Latest Updates
-
வாஸ்துப்படி துளசி செடிகிட்ட இந்த செடிகளை வளர்க்காதீங்க.. இல்ல பண இழப்பு தான் அதிகரிக்கும்.. -
இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மக்கள் நீண்ட ஆயுளோடு வாழும் டாப் 10 நாடுகள் - இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
மகாளய அமாவாசைக்கு கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவலை எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பாருங்க.. -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - ஒரிஜினல் மீன் குழம்பே தோத்துரும் -
World Sight Day 2026: சுகர் இருக்கா? அப்ப கண் பிரச்சனையை அசால்ட்டா விடாதீங்க.. எச்சரிக்கும் கண் டாக்டர்! -
துலாம் ராசியில் வக்ரமாகும் புதன்: அக்டோபர் இறுதியில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
முதல் உலகப்போரின் ஹீரோவாக விளங்கிய நாய் - அந்த நாய் அப்படி என்ன செய்தது தெரியுமா? -
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம்
விளையாட்டு ரூபாய் தாளை கொடுத்து நடிகையை ஏமாற்றிய பலே ஆட்டோக்காரர்!
குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு தாளை கொடுத்து, ஆட்டோக்காரர் பெங்கால் நடிகையை ஏமாற்றிய சம்பவம், மும்பையில் நடந்துள்ளது.
உலகிலேயே தினுசுதினுசாக ஏமாற்றுவது நம்ம ஆட்கள் தான். சில சமயங்களில் கையும் களவுமாக பிடிப்பட்டும் விடுவார்கள். சமீபத்தில் இருவர் 250 ரூபாய் தாளை அச்சடித்து போலீஸ் கையில் சிக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியதை விட, வயிறு வலிக்க சிரிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒருசில மாதங்களுக்கு முன்னர், ஏ.டி.எம் மெஷின் என எண்ணி, பணம் செலுத்தும் மெஷினை ஒரு கும்பல் திருடியது. இதெல்லாம் பார்க்க கொஞ்சம் விளையாட்டாக தான் இருந்தது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மை தாளை வைத்து ஒரு ஆட்டோக்காரர் நடிகையையே ஏமாற்றியுள்ளார்.

பெங்கால் நடிகை!
மேகா சக்ரபூர்தி என்பவர் பிரபல பெங்கால் நடிகை. இவர் டிவி சீரியல்கள் மற்றும் திரைபடத்தில் நடித்தவர் ஆவார்.

மும்பையில் பயணம்!
நேற்று முன்தினம் இரவு பெங்கால் நடிகை மேகா சக்ரபூர்தி மும்பையில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் முடிவில், கட்டண பணம் செலுத்திவிட்டு மீது பணத்தை வாங்கிவிட்டு தன் இருப்பிடத்திற்கு சென்றுவிட்டார்.

வீட்டில் அதிர்ச்சி!
வீட்டுக்கு சென்று கையில் இருந்த பணத்தை செக் செய்த பொது தான் மேகா சக்ரபூர்திக்கு தெரிய வந்தது, ஆட்டோக்காரர் கொடுத்தது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பணம் என்று.

ஃபேஸ்புக்கில் பதிவு!
இந்த நிகழ்வை தனது குறித்து நடிகை மேகா சக்ரபூர்தி தனது ஃபேஸ்புக்கில் செய்த பதிவு...
Image Source

இதென்ன புதுசா இருக்கு!
கள்ளன்நோட்டு கலாச்சாரம் போய், இந்தியாவில் பொம்மை நோட்டு கலாச்சாரம் வந்துவ்விட்டதோ. ஒரு ஆட்டோக்காரர் பொம்மை பணம் கொடுத்து ஒருவரை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பெரும்பாலும் இது ஒரே மாதிரி இருக்கிறது. இருட்டில் இதை உடனே கண்டறிவது சற்று கடினம் தான். மக்கள் தான் சூதானமாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
