For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலை தீபாவளியா? நீங்க தீபாவளி அப்போ இத சாப்பிட கூடாதுனு தெரியுமா?

By Lakshmi
|

தீபாவளி என்றாலே நமது மனதில் மத்தாப்பு வெடிப்பதை போன்ற மகிழ்ச்சி உண்டாகும். தீபாவளி எப்படா வரும், ஒரு மாசத்துக்கு முன்னாலேயே வாங்கி வச்ச புத்தாடையை எப்படா போடலாம்னு எல்லாரும் எங்கிட்டு இருப்பாங்க.. இவங்க எல்லாருடைய ஏக்கமும் ஒரு பக்கம் இருந்தால், தலை தீபாவளி கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாக இருக்க தானே செய்யும். தீபாவளி என்பது வருடா வருடம் வரக் கூடியது. ஆனால் தலை தீபாவளி என்பதோ வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே வரக்கூடியதாகும். இந்த தலை தீபாவளி நமது தமிழகத்தில் மிக மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் கண்டிப்பா உங்க பிரண்ட்ஸ் யாராவது நிச்சயமா தலை தீபாவளி கொண்டாடுவாங்க, அதை பார்க்கும் போது உங்களுக்கும் தலை தீபாவளி கொண்டாடனும்னு ஒரு ஆர்வமும், ஆசையும், ஏக்கமும் மனதில் கண்டிப்பாக இருக்க தான் செய்யும். நீங்க அதுக்கு எல்லாம் ஒன்னும் கவலைப்படாதீங்க. கண்டிப்பா அடுத்த வருஷமோ, இல்ல அதுக்கு அடுத்த வருஷமோ நீங்களும் தலை தீபாவளி கொண்டாட தானே போறீங்க....!

சரி, கல்யாணம் ஆகாதவங்களுக்கு தான், இப்படி ஒரு ஆசைனா.. கல்யாணம் ஆகி தலை தீபாவளி கொண்டாடுனவங்களுக்கோ, ஆஹா எனது தலை தீபாவளி அனுபவம் என்படி இருந்தது... எனவோ, ஐயோ காலைலயே எழுந்து தலைக்கு எல்லாம் குளிக்க வைச்சு பாடாய் படுத்திட்டாங்கப்பா என்று காமெடியாக சொல்பவர்களும் ஒன்று... எது எப்படியோ உங்களுக்கு இந்த கட்டுரையை படிக்கும் போது உங்க தலை தீபாவளி பற்றிய கற்பனையோ.. நினைவுகளோ வருவது நிச்சயம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் வீட்டில்..!

பெண் வீட்டில்..!

திருமணமாகி முதல் ஆண்டில் வரும் தீபாவளியே தலை தீபாவளியாக தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது! திருமணத்திற்குப் பின்னர் வரும் அனைத்து பண்டிகைகளும் மணமகனின் வீட்டில் கொண்டாடப்பட்டாலும் இந்த தலை தீபாவளி மட்டும் மணமகள் வீட்டில் கொண்டாடப்படுவது மற்றுமொரு சிறப்பு.

அழைப்பு..!

அழைப்பு..!

புதிதாக மணமுடித்த மணமக்களை தீபாவளிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே பெண்ணின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குச் சென்று சீர் வரிசை (வெற்றிலை, பூ, பழங்கள், இனிப்புகள், ஆடைகள் ) வைத்து தலை தீபாவளி கொண்டாட வீட்டிற்கு வருமாறு அழைப்பர். அதன்படி மணமக்களும் தீபாவளிக்கு முன் தினமே பெண்ணின் வீட்டிற்குச் செல்வர்.

குளியல்

குளியல்

தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கு முன்பே எழுந்து அந்த பெண்ணும், அவளது கணவரும் எண்ணெய் வைத்து குளித்து முடித்து புத்தாடை அணிவர்.

தலை தீபாவளி..!

தலை தீபாவளி..!

பூஜைகள் செய்து, பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் இனிப்புகள் உண்டு மகிழ்வர். அவர்கள் ஜோடியாக பெண்ணின் குடும்பத்தாருடன் பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்வர். மணமக‌ன் த‌ன் மனை‌வி‌யி‌ன் குடு‌ம்ப‌த்தாருட‌ன் ‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடுவதுதா‌ன் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தலை தீபாவளி.

உறவுகள்

உறவுகள்

பெண் எடுத்த வீட்டில் மணமகனும் ஒரு அங்கத்தினர் தான் என்பதை கூறும் வகையிலும், பெண்ணை தங்கள் வீட்டிற்கு அனுப்பிய சம்பந்தி வீட்டிற்கு தீபாவளி அன்று தனது மகனை உங்களது மகனாக ஏற்றுக் கொள்ளும்படியாக அனுப்பி வைத்து பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் உறவு பாராட்டிக் கொள்வதும் இந்த தலை தீபாவளியின் வழக்கமாகும்.

தலை பொங்கல்

தலை பொங்கல்

தமிழ்நாட்டின் ஒரு சில மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை ஆகியவற்றில் தலை பொங்கலும் கொண்டாடப்படுவது வழக்கம்.

நரகாசுரன் கதை

நரகாசுரன் கதை

இரண்யாட்ச‍‌‍‌ன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வெனறார்.அப்போ து பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.

போர்

போர்

பிற்காலத்தில் நரகர் எனப்படும் மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி பணித்தார்.

நடிப்பு

நடிப்பு

நரகாசுரன் உடன் நடந்த சண்டையில் கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும் கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும். ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப் படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்கள்.

அசைவம்

அசைவம்

தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவது தான் சிறப்பானதாக இருக்கும்.

குளியல்

குளியல்

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்) செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

உடைகள்

உடைகள்

தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளி இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

புனித நீராடல்

புனித நீராடல்

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

வேடந்தாங்கல்

வேடந்தாங்கல்

தீபஒளித் திருநாளன்று பட்டாசு, மத்தாப்பூ கொளுத்துவது மக்களின் வாடிக்கை. ஆனால் பறவைகளின் நலன் கருதி வேடந்தாங்கல் உள்ளிட்ட சரணாலயப் பகுதிகளில் வாழும் மக்கள் அவ்வழக்கத்தை தடை செய்து பட்டாசு இல்லா திருநாளாகக் கொண்டாடி வருகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to celebrate first Diwali after marriage

How to celebrate first Diwali after marriage
Story first published: Thursday, October 12, 2017, 14:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more