Latest Updates
-
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்...! -
வீட்ல காய்கறி எதுவும் இல்லையா? டக்குனு இந்த பூண்டு மிளகு சாதத்தை செய்யுங்க... ஆரோக்கியமா, சுவையா இருக்கும்...! -
30 ஆண்டுக்கு பின் நிகழும் சனி-சுக்கிரன் சேர்க்கை: இந்த 3 ராசிகளை பணமும், புகழும் தேடிவரப்போகுதாம்...! -
கேரளா ஸ்டைல் கூட்டுக்கறி ரெசிபி... இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க... சாதத்துக்கு பெஸ்ட் சைடிஷ் இதுதான்...! -
ராகி பூரியும்.. வெங்காய மசாலாவும்.. - 15 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் தேடிவரும் நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்: ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. -
சனி-சூரியன்-சந்திரன் மீன ராசியில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க இருமடங்கு துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போறாங்களாம் -
73 வயதிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஃபிட்டாக இருப்பதன் ரகசியம் இதாங்க.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க... -
முட்டைக்கோஸை வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி பொரியல் செய்யுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
கணபதி எவ்வாறு 'சிந்தாமணி' என்ற பெயரில் அழைக்கப்படலானார்?
ஞான முதல்வனாக கொண்டாடப்படும் கணபதி சிறந்த ஞானத்தை நமக்கு அருளக்கூடியவராவார். "தடைகளைத் தகர்ப்பவர்" என்ற அர்த்தம் கொண்டதான "விக்னஹர்தா" என்ற பெயரிலும் கணபதி அழைக்கப்படுகிறார். கணபதிக்கு எவ்வாறு "சிந்தாமணி" என்ற பெயர் வழங்கப்படலாயிற்று என்பதை நாம் இப்போது பார்ப்போம்.
முன்பொரு காலத்தில் கன் என்ற பெயரைக் கொண்ட கொடூரமான இளவரசன் ஒருவன் வாழ்ந்தான். அவன் ஏழை மக்களை துன்பறுத்தியும், முனிவர்களின் தவத்தை கலைத்தும் அட்டூழியம் செய்து வந்தான். ஒரு முறை, அவன் வேட்டையாடுவதற்தாக தன் நண்பர்களுடன் காட்டுக்குச் சென்றான். அக்காட்டில் கபில் என்ற முனிவரின் ஆசிரமம் அமையப்பெற்றிருந்தது. கபில் முனிவர் இளவரசனையும் அவனது பரிவாரங்களையும் அன்புடன் வரவேற்று, தன் ஆசிரமத்தில் மதிய விருந்து உண்ணுமாறு உபசரித்தார்.
முனிவரின் ஆசிரமத்தை ஏளனமாகப் பார்த்துச் சிரித்த கன் இளவரசன், "தங்களைப் போன்ற ஏழை முனிவர் இத்தனை பேரும் விருந்து உண்ணுவதற்கு பெரிதாக என்ன ஏற்பாடு செய்து விட முடியும்?" என்று அகம்பாவத்துடன் வினவினான். இதனைக் கேட்ட முனிவர், தான் கழுத்தில் அணிந்திருந்த அணிகலனில் இருந்து "சிந்தாமணி" (விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ரத்தினக்கல்) என்ற ரத்தினக்கல்லை எடுத்து, அதனை சிறிய மர மேஜை ஒன்றின் மீது வைத்தார்.

பின் அதனை சிரம் தாழ்த்தி வணங்கி, மனமுருக வேண்டினார். உடனே அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் அங்கே ஒரு சமையலறை உருவானது. அங்கிருந்த அனைவரும் அமர்ந்து உண்ணுவதற்கு சந்தன மரத்தாலான ஆசனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. சுவை மிகுந்த பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள் வெள்ளித்தட்டுக்களில் அனைவருக்கும் பரிமாறப்பட்டன. கன் இளவரசனும் அவனுடைய பரிவாரங்களும் உணவை சுவைத்து உண்டு மகிழ்ந்தனர்.
விருந்து முடிந்து கிளம்புகையில், மந்திர சக்தி வாய்ந்த அந்த இரத்தினக்கல்லை தனக்கு கொடுக்குமாறு கன் இளவரசன் கபில் முனிவரிடம் கேட்டான். இளவரசனின் கொடூர குணத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்த கபில் முனிவர், இரத்தினக்கல்லை அவனிடம் கொடுப்பதற்கு மறுத்து விட்டார். ஆத்திரமடைந்த இளவரசன், இரத்தினக்கல்லை முனிவரின் கையிலிருந்து வலுக்கட்டாயமாக பறித்துச் சென்று விட்டான்.
இச்சம்பவத்திற்குப் பின், கபில் முனிவர் கணபதியிடம் மனமுருக வேண்டினார். முனிவரின் பக்தியைக் கண்டு அகமகிழ்ந்த கணபதி, கன் இளவரசனுக்கு தக்க தண்டனை வழங்க தீர்மானித்தார். கபில் முனிவர் இரத்தினக்கல்லை தன்னிடமிருந்து மீட்க தன்னுடன் சண்டையிடக்கூடும் என்று எண்ணிய இளவரசன், முனிவரை தாக்கினான். கணபதியின் அருளால், காட்டில் ஒரு பெரும் படை உருவாகி, இளவரசனின் படை வீரர்கள் அனைவரையும் அழித்தது. பின் கணபதியே போர்க்களத்திற்குள் நுழைந்தார்.
கன் இளவரசன் கணபதியின் மீது அம்பு மழை பொழிந்தான். ஆனால், கணபதி இந்த அம்புகள் அனைத்தையும் காற்றில் பறந்து வரும்போதே அழித்து விட்டார். பின் கணபதி தன் ஆயுதமான பரஷுவை கன் இளவரசனின் மீது எய்து, அவனை வதம் செய்தார். கன் இளவரசனின் தந்தையாகிய அபிஜீத் மன்னர், போர்க்களத்திற்கு வருகை புரிந்து, தன் சிரம் தாழ்த்தி கணபதியை வணங்கினார். "சிந்தாமணி" கல்லை கபில் முனிவரிடம் தந்த மன்னர், தன் மகன் செய்த தவறை மன்னித்து, இறந்து விட்ட அவனுக்கு பாவ விமோசனம் வழங்கும்படி வேண்டினார். அவரது பிரார்த்தனையைக் கண்டு மனமிரங்கிய கணபதி அவரது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.
இவ்வாறு, கபில் முனிவர் தன் சிந்தாமணியை திரும்பப் பெறுவதற்கு கணபதி உதவி புரிந்தமையால் அவருக்கு "சிந்தாமணி" என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.



Click it and Unblock the Notifications











