண நிலையில், உடல் எங்கும் இரத்தம், முகத்தின் காயங்களால் வீக்கம் அடைந்து ஓர் அவலநிலையில் இருந்தார்.

அந்த காமுகர்கள் டெர்ரியின் வயிற்றில் குத்தியது அவரது கற்பப்பை வரை ஆழமாக குத்தியதால், இனிமேல் கர்ப்பம் தரிக்க முடியாது, குழந்தை பெற்றுக் கொள்ள இயலாது என ஒரு அதிர்ச்சி செய்தியை மருத்துவர்கள் டெர்ரியிடம் கூறினர்.

இது, உடலளவில் சிதைந்து போன டெர்ரியை, மனதளவிலும் சிதைவுற்று போக செய்தது.

பதட்டம்!

பதட்டம்!

காலையில் மணப்பெண் காணாமல் போனதை கண்டு சர்ச் உறுப்பினர்கள் மற்றும் டெர்ரியின் பெற்றோர் பதட்டம் அடைந்தனர்.

சிலர் டெர்ரி தனது திருமணம் முடிவை மாற்றிக் கொண்டாளா? என கேள்விகள் எழுப்ப, குழப்ப நிலையில் ஹேரி சர்ச்சில் அமர்ந்திருந்தார்.

"எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் தொற்று எற்பாதிருக்க மருத்துவர்கள் மாத்திரைகள் கொடுத்தனர்.

எனக்கு நேர்ந்ததை நானே ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால், ஹேரி என்னை திருமணம் செய்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார்.

சிலர், அன்று இரவு வெளியே சென்றது எனது தவறு என கூறினார்கள். இது என்னை மிகவும் வருந்த செய்தது. ஆனால், எனது குடும்பமும், ஹேரியும் எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர்..

நான் பத்தடி முன்னே எடுத்து வைத்தால், இருபது அடி பின்னே தள்ளினர்.

கடைசியில் போலீசார் இந்த வழக்கை இப்படியே விட்டுவிடுங்கள் என கூறிவிட்டனர்.

அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக ஹேரியும் நானும், மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தோம்.

எதிர்பாராத திருப்பம்..,

எதிர்பாராத திருப்பம்..,

திருமணம் நடந்து வாழ்க்கை நன்றாக நகர ஆரம்பித்த தருணத்தில். மீண்டும் ஒரு கொடிய சம்பவம் டெர்ரியின் வாழ்வில் நடந்தது.

ஒரு நாள் இரவு டின்னர் முடித்து வீடு திரும்பிய போது இருவரும் உடல்நலம் குன்றி போனார்கள். அப்போது அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காலை எழுந்திருக்க முடியாத நிலையில் இருந்தனர் இருவரும்.

டெர்ரிக்கு வாந்தி ஏற்பட்டு கொஞ்சம் தெம்பு கிடைத்தது. ஆனால், முதல் முறை பதில் அளித்த ஹேரி, மீண்டும் எதுவும் பேசவே இல்லை. டெர்ரி பதட்டம் அடைந்து பக்கத்து வீட்டாருக்கு கால் செய்தார்.

டெர்ரிக்கு அடிக்கடி மயக்கம் வந்துக் கொண்டே இருந்தது. "கடைசியாக மயங்கி கண்விழித்து பார்த்த போது மருத்துவமனையில் இருந்தேன்", என்கிறார் டெர்ரி.

"ஹேரி எங்க என்ற கேட்ட கேள்விக்கு அவர் இறந்துவிட்டார் என்பது பதிலாக கிடைத்தது. அனைவரும் நானே எனது கணவரை கொன்றுவிட்டேன்" என கூறினார்.

பிரேத பரிசோதனையில், முந்தைய நாள் இரவு உணவு உணவு வெளியே உணவு சமைத்த போது கரி அடுப்பு புகையில் இருந்து வெளியான அதிக கார்பன்டை ஆக்சைடு உடலில் கலந்த காரணமாக ஹேரி இறந்தார் என கூறப்பட்டது.

கருத்தரிப்பு!

கருத்தரிப்பு!

ஹேரி இறுதி சடங்கு முடிந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் முடியாமல் போனேன். மருத்துவ மனை சென்ற போது தான், நான் கருத்தரித்து இருந்தது அறியப்பட்டது.

கத்தி குத்து காரணமாக கருப்பை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால், மருத்துவர்கள் அதிக கவனம் எடுத்துக் கொண்டனர். சில அட்வான்ஸ்டு முறைகள் பின்பற்றி பெண் குழந்தை பெற்றெடுத்தேன்.

சில காலம் கழித்து, டெர்ரி டோனி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார், நான்கு வருடங்கள் கழித்து இவர்களுக்கு இரண்டாவதாகஆண் குழந்தை பிறந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Terry Gobanga, Who is the Victim of Gang Rape on her Wedding Day!

Terry Gobanga, Who is the Victim of Gang Rape on her Wedding Day!
Desktop Bottom Promotion