Latest Updates
-
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனின் அருளைப் பெற எப்படி விரதம் இருக்கணும்-ன்னு தெரியுமா?
Janmashtami 2023: கிருஷ்ண ஜெயந்தி இந்தியாவில் கொண்டாடப்படும் கோலாகலமான பண்டிகையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி மற்றும் கிருஷ்ணாஷ்டமி என்று அழைக்கின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ணன் இந்து கடவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர். அவரை விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக பார்க்கின்றனர். வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி எட்டு நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. ஷ்ரவண மாதத்தில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) பௌர்ணமிக்குப் பிறகு எட்டாவது நாளில் இந்த திருவிழா அனுசரிக்கப்படுகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தி அன்று மக்கள் விரதம் இருந்து கிருஷ்ணணை வழிபடுவது உண்டு. இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் விதம்:
* மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா மற்றும் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் செப்டம்பர் 6 ஆம் தேதி பகல் மற்றும் நள்ளிரவு நேரங்களில் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.
* கிருஷ்ணா ஜென்மாஷ்டமி மஹோத்ஸவ் - செப்டம்பர் 7 நள்ளிரவு 11:30 மணி முதல் வட இந்தியாவிலும் குஜராத் துவாரகதீஷ் கோயிலிலும் கொண்டாடப்படுகிறது
* வட இந்தியாவில் ஜென்மாஷ்டமி விரதமானது செப்டம்பர் 7 அன்று தொடங்குகிறது
* கேரளாவில் அஷ்டமி ரோகினி நட்சத்திரத்தன்று செப்டம்பர் 6 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
* மகாராஷ்டிராவில் தஹி ஹண்டி மற்றும் கோபால்கலா என்ற பெயரில் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
* உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் விட்டல் பிண்டி - செப்டம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
* கோவாவில் கலோ என்ற பெயரில் செப்டம்பர் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது
* இந்த வருடம் தமிழகத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 6 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
ஏன் கிருஷ்ண ஜெயந்தியை நள்ளிரவில் கொண்டாடுகின்றனர்?
கிருஷ்ணனின் கதை அம்சத்தின் அடிப்படையில் தேவகி கம்சனின் சிறையில் மதுராவில் இருந்த போது தேவகி மற்றும் வாசுதேவருக்கு நள்ளிரவில் கிருஷ்ணர் பிறக்கிறார். மதுராவில் கிருஷ்ணர் பிறந்த பிறகு, அவரது தந்தை வாசுதேவர் அவரை யமுனாவின் குறுக்கே நந்தா மற்றும் யசோதாவிடம் அழைத்துச் சென்றார்.
கோகுலத்தில் கிருஷ்ணர் வளர்ப்பு பிள்ளையாக வளர்க்கப்படுகிறார். கிருஷ்ணர் பிறந்த போது இனி, மின்னல் மழை என்று உலகமே பிரமிப்பு அடைந்தது. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் கிருஷ்ண ஜெயந்தி நள்ளிரவில் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி எப்படி கொண்டாடப்படுகிறது?
மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் கிருஷ்ணர் கோயில்கள் அலங்கரிக்கப்படுகின்றன, கிருஷ்ண பகவானின் புராணங்கள் பாடப்படுகின்றன, தெருக்களில் விளக்குகளால் அலங்கரிக்கின்றனர், விஷ்ணு பக்தர்கள் ஒரு நாள் விரதம் அனுசரித்து, ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.
கிருஷ்ண பகவானை சுத்தம் செய்து புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிவித்து அலங்கரித்து அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். அனைத்து கிருஷ்ண கோயில்களிலும் நள்ளிரவில் பூஜை நடைபெறும். சில பகுதிகளில் கிருஷ்ணனை குழந்தையாக பாவித்து தொட்டிலில் போட்டு தாலாட்டுவதும் உண்டு.
நம் இந்தியப் பெண்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார் என்பதை பறைசாற்றும் வகையில் மாவைக் கொண்டு வீட்டு வாசல்களில் கிருஷ்ணனின் கால் தடங்களை வைப்பது உண்டு. பகவத்கீதை மற்றும் பகவத் புராணம் போன்ற ஸ்ரீ கிருஷ்ணனின் அவதார புராணங்களை வீட்டிலும் கோயில்களிலும் படிப்பதுண்டு. ஸ்ரீ கிருஷ்ணனுக்காக பஜனை பாடி கொண்டாடுகின்றனர்.
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பது எப்படி?
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் பக்தர்கள் விரதம் இருந்து கிருஷ்ணனின் அன்பையும் ஆதரவையும் பெறுகின்றனர்.
சில பகுதிகளில் பூண்டு, வெங்காயம், அசைவ உணவுகள் மற்றும் ஆல்கஹால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் இந்த உணவுகள் தவிர்க்கப்படுகின்றன. கிருஷ்ண ஜெயந்திக்கு முந்தைய நாள், திருவிழா நாள் மற்றும் பண்டிகைக்கு மறுநாள் என மூன்று நாட்கள் தவிர்க்கப்படுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருக்க நினைப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும். முதலில் விநாயகப் பெருமானுக்குப் பூஜைகள் செய்து, பிறகு ஸ்ரீ கிருஷ்ணருக்கும் துளசிச் செடிக்கும் பூஜை செய்ய வேண்டும்.
அன்று இரவு சூரிய உதயம் முதல் பூஜை காலம் வரை விரதம் இருக்க வேண்டும். மக்கள் அன்றைய தினம் பழங்கள், ஜவ்வரிசி மற்றும் பால் போன்ற விரத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஸ்ரீ கிருஷ்ண பகவானின் கோயிலுக்கு சென்று வழிபட்டு பிராத்தனை செய்து வாருங்கள்.
உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருந்தால் வெண்ணெய்யை பிரசாதமாக கொடுக்கலாம். பால் சார்ந்த இனிப்புகள் கிருஷ்ணனுக்கு பிடிக்கும். அதை கிருஷ்ணருக்கு படைத்து பிறகு எல்லாருக்கும் கொடுத்து மகிழலாம்.
அதே மாதிரி கிருஷ்ணனை நோக்கி பாட்டு படிப்பது, அவரின் புராணக் கதைகளை படிப்பது உங்களுக்கு புண்ணியத்தை அள்ளித் தரும்.
இரவிலும் பூஜைகள் செய்து வழிபட வேண்டும். இரவுப் பூஜை முடிந்த உடன் உங்கள் விரதத்தை நீங்கள் முடிக்கலாம்.



Click it and Unblock the Notifications











